Published:Updated:

புறா... பற... பற!

புறா... பற... பற!

##~##

'ஆனாலும் மன்னரே... கொழுகொழு என்று இருக்கிறது என்பதற்காக எதிரி மன்னன் தூதுவிட்ட புறாவை வறுத்தா உண்பது?’ - இம்சை அரசனை டர் ஆக்கிய புறாவுக்கு,  அரசர்கள் காலத்தில் செல்போன் முக்கியத்துவம்! அன்று தூதுக்குப் பயன்பட்ட புறாக் கள்... இன்று பந்தயத்துக்கு உபயோகமாக இருக்கின்றன!

 கோவையில் புறாப் பந்தயம் ரொம்பவே பிரபலம்.  கோவை பந்தயப் புறா சங்கம் டெல்லி வரைகூடபந்தயப் புறாக்களைப் பறக்க வைக்கிறது.

புறா... பற... பற!

''புறாக்களில் ஹோமர் என்கிற ரகம்தான் பந்தயத் துக்கு ஏற்றது. அந்த ரக புறாக்களை குஞ்சுப் பருவத்தி லேயே வாங்கணும். பரம்பரை, பரம்பரையாக, பந்தயத் தில் வெற்றி பெற்ற புறாக்களின் வாரிசுகளுக்குத்திறமை அதிகம் இருக்கும். கூடவே, அந்தக் குஞ்சுகளோட கண்களையும் கவனிச்சுத் தேர்வு செய்வாங்க.  

புறா... பற... பற!

40 நாளில் புறாக் குஞ்சுகளுக்கு ஓரளவு சிறகு முளைச்சிடும். உடனே அதைக் கூண்டுக்கு மேலே தூக்கிவெச்சு சுற்றுப்புறத்தை நல்லா கவனிக்க வைக்கணும். தலையை 'வெடுக்..வெடுக்’னு திருப்பி பக்கத்தில் இருக்கிற இடம், பொருள்கள் எல்லாத்தையும் அந்தப் புறா நல்லா கவனிச்சு மனசில் பதியவெச்சுக்கும். கொஞ்ச நாளில் வீட்டுக்கு மேலேயும், அப்புறம் படிப்படியாக அந்த ஏரியாவுலயும் சுமார் 10 கி.மீ. தூரத்துக்குப் பறக்கவிடணும். இதனால் அந்தப் புறாவோட மனசில் சுற்றுவட்டாரம் நல்லாப் பதிஞ்சிடும்.

அப்புறமா, அந்தப் புறாவை இன்னும் சில கி.மீ. தூரத்துக்குக் கூண்டுல வெச்சு தூக்கிட்டுப் போய் பறக்க விடுவோம். அந்தப் புறா, தன் இருப்பிடத்தை சரியாத் தேடி கண்டுபிடிச்சு வரணும். அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ள வரணும். அப்படி வந்தாதான் அது பந்தயப் புறா. இல்லைன்னா அது பந்தயத் துக்குத் தகுதி இல்லை. இப்படி தூரத்தின் அளவை அதிகரிச்சிக்கிட்டே போய் ஆறு மாதங்கள் பயிற்சி கொடுப்போம். அதுக்கப்புறம் அந்தப் புறா சும்மா கில்லியா பந்தயத்துக்குத் தயாராகிடும்.

புறா... பற... பற!

கோவையில் இருந்து சேலம், பெங்களூரு, வேலூர், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களுக்கு புறாக்களைப் பந்தயத்துக்கு விடுவோம். பறக்க விடுறதுக்கு முன்னாடி போட்டியாளர்கள் நேரத்தைக் குறிச்சி  வெச்சிப்பாங்க. பந்தயத்துல போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு அந்தப் புறா போய்ச் சேர்ந்ததான்னு கண்காணிக்க வெளியூரிலும் எங்க ஆட்கள் இருப்பாங்க. அங்க சில நொடிகள் மட்டுமே இளைப்பாறுகிற புறா, திரும்பவும் தன்னோட இருப்பிடத்துக்கே நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள்ள வந்து சேரணும். அப்படி முதலில் வந்து சேர்ற புறாதான், 'வெற்றிப் புறா’!'' என்று  பெருமிதமாகக் கதை சொல்கிறார் அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன்!

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

அடுத்த கட்டுரைக்கு