Published:Updated:

அனுமார் இதயத்துக்குள் நுழையலாமா?

அனுமார் இதயத்துக்குள் நுழையலாமா?

அனுமார் இதயத்துக்குள் நுழையலாமா?

அனுமார் இதயத்துக்குள் நுழையலாமா?

Published:Updated:
##~##

காபலிபுரத்தில் ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு என்று கல் சிற்பங்களால் பல்லவர்கள் மகாபாரதக் கதை சொல்லி இருப்பார்கள். அதற்கு சவால்விடுவது போல, கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் நவீனச் சிற்பங்களால் ராமாயணக் காட்சிகளை விளக்குகிறது ராமாயணப் பூங்கா. ராமகிருஷ்ண மடத்தினர் பராமரிக்கும் பூங்காவில்தான் இந்த  இதிகாச ஈர்ப்பு!

ஓய்வு நேரத்தை மனசுக்கு இதமாகக் கழிக்க  துடி யலூர், காரமடை பகுதி மக்கள் தேர்ந்தெடுக்கும் இடம் இந்தப் பூங்காதான். உள்ளே நுழைந்ததுமே இதமாக ஒலித்துக்கொண்டு இருக்கும் ராமர் புகழ் பாடும் பாடல்கள் மிதமான இசையுடன் வரவேற்கின்றன.  பூங்காவின் நுழைவு வாயிலே  அனுமர் நெஞ்சைப் பிளந்து இருப்பதுபோல வரவேற்கிறது. அனுமனின் நெஞ்சுக்குள் நின்று போட்டோ எடுத்துக்கொள்ள இங்கே எக்கச்சக்க போட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுமார் இதயத்துக்குள் நுழையலாமா?

அனுமனின் இதயத்துக்குள் நுழைந்து உள்ளே சென்றால் தொட்டில் விளையாட ஏழு தலை பாம்பு அழைக்கிறது! அடுத்து தசரதன் குழந்தை வேண்டி யாகம் செய்வதுபோல, ராட்டினத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தாடகை என்ற அரக்கியின் உருவத்தில் குழந்தைகளுக்கான சறுக்கு மர விளையாட்டு. தாடகையை ராமரும் லட்சுமணரும் வதம் செய்த காட்சியை இது குறிக்கிறது.

சீதையின் சுயம்வர நிகழ்ச்சியை விளக்க, வில் போன்ற சாதனத்தை அமைத்து உள்ளார்கள். தலைக்கு மேல் இருக்கும் இந்த வில்லின் கைப்பிடியைப் பிடித்து குழந்தைகள் தொங்குகிறார்கள். உடனே, வில் முறிவதுபோல இரண்டாகப் பிளக்கிறது. அருகில் உள்ள படகில் அமர்ந்து குழந்தைகள் துடுப்புப் போடு கிறார்கள். இது ராமர், சீதை மற்றும் லட்சுமணன் வனவாசம் செல்லும் காட்சியைக் குறிக்கிறதாம். வனவாசத்தின்போது சீதைக்கு லட்சுமணன் போட்ட கோட்டை மறக்க முடியாது. அதைக் குறிப்பிடும் விதத்தில் போடப்பட்டு உள்ள வட்டமான டிராக்கில் குழந்தைகள் சைக்கிள் ஓட்டுகிறார்கள்!

அனுமார் இதயத்துக்குள் நுழையலாமா?

இந்திரன் கொடுத்த சாபத்தால் கபந்தன் என்ற அரக்கனுக்கு விகாரமான முகம் ஏற்பட் டது. ராமர், லட்சுமணர் அவன் கையைத் துண்டித்து சாப விமோசனம் கொடுத்த பின்பு, அவன் பழையபடி அழகிய உருவம் பெற்றான் என்பது புராணக் கதை. இதை உணர்த்தும் வகையில் கபந்தன் உருவத்தில் குகை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. ராமனுக்கு உதவிய வானர அரசன் சுக்ரீவன், ரிஷிமுக பர்வதத்தில் தன் அண்ணன் வாலிக்குப் பயந்து வாழ்ந்தார். அதைச் சறுக்கு விளையாட்டு வடிவில் சிற்பங்களாக அமைத்து உள்ளனர். ராவணன் எங்கே இருக்கிறான் என்று வானரங்களுக்குச் சொன்னது ஜடாயுவின் சகோதரன் சம்பாதி. கழுகு போன்ற வடிவில் உள்ள இந்த விளையாட்டில், அதன் சிறகைப் பிடித்து ஏறுவதுபோல் அமைக்கப்பட்டு உள்ளது.

அனுமன், சுரசை என்னும் அரக்கியின் வாயில் நுழைந்து தப்பும் காட்சியை உணர்த்தும் வகையில் குழந்தைகள் அரக்கியின் வாயில் நுழைந்து வரும் குகை, தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளது. ஜடாயுவை நினைவூட்டுவதுபோல இருக்கும் கழுகின் சிறகுகளில் உற்சாகமாகத் தொங்குகிறார்கள் சிறுவர்கள். சீசாப் பலகை விளையாட்டில் பலகையின் ஒரு முனையில் பரதனும் இன்னொரு முனையில் ராமரின் காலணியும் வைக்கப்பட்டு உள்ளன. இப்படிச் சிற்பங்கள் மட்டும் அல்ல; ஒவ்வொரு சிற்பத்தின் அருகிலும் அதன் புராண நிகழ்வுகளை விளக் கும் வகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் குறிப்புகள் உண்டு.

அனுமார் இதயத்துக்குள் நுழையலாமா?

ஜூனியர்கள் மட்டுமல்ல; ராமாயண இதி காசம் தெரிந்துகொள்ள விரும்பும் சீனியர்களும் அவசியம் வருகை தர வேண்டிய இடம் இந்த ராமாயண பூங்கா!

ம.பிருந்தா, படங்கள்: வி.ராஜேஷ், இரா.கலைச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism