Published:Updated:

பாப்பா எம்.பி.பி.எஸ்!

பாப்பா எம்.பி.பி.எஸ்!

பாப்பா எம்.பி.பி.எஸ்!

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு 55 வயது பாப்பாதான் கண் டாக்டர். கண்ணில் தூசு விழுந்தால், உறுத்தல் இருந்தால் விளக்கெண்ணெய் மூலம் அதை எடுத்துவிடுகிறார் பாப்பா.

''ஏழு வருஷமா தூசி எடுத்துட்டு இருக்கேன். என் மாமியார்கிட்ட இந்த வேலையைக் கத்துக்கிட்டேன். சுத்திலும் கிராமங்கள்தானே... ராவுல நிறையப் பேருக்கு கண்ல சுண்ணாம்பு, காரை, பூச்சிப் பொட்டு விழுந்துடும். அவசரத்துக்கு ஆஸ்பத்திரிக்குப் போக முடியாம என்னைத் தேடி வருவாங்க. விளக்கெண்ணெய் மூலமா எந்தக் கசடா இருந்தாலும் எடுத்துடுவேன். 'இம்புட்டு காசு கொடுங்க’ன்னு நான் கேக்குறதுஇல்லை. அவங்களாக் கொடுக்குறதை வாங்கிப்பேன். தூசி எடுக்குறது மட்டும் இல்லாம, குழந்தைகளுக்குக் குடல் இறக்கம், பெரியவங்களுக்கு ஆழமா தைச்ச முள்ளை எடுப்பேன். இதனால் கூடலூர், குமுளி, வத்தலக்குண்டு, அகமலை, கன்னக்கரைன்னு வெளியூர்ல இருந்து எல்லாம் என்னைத் தேடி ஆள் வர்றாங்க. நம்மளால நாலு பேருக்குச் சந்தோஷம்னா நல்லதுதானே ராசா!''- சிரிக்கிறார் பாப்பா.

- தி.முத்துராஜ்

அடுத்த கட்டுரைக்கு