Published:Updated:

ராதாகிருஷ்ணன் வயது 100

ராதாகிருஷ்ணன் வயது 100

ராதாகிருஷ்ணன் வயது 100

ராதாகிருஷ்ணன் வயது 100

Published:Updated:
##~##

கவை எண்பதைத் தொட்டவர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்ட இந்நாட்களில், தனது 100-வது பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடி அசத்தி இருக்கிறார் ராதாகிருஷ்ணன். வயோதி கத்தில் வழித் தொல்லையாக வந்து ஒட்டிக் கொள்ளும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு... இந்த இம்சைகள் எதுவும் இவரை தொட்டுக்கூட பார்க்கவில்லை என்பது இன்னும் ஒரு ஆச்சர்யம்!

காரைக்குடி பர்மா காலனியில் வசிக்கும் ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினோம். ''என் பிறந்த தேதி 21.6.1911. அப்ப இண்டியன் ரயில்வே 'சௌத் இந்தியன் ரயில்வே’ன்னு வெள்ளைக்கார கம்பெனியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராதாகிருஷ்ணன் வயது 100

இருந்துச்சு. அதில் 1938-ல் மாசம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கிளார்க்காக வேலைக்குச் சேர்ந்தேன். படிப்படியா முன்னேறி 1978-ல் திருச்சி டிவிஷனுக்கான ஸ்டேஷன் சூப்பரின்டென்டா இருந்து ரிட்டையர் ஆனேன். 38 வருஷம்தான் சர்வீஸ். ஆனா, என்னோட பணி நேர்மையை பாராட்டி, மேலும் ரெண்டு வருஷம் பணி நீட் டிப்பு கொடுத்தாங்க. ஆக மொத்தம் 40 வருஷம். சாதாரணமா 15, 20 வருஷத்துக்கு மேல யாரும் பென்ஷன் வாங்குறது இல்லை. நான் 33 வருஷமா வாங்கிட்டு இருக்கேன். இன்னும் எனக்காக டிரெயின் வரலை!'' ஜாலியாகச் சிரிக்கிறார் தாத்தா.

ராதாகிருஷ்ணன் வயது 100

மாணவப் பருவத்தில் பெரியாரின் தொண்டராக இருந்த ராதாகிருஷ்ணன், அக் காலத்தில் பெரியாரைப் பாதுகாக்கும் தொண்டர் படையில் இருந்து கல்லெறி எல்லாம் வாங்கி இருக்கிறார். ''அப்போலாம் வீட்ல காசு திருடி 'விடுதலை’ பத்திரிகையை வாங்கிப் படிப்பேன். எனக்கு பிறந்த நாள் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை. 'தாத்தாவுக்கு வயசு 100 ஆகிருச்சுய்யா’ன்னு பேரன் துரை ஆனந்த்கிட்ட பேச்சுக்குச் சொன்னேன். அவனுக்குச் சந் தோஷம் தாங்கலை. உடனே விழாவுக்கு ஏற்பாடு பண்ணிட்டான். நாங்களா யாரையும் கூப்பிடலை. ஆனா, போஸ்டரைப் பார்த்துட்டு பல பேர் வந்துட்டாங்க!'' குழந்தையின் குதூகலத்தோடு சிரிக்கிறார் தாத்தா.

இவரது மனைவி சொர்ணவள்ளிக்கும் இப்போது வயது 88. இவரும் பெரியாரின் தொண்டர்தான். திருமணமான இரண்டாவது வருஷமே தனது தாலிக் கொடியை அறுத்து பெரியார் கையில் கொடுத்த புரட்சிப் பெண் மணி. ''புருஷனோட உசுரு ரெண்டு கிராம் தாலியிலதான் இருக்குனு அப்பாவிப் பெண் கள் நம்பிக்கிட்டு இருக்காங்க. எங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை. அதனால் தாலியை அறுத்து ஐயா கையில குடுத்துட்டேன்!'' என்று சிரிக்கிறார் சொர்ணவள்ளி.

ராதாகிருஷ்ணன் வயது 100

''உங்களை மாதிரி 100 வயசுலேயும் ஆரோக்கியமா வாழ்றதுக்கு  டிப்ஸ் கொடுங்க!'' என்று ராதா கிருஷ்ணனை கேட்டோம்.

ராதாகிருஷ்ணன் வயது 100

''வயோதிக சோர்வும் லேசான பார்வைக் கோளாறும் தவிர, எனக்கு வியாதி எதுவும் இல்லை. இப்போ வரைக்கும் நானே நடந்து போய் பூத்ல பால் வாங்கிட்டு வர்றேன். நானும் இவளும் சேர்ந்துதான் சமையல் பண்றோம். இதுக்கு எல்லாம் காரணம் அந்தக் காலத்தில் சாப்பிட்ட ஆரோக்கியமான சாப்பாடு. இன்னொரு காரணம் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆரோக்கிய உணவும் நல்ல பழக்கமும் இருந்தால் எல்லாருமே 100 வயசு வரை வாழலாம்!'' பளிச் என்று சிரிக்கிறார் ராதாகிருஷ்ணன் தாத்தா!

- குள.சண்முகசுந்தரம், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism