Published:Updated:

ரூம் பாய் டு பிசினஸ்மேன்!

ரூம் பாய் டு பிசினஸ்மேன்!

ரூம் பாய் டு பிசினஸ்மேன்!

ரூம் பாய் டு பிசினஸ்மேன்!

Published:Updated:
##~##

ரு லாட்ஜில் ரூம் பாயாக இருந்தவர், இந்தி கற்றுக்கொண்டதால் இப்போது பட்டாசு வியாபாரத்தில் கோடிகளில் பிசினஸ் பேசிக் கொண்டு இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?  ராஜேஷைச் சந்தியுங்கள்...

கோவையில் தனியார் மில்லில் வேலை செய்துகொண்டு இருந் தவர் ராஜேஷின் தந்தை ராஜாராம். மனைவி விஜயலட்சுமி, இரண்டு மகள்கள், ராஜேஷ் என மொத்தக் குடும்பத்துக்கும் ஆதாரம் ராஜா ராமின் சம்பளம்தான். திடீர் என ராஜாராமுக்கு வேலை போய் விட, சிவகாசிக்கு இடம் பெயர்ந்தார் அவர். விஜயலட்சுமியின் நகைகளை விற்று சிவகாசியில் மளிகைக் கடையை ஆரம்பித்தார்.  வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கிய நிலையில் கடன் சுமை அழுத்த, கடையை பூட்டிவிட்டார்கள். மூன்று குழந்தைகளின் படிப்பை நிறுத்திய ராஜாராம், ராஜேஷ§டன் சேர்ந்து தெருத்தெருவாக லாட்டரிச் சீட்டுகள் விற்க ஆரம்பித்தார். அதில் சொற்ப வருமானமே கிடைக்க, சிவகாசியில் உள்ள நாடார் லாட்ஜில் ராஜேஷை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரூம் பாய் டு பிசினஸ்மேன்!

150 சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்த்துவிட்டார். அந்தச் சூழலில் ராஜேஷ் எடுத்த புத்திசாலித்தனமான ஒரு முடிவுதான் அவரது முன்னேற்றத்தின் முதல்படி ஆனது.

ரூம் பாய் டு பிசினஸ்மேன்!

''சிவகாசியில் பட்டாசு, பிரின்ட்டிங் ஆர்டர் கொடுப்பதற்கு நிறைய வட மாநில வியாபாரிகள் வந்து தங்குவாங்க. அவர்களோடு பழகிப் பழகி இந்தி பேச கத்துக்கிட்டேன். வடமாநில வியாபாரிகளுக்கு உள்ளூர் பட்டாசு ஏஜென்ட்டுகள் பட்டாசு கொள்முதல் செய்து பணம் சம்பாதிப்பாங்க. அவங்க எந்த மாதிரி பிசினஸ் டீல் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். மகாராஷ்டிரா மாநிலம் அக்கோலாவைச் சேர்ந்த சாம்பாய் என்ற வியாபாரி, நாடார் லாட்ஜ்லதான் வந்து தங்குவார். அவர்கிட்டே பட்டாசு கொள்முதல் பண்ணித் தர்றேன்னு சொன்னேன். அவர் சரின்னு சொன்னார். அஞ்சாயிரம் ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்தார் சாம்பாய். நான் அலைஞ்சு திரிஞ்சு நல்ல பட்டாசுகளா வாங்கிக் கொடுத் தேன். எனக்கு 500 ரூபாய் கமிஷன் கிடைச்சது. தீபாவளி சீஸனுக்குப் பட்டாசு வாங்குறதுக்காக நிறைய வியாபாரிங்க வந்தாங்க. 'நான் பட்டாசு வாங்கித் தர்றேன்’னு இந்தியில் பேசி வாய்ப்பு கேட்டேன். புரோக்கர் இல்லாம நேரடியா பேசி னதால நிறைய வாய்ப்பு கிடைச்சது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா  டெவலப் பண்ணி மகா ராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரி யானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர்னு 11 மாநிலங் களில் 200 வாடிக்கையாளர்களைப் பிடிச்சேன். ஒரு சைக்கிள் வாங்க முடியுமான்னு ஏங்கிட்டு இருந்தேன். இப்போ ஃப்ளைட்ல போய் ஆர்டர் எடுத்துட்டு வர்றேன்.

ரூம் பாய் டு பிசினஸ்மேன்!

'உன் வாழ்க்கை உன் கையில்’னு சொல்றது சும்மா இல்லண்ணே! என்னைக் கேட்டா, முதல்ல ஒரு மனுசன் தோக்கணும். அப்போதான் அவனால் ஜெயிக்க முடியும். தோக்கும்போதுதான் அடுத்த ஒவ்வொரு அடியையும் கவனமா எடுத்துவைப்பான். இப்போ என்னால முடிஞ்ச அளவுக்கு தொழில் தொடங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கும் திறமைசாலிகளுக்கு உதவி செஞ்சுட்டு இருக்கேன். புதுசா ஒரு பட்டாசு தொழிற்சாலை தொடங்கும் முயற்சியிலும் இருக்கேன். எப்பவும் பழசை மறக்கக் கூடாது. அதனால் பட்டாசு தொழிற்சாலைக்கு 'ரூம்பாய்’னு பேர் வைக்கப் போறேன்!'' நம்பிக்கைப் புன்னகை தவழ்கிறது ராஜேஷின் இதழ்களில்!  

- எம்.கார்த்தி, படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism