Published:Updated:

இவர்கள் கடவுளின் குழந்தைகள்!

இவர்கள் கடவுளின் குழந்தைகள்!

##~##

லகம் என்றால் என்ன என்று அறிந்துகொள்ள முடியாதவர்களின் உலகம் அது!

 திருவண்ணாமலை ரங்கம்மாள் சிறப்பு குழந்தைகள் பள்ளி - மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி. இங்கிலாந்தில் இருந்து இங்கு வந்து எட்டு ஆண்டு களாக இந்தப் பள்ளியை நடத்தி வருபவர் சில்வியா ரைட். மாணவர்களின் படிப்பு, உணவு, மருத்துவம் என்று எந்தத் தேவைக்கும் பெற்றோரிடம் இருந்து ஒரு ரூபாய்கூட வசூலிக்கப்படுவது இல்லை என்பதே இந்தப் பள்ளியின் சிறப்பு!

மொத்தம் உள்ள 90 குழந்தைகளையும் அவரவர் வீடுகளுக்கே சென்று அழைத்து வருகிறார்கள் பள்ளிப் பணியாளர்கள். காலை உணவு உண்ணாமல் வரும் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி, வழிபாடு முடித்து வகுப் பறைகளுக்கு அழைத்துச் செல் கின்றனர். மூன்று மணி நேரம் பாடம் நடத்தியதும், மதிய உணவை ஊட்டு கிறார்கள் ஆசிரியைகள். பின்பு, மதியம் முழுக்க கதை சொல்லல், பிசியோதெரபி, இசை என்று பல வகைப் பயிற்சிகள்.

இவர்கள் கடவுளின் குழந்தைகள்!

''இந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கு நாங்கள் அடிக்கடி சொல்வது, 'இவர்களை நோயாளி களாகப் பார்க்காதீர்கள். மற்ற குழந்தைகளிடம் இருந்து இவர்கள் வேறுபட்டவர்கள் என்று மட்டுமே பாருங்கள்’ என்பதே!'' என்று ஒரே குர லில் கூறுகிறார்கள் பிசியோதெரபி ஆசிரியைகளான தமிழ்ச்செல்வி மற்றும் உமா.

''தொடர்ச்சியான பயிற்சிகளின் மூலம் இவர் களைச் சுயமரியாதை உள்ளவர்களாகவும் தைரி யமும் தன்னம்பிக்கைகொண்டவர்களாகவும் மாற்றுவதுதான் முக்கியமானது. அவர்களை நோயாளிகளாக நினைத்து நடத்தும்போது, அவர்களின் பிரச்னை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும்.

இவர்கள் கடவுளின் குழந்தைகள்!

கருக் கலைப்பு முயற்சிகள், நெருங்கிய   சொந்தத்தில் திருமணம், அடிக்கடி எக்ஸ் ரே எடுத்தல் என்று இத்தகைய குழந்தைகளின் பிறப் புக்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால், சிறப்புக் குழந்தைகளாக இருக்கும் இவர்கள் அனைவரையும் 'மூளை வளர்ச்சி குன்றியவர்கள்’  என்று சொல்ல முடியாது. ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், மூளை முடக்குவாதம்  என்று இவற்றில் பல வகைகள் உண்டு. ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் மற்றவர்கள் சொன்னதைக் கேட்கவே மாட்டார்கள். முறையான பயிற்சிகள் மூலம் இதைச் சரிசெய்ய முடியும். டவுன் சிண்ட்ரோம் என்பது, குரோமோசோமில் ஏற்படும் மாற்றங்கள். சரியான வளர்ச்சி  இல்லாமல் இருக்கும் இவர்களின் பாசம் நம்மை நெகிழவைக்கும். இப்படிப் பல்வேறு நிலைகள் உள்ளன. மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டும்தான் முழு

இவர்கள் கடவுளின் குழந்தைகள்!

நேரப் பள்ளி. மற்றவர்களுக்கு ஒரு மணி நேரப் பயிற்சிதான். எங்கள் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும், முக்கியமாகப் பெற்றோரின் செல்போன் எண், வீட்டு முகவரி போன்றவற்றை சொல்லித் தருகிறோம்!'' என்கிறார் பள்ளியின் மூத்த ஆசிரியையான புஷ்பா.                    

தாயினும் சாலப் பரிந்து இந்தக் குழந்தைகளிடம் இவர்கள் காட்டும் உருக்கமும் குழந்தைகள் ஆசிரியைகளிடம் காட்டும் நெருக்கமும் நம் இதயத்தை நெகிழச் செய்கின்றன!

- யா.நபீசா

அடுத்த கட்டுரைக்கு