Published:Updated:

பொறாமையா இருக்கு சாமீயோவ்!

பொறாமையா இருக்கு சாமீயோவ்!

பொறாமையா இருக்கு சாமீயோவ்!

பொறாமையா இருக்கு சாமீயோவ்!

Published:Updated:
##~##

'சாமீயோவ்...’ என்று நீட்டி முழக்கிய உச்சரிப்பு, கழுத்தில் பாசி மாலை, இடுப்பு வரை தொங்கும் டால்டா டின், காரை படிந்த பற்கள் - இவைதான் நரிக்குறவர்கள் குறித்த சினிமா சித்திரிப்புகள். ஆனால், உண்மையில் இவர்களின் அன்றாட வாழ்க்கைதான் என்ன?

 விழுப்புரம் அருகே உள்ள ஆசாகுளத்தில் ஆஜர் ஆனோம். இங்கு மொத்தம் ஐந்து தெருக்களில் வாழ்கிறார்கள் நரிக்குறவர்கள். காலையில் பெண்கள் பின்னி முடித்த பாசி மாலைகளுடன் விற்பனைக்கு வெளியில் கிளம்பிவிடுகின்றனர். ஆண் களோ, வேட்டைக்குக் கிளம்பி கொக்கு, நாரை, நீர்க் கோழி, முயல் என்று விதவிதமாக வேட்டை யாடி, மாலை வீட்டுக்குக் கொண்டுவந்து சமைத்து உண்கிறார்கள். பாதிக்கும் மேற்பட்ட வர்கள் பகலில் வெளியில் சென்றுவிடுவதால், காலையும் மதியமும் சமையல் இல்லை. ஒருவேளைதான் சமையல் என்றாலும், கண்டிப்பாக அது அசைவம்தான். குழம்பு கிடையாது. வறுத்த கறியின் மசாலாவைச் சோற்றில் பிசைந்து சாப்பிடுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொறாமையா இருக்கு சாமீயோவ்!

''எங்க பாஷைக்கு இன்னும் எழுத்து கண்டுபிடிக்கலை. அப்பாவை 'பா’ன்னு கூப்பிடுவோம். அம்மாவை 'ஆயா’ன்னு கூப்பிடுவோம்!'' என்கிறார் விஜய். ''துளசி மாலை, ருத்திராட்சம், கல்லு மணி, டிஸ்கோ மணி, நவரத்ன மாலை, டிஸ்கோ மணின்னு விதவிதமா மாலைகள் தயாரிப்போம்!'' என்கிறார் சினேகா.

''எங்கள்ல யாருக்காவது குழந்தை பொறந்தா, நீங்க ஸ்வீட்ஸ் கொடுக்கிற மாதிரி, நாங்களும் சுக்கு, அரிசி மாவோட வெல்லம் கலந்து உருண்டை தயாரிச்சு எல்லாருக்கும் கொடுப் போம்!'' என்கிறார் கன்னியப்பன்.

பொறாமையா இருக்கு சாமீயோவ்!

''எங்க பொண்ணுங்க வயசுக்கு வந்தவுடனேயே 'இவளுக்கு இவன்தான்’னு பரிசம் போட்டுரு வோம். அப்புறம் ரெண்டு, மூணு மாசம் கழிச்சுதான் கல்யாணம் செஞ்சுவைப்போம். கல்யாணம்னா, நாலு நாள் திருவிழா. டிஸ்கோ கறுப்பு மணியில மாலை செஞ்சி, அதில் கொஞ்சம் தங்கமும் வெச்சிருப்போம். அதுதான் தாலி. அதே மாதிரி பொண்ணு வயசுக்கு வந்து மூணு நாள் கழிஞ்ச பின்பு வயித்துல பழம், சாக்லேட் இதெல்லாம் கட்டி, இங்கே இருக்கிற அஞ்சு தெருவுலயும் உள்ள கோயிலுக்குப் போகச் சொல்லுவோம். அதுக்குப் பிறகுதான் தீட்டு கழிஞ்சதா அர்த்தம். யாரோட கணவராவது, மனைவியாவது செத்துட்டா, உடனே அவங்க சம்மதத்தோட வேறு திருமணம் செஞ்சிவெச்சிடு வோம். யாருமே தனியா இருக்கக் கூடாதுங்கிறதுதான் எங்க எண்ணம்!'' என்கிறார் மூத்த நரிக்குறவரான முனுசாமி.

இவர்களில் சாதிப் பாகுபாடு கிடையாது. ஆனால், வழிபடும் தெய்வங்களின் அடிப்படையில் இரண்டு விதமான பிரிவுகள் உள்ளன. ஒன்று காளி. மற்றொன்று துர்க்கை. காளியைக் கும்பிடுபவர்கள் ஆடு பலி கொடுப் பார்கள். துர்க்கையை வணங்குபவர்கள் எருமையைப் பலி கொடுப்பார்கள். ஆடு வெட்டுகிற பிரிவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பங்காளிகள். இதேபோல் எருமை வெட்டுபவர்கள் அனைவரும் பங்காளிகள். இதனால், ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்வது இல்லை. மாற்றுப் பிரிவைச் சேர்ந்தவர்களிடமே மண உறவு.

பொறாமையா இருக்கு சாமீயோவ்!

ஏமாற்று, திருட்டு, பாலியல் பலாத்காரம் என்று 'நாகரிக’ மனிதர்களின் வாழ்வியல் கறை படியாத நரிக்குறவர்களைப் பார்க்கும்போது... பொறாமையாத்தான் இருக்குது சாமீயோவ்!

- பா.அற்புதராஜ், படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism