Published:Updated:

பன்னீர்செல்வத்தின் அடுத்த மூவ்! மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பன்னீர்செல்வத்தின் அடுத்த மூவ்! மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை!
பன்னீர்செல்வத்தின் அடுத்த மூவ்! மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை!

பன்னீர்செல்வத்தின் அடுத்த மூவ்! மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை!

பன்னீர்செல்வத்தின் அடுத்த மூவ்! மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராகப் பேசினார் பன்னீர்செல்வம். இதைத் தொடர்ந்து, பன்னீர் அணி - சசிகலா அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதைத் தொடர்ந்து சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், பழனிசாமி வெற்றிபெற்றார். ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அவருக்குக் கிடைத்தது. இதனிடையே, எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மூத்த நிர்வாகிகளுடன் பன்னீர்செல்வம் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் இல்லத்தில் நடைபெற்றுவரும் ஆலோசனைக் கூட்டத்தில் மதுசூதனன், மைத்ரேயன், மாஃபா பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன், முனுசாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில், தமிழகம் முழுவதும் மக்களைச் சந்திக்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு