
கால்களால் கின்னஸ் சாதனை படைத்த மெக்ஸிகோ பெண்!

இரண்டு கைகள் இல்லாவிட்டால் என்ன, தன்னம்பிக்கை உள்ளது என்று நிரூபித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார், மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த அட்ரியானா ஐரீன் மாசியாஸ் ஹெர்னாண்டஸ் (Adriana Irene Macías Hernández). இவருக்கு, பிறக்கும்போதே கைகள் இல்லை. ஆனாலும் தன் வேலைகளைக் கால்கள் மூலமாகச் செய்ய பழகிக்கொண்டார். சமீபத்தில், கின்னஸ் ரெக்கார்டு சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஒரு நிமிடத்தில் 11 மெழுகுவத்திகளைத் தன் கால்களால் பற்றவைத்து, ரெக்கார்டு பிரேக் செய்துள்ளார்.
இதன்மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த அஷ்ரிதா ஃபர்மனின் (Ashrita Furman) சாதனையை முறியடித்துள்ளார் அட்ரியானா. இவர், சட்டப் படிப்பு முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.