
எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டின் நுழைவு வாயிலில் இருந்த அறிவிப்புப் பலகை 2 நாள்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.
தற்போது, பன்னீர்செல்வம், சென்னை பசுமைவெளிச்சாலையில் உள்ள அமைச்சர்களுக்கான இல்லத்தில் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்ததற்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இருப்பினும் அவர் தொடர்ந்து சென்னையிலேயே தங்கி வருகிறார். அவரைச் சந்திப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். எனவே, அவர் சென்னையிலேயே தொடர்ந்து தங்குவதற்கு முடிவு செய்துள்ளார். அதனால், அவர், சென்னையிலேயே வாடகைக்கு வீடு தேடி வருகிறார்.