Election bannerElection banner
Published:Updated:

நாசா ரிட்டர்ன்!

சென்னை மாணவியின் சாதனை

##~##

''புளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டர்ல நிக்கிறேன். கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்ப பயிற்சி அளித்த டாக்டர் ஏஞ்சல் அபூத் மேட்ரிட் என் பிரசன்டேஷனை பார்த்தார். ஒரு நிமிஷம் அமைதியா இருந்தவர், 'கல்பனா சாவ்லாவை திரும்ப உயிரோட பாக்குற மாதிரியே இருக்கு’னு சொல்லி கைகொடுத்து வாழ்த்தினார். அதோட கல்பனாவின் ஞாபகார்த்தமாக எனக்கு ஒரு பேட்ச் அணிவிச்சார். கல்பனா தவிர அவர் வேறு யாருக்கும் இதுபோன்ற பேட்ச் தந்தது இல்லையாம்!'' கொஞ்சம் தமிழ், நிறைய அறிவியல் கலந்து பேசுகிறார் ஜெயஸ்ரீ ஸ்ரீதர்.

 மிகச் சிறிய வயதில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான 'நாசா’வைத் தொட்ட முதல் இந்திய மாணவி. சென்னை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஏரோ ஸ்பேஸ் இன்ஜீனியரிங் மூன்றாமாண்டு படித்து வரும் ஜெயஸ்ரீ, இதுவரை நான்கு முறை நாசா சென்று வந்து இருக்கிறார்.

நாசா ரிட்டர்ன்!

''அப்பா ஸ்ரீதர் கப்பல் கேப்டன். அம்மா ஜெயலட்சுமி ஹோம் மேக்கர். நான் 9-வது படிக்கும் போது லண்டன் ராயல் அஸ்ட்ரனா மிகல் சொசைட்டி, நியூஸ் பேப்பர் டிசைனிங் போட்டி நடத்தியது. உலக

நாசா ரிட்டர்ன்!

அளவிலான அந்தப் போட்டியில் முதல் பரிசு ஜெயிச்சேன். சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய ஆய்வுக்கட்டுரைக்காக கொல்கத்தா- பிரிட்டிஷ் கவுன்சிலின் சர்வதே விருது என அடுத்தடுத்த பரிசுகளும், விருதுகளும் என் கவனத்தை ஆராய்ச்சிகள் பக்கம் திருப்பியது. ஒரு விளம்பரத்தில், 'நிலவு பற்றி மிகச் சிறப்பாக கட்டுரை எழுதும் 50 பேர் இஸ்ரோவில் ஆய்வு செய்யலாம்’ என்ற அறிவிப்பு. 4,000 பேர் கலந்துகொண்ட அந்தப் போட்டியின் பல கட்டத் தேர்வுகளில் தேறி, தேசிய அளவில் முதலிடம் பிடித்தேன். இஸ்ரோ சேர்மன் மாதவன் நாயரின் பாராட்டு ப்ளஸ் வாழ்த்துக்களுடன்  ஹைதராபாத்தில் நடந்த இன்டர்நேஷனல் அஸ்ட்ரோ நாடிகல் காங்கிரஸில் கலந்துகொண்டேன்.

அதில் சிறப்பு விருந்தினரா கலந்துகொண்ட அப்துல் கலாம், 'நான் சென்னையில் இருந்து வந்து இருக்கும்  ஜெயஸ்ரீ ஸ்ரீதரைச் சந்திக்கணும்’னு   சொல்லி என்னை வரச் சொன்னார். 'ஸ்பேஸ் டெக்னாலஜி, வானியல் அறிவியல் பற்றி நம் மக்களிடம் போதுமான விழிப்பு உணர்வு இல்லை. உன்னைப் போன்ற மாணவிகளால் மட்டுமே மக்களிடம் அதைப் பற்றிய விழிப்புஉணர்வை உண்டாக்க முடியும்’னு கலாம் சார் என்கிட்ட சொன்னப்போ அவ்வளவு உற் சாகமா இருந்தது.  

'மனிதர்கள் நிலவில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா?’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகளை  நாசாவுக்கு அனுப்பச் சொன்னார்கள். நானும் அனுப்பினேன். அந்தக் கட்டுரை அவர்களுக்குப் பிடித்துப்போக... என்னை நாசாவுக்கே வரவழைத்தனர். அப்படி இதுவரை நான்கு முறை நாசா சென்று வந்துள்ளேன். இதைத் தவிர அமெரிக்காவின் 'மூன் சொசைட்டி அட் வைஸரி போர்டு’ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையும் எனக்கு உண்டு!'' என்று சிரிக்கும் ஜெயஸ்ரீக்கு, நிலவு குறித்த ஆய்வுக்காக நோபல் பரிசு பெற வேண்டும் என்பதே லட்சியமாம்.

நிலவுப் பெண்ணுக்கு வாழ்த்துகள்!

க.நாகப்பன்

நாசா ரிட்டர்ன்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு