Election bannerElection banner
Published:Updated:

ஜோசியம் பாக்கலையோ ஜோசியம்!

ஜோசியம் பாக்கலையோ ஜோசியம்!

##~##

ந்திராயன் விடும் காலத்திலும் கிளி ஜோசியம், எலி ஜோசியம், கைரேகை, ஓலைச் சுவடி... என விதவிதமான ஜோதிடர்கள் முன்பு கூட்டம் குவியத் தான் செய்கிறது. ஒரே ஒரு நபருக்கு ஒவ்வொரு ஜோசியரும் எத்தனை விதமான  பலன்களை சொல்கிறார்கள் என்று அறிய ஆசைப்பட்டோம். கம்ப்‑யூட்டர் சர்வீஸ் தொழில் செய்யும் பாலமுருகன் என்ற நண்பர்தான் இந்த நாடகத்தின் நாயகன். திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உண்டு. இனி தொடங்குகிறது ஜோதிட விளையாட்டு.

தர்மபுரி புளிய மரத்தடியில் அரைத் தூக்கத்தில் அமர்ந்து இருந்தார் கைரேகை ஜோதிடர் தேவராஜன். கொஞ்சம் தயக்கத்துடன் கையை நீட்டினார் பாலமுருகன். அவரது உள்ளங்கையில் லேசாக எண்ணெ யைத் தடவி ஒரு வெள்ளைத் தாளில் அச்சு எடுத்தார் ஜோதிடர். பின்பு அதன் மேல் கறுப்பு நிற பவுடரைத் தூவி ரேகைகளைப் பதித்து, சில நிமிடங்கள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார்.

ஜோசியம் பாக்கலையோ ஜோசியம்!

''பாலமுருகன் இப்போதைக்கு எந்தத் தொழிலையும் திருப்தியா செய்ய முடியாம தவிப்பார். அவருக்கு செவ்வாய் தோஷம். அதனால்தான் கல்யாணம் கூடி வராம இருக்கு. திஸ் செவ்வாய் வில் கிவ் டூ லைன் ஆஃப் வொர்ரீஸ் அண்ட் ட்ராஜடீஸ். செவ்வாய்க்குப் பரிகாரப் பூஜை செஞ்சுட்டா ஆடி 29-ம்

ஜோசியம் பாக்கலையோ ஜோசியம்!

தேதிக்குள் கல்யாணம் கைகூடி வரும். 'ஆதி பந்தன பூஜை’ செஞ்சு தர்றேன். அதுக்கு

ஜோசியம் பாக்கலையோ ஜோசியம்!

1,000 வரை செலவு ஆகும்'' என்று அளந்துவிட்டவரிடம் இருந்து ஒருவழியாகத் தப்பித்து வந்தோம். அடுத்து ஓலைச் சுவடி ஜோதிடர் ராமகிருஷ்ணன். சுவடி கட்டுக்கு இடையில் ஓர் ஊசியைக் குத்தச் சொன்னவர், குத்திய இடத்தில் இருந்து எடுத்த சுவடியைக் காட்டி, ''உத்திர நட்சத்திரம், கன்னி ராசி. வீட்டுல பொண்டாட்டி கூட எப்பவும் சண்டை... சரியா? அண்ணன், தம்பிங்க உங்க சொத்தை ஏமாத்திட்டாங்க. அதுல ஒருத்தன் குடிகாரன். ஒரே தங்கச்சியும் வீட்டை விட்டு ஓடிப் போயிருச்சு. (பாலமுருகன் முகத்தில் பயங்கர கடுகடு...) பண்ணுன தொழிலும் படுத்திருக்கும். யாரோ செய்வினை செஞ்சு ரோட்டுல வீசுன தாயத்தை மிதிச்சதுதான் இந்தப் பிரச்னைக்கு எல்லாம் காரணம். அதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு...'' என்றவரின் வாயைப் பொத்தி, காணிக்கையைக் கொடுத்துவிட்டு கடுப்பாக வெளியேறினார் பாலமுருகன்!

அடுத்து நாம் சென்ற இடம் கிளி ஜோசியம். ரோட்டோரம் அமர்ந்து இருந்த கிருஷ்ணனிடம் அமர்ந்தார் பாலமுருகன். பரிதாபமாக அடைபட்டுக் கிடந்த கிளி வெளியே வந்து ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்தது. ''பாலமுருகனுக்கு நம்ம த்ரிஷா, அழகான சீட்டு எடுத்திருக்கா. நம்பினவனுக்கு நடராஜன்... நம்பாதவனுக்கு எமராஜன்... அந்த வெங்கடா ஜலபதியே வந்து இருக்கார். ஆனாலும், உங்களுக்குக் கன்னி தோஷம். ரெண்டு பொண்ணுங்களை கல்யாணம் செஞ்சிட்டு இருப்பீங்க. இப்போ மூணாவதா ஒரு பொண்ணு காலைச் சுத்துது. கூடவே, ஏழரை சனி வேற. அய்யாவுக்கு மண்ணுதான் தொழில். அந்த மண்ணும் இப்போ காலை வாரிடுச்சு. ஒரு தடவை இருமத்தூர் போய் தலைமுழுகி ஆத்தங்கரையில் இருக்கும் நவக்கிரகத்தையும், விநாயகரையும் ஒன்பது முறை சுத்தி வணங்கி வந்தா எல்லாப் பிரச்னையும் சரியாகிடும்...'' என்றார்!

ஜோசியம் பாக்கலையோ ஜோசியம்!

இறுதியாக எடை மற்றும் பலன் சொல்லக் கூடிய மெஷினில் ஒரு ரூபாய் காயின் போட்டு ஏறி நின்றார் பாலமுருகன். 'கவனமாக இருங்கள். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்’ என்ற வாசகம் சிரித்தது!

- எஸ்.ராஜாசெல்லம், படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு