Election bannerElection banner
Published:Updated:

நாமக்கல் போராளிகள்!

நாமக்கல் போராளிகள்!

##~##

'' 'அநீதியைக் கண்டு கொதித்தால், நீயும் நானும் தோழர்களே!’ என்றார் சே குவேரா. ஆனால், நாமோ அநீதியைக் கண்டு ஒதுங்கியே போகிறோம். இந்த நிலை மாற வேண்டும்''  -அழுத்தமாகச் சொல்கிறார்கள் நாமக்கல்லைச் சேர்ந்த மாதேஸ்வரியும் தனலட்சுமியும்.

''என் அப்பா மொழிப் போர் தியாகி. தன்மான உணர்வுடன் தட்டிக்கேட்கும் உணர்வையும் எனக்கு ஊட்டி வளர்த்தார் அவர். அதனால், சிறு வயதில் இருந்தே போராட்டக் குணம் அதிகம். என் திருமணத்துக்குப் பிறகும் ரேஷன் கடையில் தொடங்கி, காவல் துறை வரை நடக்கும் தவறு களைத் தட்டிக்கேட்கிறேன். மொழி அறியாமல், வழி தெரியாமல் திக்கற்றுத் திரிகிறவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து உணவு கொடுத்து, அவர்களின் முகவரி தேடி அனுப்பி வைப்பேன். இதனால் என் வீட்டில் எனக்கு எதிர்ப்பு!

நாமக்கல் போராளிகள்!

ஒரு போராட்டத்தின்போது 14 பேரைக் கைது செய்த காவல் துறை, 13 பேரை ஒரு சிறையிலும் என்னை மட்டும் 250 கி.மீ. தாண்டி வேலூர் சிறையில் கொண்டு சென்று அடைத்தது. சிறைக்குள் கலவரத்தைத் தூண்டிவிடுவேனாம் நான். 'கண்ணியமான தேர்தல் 2011’ என்ற தலைப்பில் நேர்மையாக ஓட்டுப் போட வலியுறுத்தி தேர்தல் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்தோம். அன்றைய ஆளும் கட்சியின் ஆட்கள் உருட்டுக்கட்டை யால் தாக்கினார்கள். வழிந்தோடிய ரத்தம் நின்றபோதும் எனது பிரசாரம் நிற்கவில்லை!'' துணிவு தொனிக்கப் பேசுகிறார் மாதேஸ்வரி.  

நாமக்கல் போராளிகள்!

காவிரி ஆற்றில் மணல் கொள்ளையை எதிர்த்து நீண்ட காலமாகப் போராடி வருகிறார் தனலட்சுமி. மாதேஸ் வரியின் தோழி! மோகனூர் குமரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். ''நான் படிக்கும் காலத்தில் தோழிகள் சிலர் எங்கள் வீட்டுக்குள் வர மாட்டார்கள். பிற்பாடு விசாரித்தபோதுதான் தெரிந்தது பிஞ்சுகளின் நெஞ்சிலே பெரியவர்கள் விதைத்த சாதிய நச்சு விதை. இதுபோன்ற ஆதிக்க மனோபாவச் சிந்தனையை ஒழிக்க வேண்டும் என்று பள்ளி பயிலும்போதே முடிவு செய்தேன்.  

அதுவே பிற்காலத்தில் என் சமூக வாழ்வுக்கான தாக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு எம்.சி.ஏ. முடித்து விட்டு தனியாகக் கணினி பயிலகத்தை நடத்தி வந்தேன். எங்கள் வீட்டின் அருகே காவேரி ஓடுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அங்கு மணல் அள்ள

நாமக்கல் போராளிகள்!

ஆரம்பித்தார்கள். அப்போது இருந்தே போராடி வருகிறேன். பல முறை சிறைவாசம். பெரும் மணல் வியாபாரி ஆறுமுக சாமியிடம் இருந்து மிரட்டல்கள்; இன்னொரு புறம் காவல் துறையினரின் கெடுபிடி. அதனால், சட்டம் படித்தேன். இப்போதும் வழக்கு என்றால், நீதிமன்றத்தில் எனக்கு நானே வாதாடுகிறேன். இதனால், இப்போது என்னைச் சந்திப்பவர்களிடம் நான் சொல்லும் அறிவுரை, 'கீதையை படிப்பதைவிட சட்டம் படி...’ என்பதுதான்!''

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு