Election bannerElection banner
Published:Updated:

கமலுக்கு காத்திருக்கும் கதை!

கமலுக்கு காத்திருக்கும் கதை!

##~##

ரபு வழியில் நடந்து புதுக் கவிதையில் சுவடு பதித்த தமிழ்க் கவிஞர்களில் புவியரசுக்கு அழுத்தமான இடம் உண்டு. புவியரசு கவிஞர் மட்டுமல்ல... நாடகம், ஒளிப்பதிவு, எடிட்டிங்,  திரைக் கதை என்று பல துறைகள் குறித்தும் அறிந்துவைத்து இருக்கிறார்.

 ''தமிழ் ஆசிரியராக இருந்ததால் தமிழ் இலக்கியம் மீது காதல். ம.பொ.சி-யின் தமிழரசு கழகத்தில் இருந்தேன். சிற்பி, தமிழ்நாடன், பிரபஞ்சன், மேத்தா ஆகியோருடன் இணைந்து 'வானம்பாடி’னு ஒரு கவிதை இதழைக் கொண்டு வந்தோம். மார்க்சிய உள்ளடக்கத்துடன் கவிதை பாடும் வானம்பாடிகளாக எங்களை அறிவித்துக்கொண்டோம்.  

கமலுக்கு காத்திருக்கும் கதை!

வானம்பாடி கவிதை இயக்கத்துக்குப் பிறகு நாடகத்தின் பக்கம் கவனம் திரும்பியது. கேரள திரைப்பட வளர்ச்சி கழகத்தின் தொடர்பு அதிகாரி ஆனேன். அப்பதான் சினிமா உலகத்தோடு தொடர்பு ஏற்பட்டது. அங்கே எனக்குக் கிடைச்ச நல்ல நண்பர் கமல்ஹாசன். அவர் வானம்பாடியை தவறாம வாசிச்சு இருக்காரு. இப்படி ஆரம்பிச்சது எங்க நட்பு. சுஜாதாவும் நானும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவருடைய 'கரையெல்லாம் செண்பகப்பூ’ கதையை சினிமாவாக எடுக்க ஆசைப்பட்டு கமல்கிட்ட கால்ஷீட் கேட்டோம். ஆனா, கமல் அப்போ இந்தியில் பிஸியாக இருந்ததால் அந்த முயற்சி நிறைவேறவில்லை.

ஆனாலும், தான் பண்ணக்கூடிய ஒவ்வொரு புதுப் படத்தைப் பற்றியும் எங்கிட்ட கலந்து ஆலோசிப்பார். திடீர்னு ஒருநாள் 'மருதநாயகம் படத்தில் வொர்க் பண்றீங்களா?’னு கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். கமலும், சுஜாதாவும் தொடர்ந்து மூன்று நாட்கள் அந்தப் படத்தோட கதையை  என்கிட்டே விளக்கினாங்க. அதுக்குப் பிறகு அதைத் திரையில் கொண்டுவருவதற்கான முனைப்பில் இறங்கினோம். ராத்திரி முழுக்க உட்கார்ந்து சில ஸீன்களை எழுதிட்டு வந்து கமல் கொடுப்பார். அந்தப் படத்துக்காக நாங்க உழைச்சது அசாதாரணமான உழைப்பு. ஆனா, அந்தப் படம் தள்ளிப் போனதை நினைச்சு நாங்க வேதனைப் படலை. மருதநாயகம் நிச்சயம் உருவாகும்.

கமலுக்கு காத்திருக்கும் கதை!

அதுக்குப் பிறகு 'அன்பே சிவம்’, 'விருமாண்டி’, 'தசாவதாரம்’னு அவரோட ஒவ்வொரு படத்தையும் அருகில் இருந்து கவனிச்சவன் நான். ஏதாவது ஒரு காட்சியில் எனக்கு உடன்பாடு இல்லைனா முகத்துக்கு நேரே சொல்லிடுவேன். சின்ன சண்டை, அப்புறம் மூணுநாள் பேச மாட்டோம். கொஞ்சம், கொஞ்சமா சரியாகும்.

என்னோட நீண்ட நாள் ஆசை 'நக்சலிஸம்’ தொடர்பான என் கதையில் அவர் நடிக்கணும்ங்கிறதுதான். எந்தச் சமரசமும் செஞ்சுக்காம யதார்த்த நிலைமையைச் சொல்லக் கூடிய கதை அது. கூடிய சீக்கிரம் அந்தப் படத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கும். அதில்  அக்ஷராவும் அவரும் அப்பா - பொண்ணாக்கூட நடிக்கலாம்...'' - என்றபடி கண்ணாடியைக் கழற்றி துடைத்துக் கொண்டார்.

கமலுக்கு காத்திருக்கும் கதை!

காத்திருக்கிறோம் புவியரசு சார்!

- எஸ்.ஷக்தி , படங்கள்: தி.விஜய்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு