Published:Updated:

விலங்குகளுக்கு என தனி மேம்பாலங்களை பார்த்திருக்கிறீர்களா? #EcoDuct

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விலங்குகளுக்கு என தனி மேம்பாலங்களை பார்த்திருக்கிறீர்களா? #EcoDuct
விலங்குகளுக்கு என தனி மேம்பாலங்களை பார்த்திருக்கிறீர்களா? #EcoDuct

விலங்குகளுக்கு என தனி மேம்பாலங்களை பார்த்திருக்கிறீர்களா? #EcoDuct

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனிதர்களுக்கு எல்லை மீறுவதே வழக்கம். அது பக்கத்து வீடோ, மாநிலமோ, நாடோ... எதுவும் விதிவிலக்கல்ல. அப்படித்தான் காடுகளையும் நாம் விட்டுவைக்கவில்லை. இப்படி காட்டுக்குள் சாலை போட்டு, அதிவேகமாக வாகனங்களை ஓட்டி ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான விலங்குகளை வெற்றிகரமாக நாம் கொன்று வருகிறோம். இது தவிர்க்க வேண்டியது. வளர்ச்சிக் காரணங்களுக்காக காட்டை அழித்து சாலைகள் போடுவது அனைத்து நாடுகளும் செய்வதுதான். ஆனால், அதிலும் கொஞ்சம் கருணையோடு சில நாடுகள் செயல்படுவதுண்டு. அப்படி ஒரு முயற்சிதான் விலங்குகளுக்கு என தனி மேம்பாலங்கள், குகைகள் அமைப்பதும்.


நெதர்லாந்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மேம்பாலத்தை பாருங்கள். காட்டில் வாழும் விலங்குகளுக்கு எந்த தொந்தரவும் தராமல், அவை கடந்து போக இந்த மேம்பாலம் உதவும். இதற்கு Ecoduct என பெயர். 

இது போல உலகமெங்கும் பல நாடுகள் விலங்குகள் மீது அக்கறை காட்டுவதுண்டு. இதை முதலில் செய்தது ஃபிரான்ஸ் நாடுதான். 1950லே விலங்குகளுக்கு என தனிவழியை அவர்கள் கட்டினார்கள். அதைத் தொடர்ந்து நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகியவை விலங்குகளுக்கு என குகைகள், சுரங்கப்பாதைகள், மேம்பாலங்களை அமைத்தன. 

நெதர்லாந்தில் மட்டும் இப்படி 600க்கும் மேற்பட்ட குகைவழிகள் இருக்கின்றன. அழிந்துவரும் பல இனங்களை இந்த பாதுகாப்பான வழிகள் காப்பாற்றி வருவதாக பல சர்வதேச விலங்குகள் நல அமைப்புகள் நெதர்லாந்தை பாராட்டுகின்றன. ஒரு நெடுஞ்சாலை, ரயில்பாதை, கோல்ஃப் மைதானம் என பல இடையூறுகளை கடந்து 800மீட்டர் நீளத்துக்கு ஒரு ஈக்கோடக்ட்டை அமைத்திருக்கிறது நெதர்லாந்து அரசு. உலகிலே மிகப்பெரிய Ecoduct இதுதான்.

அமெரிக்கா இந்த விஷயத்தில் தாமதமாக இறங்கினாலும், அவர்களும் நிறைய செய்துவருகிறார்கள். Banff பகுதியில் மட்டும் 24 தனிப்பாதைகளை 1978ல் கட்டியது அமெரிக்கா. கடந்த 30 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மேம்பாலங்கள், குகைவழிகளை அமெரிக்க அரசும் அமைத்திருக்கிறது.

இந்தியா இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டி வந்திருக்கிறது. 2015 ஆம் ஆண்டுதான் இந்தியாவின் முதல் ecoduct அமைக்க முடிவானது. NH7 தேசிய நெடுஞ்சாலையை அகலமாக்கும் பணிகள் தொடங்கியபோது, காட்டை அழித்து சாலை அமைக்க வேண்டியிருந்தது. அதன் ஒரு பகுதியில் காட்டு விலங்குகளுக்கு என தனிப்பாதை அமைக்கலாம் என முடிவானது. 800மீட்டரில் ஒரு குகைவழியும், 400 மிட்டரில் இரண்டு மேம்பாலங்களும் அமைக்க, 300கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இந்த புராஜெக்ட் முடிவடையவில்லை.


இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமேயில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அப்படி பூமி மாறும்போது மனிதர்களால் வாழவே முடியாது என்ற உண்மையை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். 
 

- கார்க்கிபவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு