Election bannerElection banner
Published:Updated:

கித்தான் மோமாளி!

கித்தான் மோமாளி!

##~##

தேனியில் அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர் பேய்க்காமன் தனது மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக, 'கித்தான் கோமாளி’ என்கிற மாணவர் நாடகக் குழுவை உருவாக்கி இருக்கிறார். இந்த நாடகக் குழுவினர் தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட நாடகங்களை நடத்தி இருக்கிறார்கள்.

கித்தான் மோமாளி!

''பள்ளி மாணவப் பருவம் விஞ்ஞானத்தையும் அஞ்ஞானத்தையும் ஒன்றோடு ஒன்றோடு கலந்து சிந்திக்கும் காலம். இவர்கள் பார்க்கும் மரம், வானம், கடவுள், சூரியன், நிலவு இவைகளைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த செய்திகளுடன் ஒப்பிட்டுச் சிந்திப்பார்கள். இப்படிச் சிந்திக்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கற்பனையை உருவாக்கிக் கதை சொல்வார்கள். இவைகளே நவீனக் கதைகள். டீன் ஏஜ் பருவ சிந்தனையில் உருவாகும் கதைகளில் அடிப்படை ஆதாரம் இருக்காது. அதீத கற்பனை ஏற்புடையதாக இருக்காது. இதைச் சிறுவர்கள் கூடி பேசிக்கொள்ளும்போது கேட்கலாம். இவர்களின் பேச்சுக்கள், சிந்தனைகள், மூளையில் உதித்த கதைகளை பெற்றோர் ரசித்துக் கேட்பதில்லை. இதனால் விடலை பருவத்தினரின் கற்பனை பதிவுகள் நம் நாட்டில் குறைவாகவே இருக்கிறது. கி.ரா. போன்ற எழுத்தாளர்கள் இதைப் பதிவுசெய்துள்ளார்கள். மேலை நாடுகளில் சிறுவர்கள் உருவாக்கிய கதைகளை நாடகமாகவும், குறும்படங்களாகவும் பதிவு செய்கிறார்கள். நமது நாட்டில் விக்கிர மாதித்தன் கதைகள்கூட சிறுவர்கள் கதையைப் போலத்தான் இருக்கிறது. அப்படியான சிறுவர் கதைகளைத்தான் நான் பதிவுசெய்து வருகிறேன்!''

கித்தான் மோமாளி!

என்று சொல்லும் பேய்க்காமன், ''நான் அடிப்படையில் ஓவியன். முதன்முதலாக வேலைபார்த்த அமச்சியாபுரம் கிராமத்தில் உள்ள ஆதி திராவிடர் துவக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களிடம் கதை சொல்லும் போட்டி வைத்தேன். பல மாணவர்கள் 'பறவைகளும் விலங்குகளும் என்ன பேசிக்கொள்ளும்?’ என கற்பனையாகச் கதை சொன்னார்கள். அந்தக் கதைகளை அவர்கள் கையால் எழுதித் தொகுத்து 'கதை சொல்லிகள்’ என்ற தலைப்பில் நாடக வடிவமாக்கினேன். கதை எழுதிய மாணவர்களே நடித்தார்கள். அவர்களே நடிப்பதற்கான பொருட்களைத் தயாரித்தார்கள். முதன்முதலாகக் கதை சொல்லிகள் நாடகத்தை தேனியில் அரங்கேற்றினோம். பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள். அமச்சியாபுரத்தில் இருந்து தேனி ஆதி திராவிடர் நல மாணவர்கள் விடுதிக்கு மாற்றலானேன். அங்கே 'கடவுளும் பொம்மைகளும்’ என்ற தலைப்பில் கதை எழுதும் போட்டி நடத்தினேன். அவர்கள் எழுதிய கதைகளை வைத்து 'கனவு கடவுளும் வளையல் கிழவிகளும்’ என்ற தலைப்பில் மதுரை, ராஜபாளையம், வத்தலக்குண்டு பகுதிகளில் நாடகத்தை  அரங்கேற்றினோம். வரும் காலாண்டுத் தேர்வு விடுமுறையில் திருவண்ணாமலையில் அடுத்த நாடகத்தை அரங்கேற்ற மாணவர்களை தயார்படுத்திவருகிறோம். பள்ளி பாட வகுப்புகளில் நீதி போதனை வகுப்புகள் நீக்கப்பட்டுவிட்டது. படிப்பைத் தவிர மாணவர்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை என்ற மனநிலை மக்களிடம் வந்துவிட்டது. இந்தத் தலைமுறையினருக்குக் கதை சொல்லவே ஆள் இல்லை. இதில் இருந்து அவர்களை மீட்டு எடுக்க எங்களது 'கித்தான் கோமாளி’ நாடகக் குழு கொஞ்சமாவது உதவும்!'' நம்பிக்கையாகச் சிரிக்கிறார் பேக்காமன்!

கித்தான் மோமாளி!

- இரா.முத்துநாகு

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு