Published:Updated:

லவ் பண்றதுக்காகவே டியூஷன் போயிருக்கீங்களா பாஸ்..? #Nostalgia

தார்மிக் லீ
லவ் பண்றதுக்காகவே டியூஷன் போயிருக்கீங்களா பாஸ்..? #Nostalgia
லவ் பண்றதுக்காகவே டியூஷன் போயிருக்கீங்களா பாஸ்..? #Nostalgia

ப்போதானே மக்களே வாட்ஸ்அப், ஃபேஸ்புக். அந்தக் காலத்தில் லவ் என்றால் எப்படி இருக்கும்? எப்படியெல்லாம் லவ் பண்ணாங்கனு தெரியுமா?

* அந்தக் காலத்தில் பேசுவதற்கு இருந்த ஒரே வழி எஸ்.எம்.எஸ் மட்டும்தான். அதுவும் லவ் பண்றவங்களுக்கு அதில் பல சிக்கல்கள் உள்ளன. இப்போதான் ஒரே போனில் நான்கு சிம் கார்டுகள் போடும் டெக்னாலஜியெல்லாம். அப்போ ஒரு நாளைக்கு நூறு மெசேஜ் மட்டும்தான் ஃப்ரீ. அதைப் பாதுகாத்து மெசேஜ் பண்றதுக்குள்ள டப்பா டான்ஸ் ஆடிவிடும். ஏன்னு கேட்குறீங்களா? ஒருத்தன் எவ்வளவு மெசேஜ் அனுப்புறான்னு அவனைவிட அவனை லவ் பண்ற பொண்ணுக்கு நல்லாவே தெரியும். தப்பித்தவறி அவன் லவ் பண்ணும் பொண்ணுக்கு முன்னாடி இவனுக்கு மெசேஜ் வந்தால் இவன் முடிந்தான். ஏன்? என்ன?னு கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்வதற்கு கமல் ட்வீட்டுகளுக்கு அர்த்தமே சொல்லிவிடலாம்.

* லவ் பண்றவங்களுக்குத்தான் இந்த பிரச்னை என்று பார்த்தால் பொண்ணுங்ககிட்ட பேசத் துடிக்கும் பசங்களுக்கு அதுக்கு மேல. அப்படி என்ன? ஆம் குரங்கு பல்டி அடித்து நம் மனசுக்குப் பிடித்த பொண்ணு நம்பர் வாங்கி மெசேஜ் அனுப்பலாமா? வேண்டாமா? என்று யோசிப்பதற்கே ரெண்டுநாள் ஆகும். அதையும் மீறி மனதில் தைரியம் வந்து அனுப்பி அடுத்து நடக்கப் போறதை நினைத்தால் உடம்பெல்லாம் நடுங்கிக் காய்ச்சலே வந்துவிடும்! ஆனால் இப்போ நடக்கிறதெல்லாம் அப்படி இல்லை. நம் காலத்தோடு முடிந்துவிட்டது பாஸ். இப்பல்லாம் டீ சொல்ற மாதிரி லவ்வைச் சொல்லிட்டுப் போயிடுறாங்க.

* கடைசிப் பெஞ்சில் இருக்கும் பையன் ட்யூசனுக்குப் போக ஒரே ஒரு பெண் மட்டும்தான் காரணமாக இருக்க முடியும். முக்கியமாக ட்யூசன் வருவது பாய்ஸ் ஸ்கூல் பசங்களாகத்தான் இருக்க முடியும். ட்யூசனிலாவது கோ-எட் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்து சேரும் கூட்டம்தான் அதிகம். ஒரு பெண்ணுக்குத் தெரியாமல் சைடில் லுக் விடுவது, ட்யூசன் முடிந்துபிறகு தெருமுனையில் நின்று பார்த்துக்கொண்டிருப்பது போன்ற தில்லுமுல்லு வேலையெல்லாம் பார்த்திருப்போம். அவன் ட்யூசன் சேர்ந்தது இல்லாமல் அவன் நண்பனையும் சேர வைப்பான். பருவம் வரும் நேரத்தில் காதல் வருவது, மனதுக்குப் பிடித்த பெண் படிக்கும் ட்யூசனில் அடுத்த நாளே சேர்வது எல்லாம் வேற லெவல் ஃபீல் பாஸ். அதெல்லாம் இந்தக் காலத்து பசங்களுக்கும் கிடைக்காது. அதை அனுபவிக்க பொண்ணுங்களுக்கும் கொடுத்து வைக்கவில்லை. 

* தலைகீழாக நின்று தண்ணிகூட குடித்துவிடலாம். மனதுக்குப் பிடித்த பெண்ணிடம் லவ்வைச் சொல்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா பாஸ்? பெண்கள் மனதில் காதல் இருந்தால் அதைச் சொல்வதில் அவர்களுக்கு அதில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதுபோல்தான் நடிப்பார்கள். பசங்களுக்கும் அதே சிக்கல்தான். அதையெல்லாம் பார்த்தால் லவ் பண்ண முடியுமா?னு யோசித்து அடுத்தநாள் எப்படியாவது லவ்வைச் சொல்லியே தீர வேண்டும் என்று அதற்கு ரெடியாவதுதான் பசங்க. அடுத்தநாள் ப்ரபோஸ் பண்ணப் போகிறான் என்றால் முதலில் வறுத்தெடுப்பது அவனுடைய நெருங்கிய நண்பனைத்தான். 'மச்சான் இது ஓ.கேயாடா?' 'மச்சான் நான் வேணும்னா இப்படி லவ்வைச் சொல்லட்டுமா?' அப்படி இப்படினு கேள்வியா கேட்டு வறுத்தெடுத்துடுவான். இவனும் பழகிய பாவத்துக்கு எல்லாத்தையும் பொறுத்துக்கொள்வான். கடைசியில் லவ்வைச் சொல்லி அவன் பல்ப் வாங்கிவிட்டான் என்றால் அவனோட க்ளோஸ் ஃப்ரெண்ட் க்ளோஸ்தான்.

* இது மாதிரியான அட்ராசிட்டிகள் கோ-எட் ஸ்கூல்களில் நடக்கும். நம்கூட இருக்கும் பசங்க நாம் நடந்துகொள்வதையெல்லாம் வைத்து லவ் பண்றான்னு அவனே நினைத்துக் கொள்வான். ஸ்கூலுக்கு ஒரே நாளில் ஒரு பொண்ணும் இவனும் லீவ் எடுத்த அடுத்தநாள் இவன் செத்தான்... குறுக்கு விசாரணையெல்லாம் நடக்கும். எதுக்கு லீவ்? ஏன் அந்தப் பொண்ணும் லீவ்? ரெண்டு பேரும் லீவ் போட்டு எங்கே போனீங்க? இப்படிப் பல கேள்விகளுக்கு ஆளாவான். அது மட்டுமில்லாமல் தெரியாத்தனமா ஒரு பெண் பார்த்தாலே போதும். அதுக்கும் பத்து கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆகணும். இவங்க கேங்குக்கு இவங்களே கெத்து கேங்னு பேரும் வெச்சுப்பாய்ங்க. 

* இது எல்லாத்தையும்விட ஊருக்குத் தாத்தா, பாட்டி வீட்டுக்கு போகும்போது அவங்க காதலையெல்லாம் பார்த்தால் இப்படியெல்லாமா லவ் பண்ணுவாங்கனு யோசிக்கத் தோன்றும். என்னதான் கண் முன்னாடி சண்டை போட்டாலும் அந்தச் சண்டையும் ரசிக்கும்படியாகத்தான் இருக்கும். அப்போதெல்லாம் ஸ்கூல் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறைக்கெல்லாம் ஊருக்குப் போகும் எண்ணம்தான் வரும். ஆனால் இப்போல்லாம் லீவ் விட்டாலே கோவா, கேரளா, ஒண்டர்லா போகும் கூட்டம்தான் அதிகம்.

- தார்மிக் லீ