Published:Updated:

ஒட்டுமொத்த க்ரூப்லயும் ஒட்டாத ஒருத்தனைத் தெரியுமா..? #WednesdayVerithanam

VIGNESH S
ஒட்டுமொத்த க்ரூப்லயும் ஒட்டாத ஒருத்தனைத் தெரியுமா..? #WednesdayVerithanam
ஒட்டுமொத்த க்ரூப்லயும் ஒட்டாத ஒருத்தனைத் தெரியுமா..? #WednesdayVerithanam

ஒவ்வொரு க்ரூப்லேயும் அந்த குரூப்போட நேட்டிவிட்டிக்குக் கொஞ்சம்கூட தொடர்பே இல்லாம ஒருத்தன் இருப்பான். ஊரே ஒரு பக்கம் பார்க்கும்போது எதிர்ப்பக்கம் இயற்கையை ரசிக்கிறேன்னு பார்த்துக்கிட்டு இருப்பாய்ங்க. ஒட்டுமொத்த குரூப்புலேயும் ஒட்டாத ஒருத்தன் கேரக்டர் உங்க குரூப்லேயும் யாராவது இருந்தா செக் பண்ணிக்கோங்க... 

* நாம எல்லோரும் இளையராஜா பெருசா ஏ.ஆர்.ரஹ்மான் பெருசானு பாட்டைப் போட்டுச் சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்போது குறுக்கே புகுந்து தேவா பாட்டுதான் தெய்வ லெவல்னு கட்டையைப் போடுவான். கூடவே, 'விதவிதமா சோப்பு சீப்புக் கண்ணாடி...' பாட்டைப் போட்டு அதுக்குத் தாளம் போடுறேன்னு டேபிள், சேரையெல்லாம் உடைச்சு வெறியேத்துவான். 

* ஒருத்தனுக்கு நேரம் காலம் தெரியாம திடீர் திடீர்னு பசி எடுக்கும். பிரியாணி சாப்பிட்டு நகரக்கூட முடியாம நாம ஒருமணி நேரமா உட்கார்ந்திருப்போம். ஒருத்தன் மட்டும் சாப்பிட்டது செரிமானமாகலைன்னு சொல்லிக்கிட்டே காராச்சேவு பாக்கெட்டைத் தனியா பிரிச்சு அணைக்கட்டிக்கிட்டு இருப்பான். 

* ஒருத்தன் மட்டும் ஆல்வேஸ் ஃபீலிங் மோட்லேயே இருப்பான். நேரில் பார்க்கும்போதும் தலையைத் தொங்கப்போட்டுக்கிட்டே குறுக்குமறுக்குமாகத் திரிவான். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்லகூட 'போ நீ...போ'னு அழற எமோஜி போட்டு எல்லோரையும் சாவடிப்பான். நல்ல நாள்லகூட நாலு வார்த்தை நல்லதா பேச மாட்டான். கூப்பிட்டு ஆறுதலா பேசலாம்னு நினைச்சா, கடைசியில் நம்மளையும் அவனை மாதிரியே ஆக்கிடுவான். அவனையெல்லாம் அப்படியே போக விட்டுடணும். 

* எப்போ பார்த்தாலும் ஏதாவது ஒரு பஞ்சாயத்தை இழுத்து விட்டுக்கிட்டே இருப்பாய்ங்க. பள்ளிக்கூட லெவல்ல சின்னதா ஏதோ சம்பவம் பண்ணி நம்மளையும் சேர்த்து மாட்டி விடுறவன், காலேஜ் படிக்கும்போது பெரிய பஞ்சாயத்தா பார்த்து இழுத்து விட்டுடுவான். அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வெச்சு அவனோடு சேர்த்து எல்லோருக்கும் டின் கட்டுவாய்ங்க. 

* தான் ரொம்பகாலமா நம்பி வெச்சுருக்கிற கருத்தை நமக்கும் சொருகி விடுவான். 'இந்தப் பொண்ணுங்க நம்ம வாழ்க்கையில் வந்தாலே பிரச்னைதான்டா...'னு புலம்பி எந்தப் பொண்ணுகூடவும் நம்மைப் பேச விடாம குறுக்க விழுவான். ஆனா, ஆழமா விசாரிச்சுப் பார்த்தா, அவன் மட்டும் அடுத்த டிபார்ட்மென்ட் பொண்ணுங்ககூடவெல்லாம் வகைதொகையில்லாம கடலை வறுத்துக்கிட்டு இருப்பான். அட ஞானசூனியமே.

* ஏதாவது மீட்டிங்னு மொத்தமா எல்லோரும் உட்கார்ந்திருக்கும்போது ஒருத்தன் மட்டும் பவர்பாயின்ட் ப்ரசென்டேஷன் போட வெச்சுருக்கிற புரொஜெக்டர் வொயரைப் பிடிச்சு இழுத்துக்கிட்டு இருப்பான். அந்த மீட்டிங் நடத்துற ஆள் அவன் விளையாடுறதை எல்லாம் கண்டுக்காம அவனை வேடிக்கைப் பார்த்துக்கிட்டிருக்கிற நம்மளை எழுப்பிக் கேள்வி கேட்பார். தொயரம்..!

* இந்த கேரக்டர்கள்தான் நவீனமடைஞ்சு இப்போ வெளியாகிற படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுத ஆரம்பிச்சுட்டாய்ங்க. நல்லாயிருக்குனு ஊரே பாராட்டும் படத்தை குப்பைனு தூக்கிப் போட்டுக் கிளறுவாய்ங்க. ரெண்டுமணி நேரமா படத்தைப் பார்த்துட்டு டயலாக்கே இல்லாத படம் செம்ம மாஸ்னு அடிச்சு விடுவாய்ங்க. பார்த்தா டைட்டில் போடும்போது தெரியாத்தனமா கை பட்டு வால்யூம் ம்யூட் ஆகியிருக்கும். கெரகமே..!

* மூணாறுக்கோ, ஊட்டிக்கோ டூர் போனாலும் அங்கேயும் வந்து இழுத்துப் போத்திக்கிட்டு தூங்கிட்டுத்தான் இருப்பாய்ங்க. எல்லோரும் ஊரைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினா 'பனி ஊத்துது...'னு காரணம் சொல்வான். அப்புறம் ஊட்டியில குளிராம... வாயைக் கிளறாதீங்கய்யா..!

- விக்கி