Published:Updated:

கப் ஐஸ், காவியம், ஹேண்ட் கிரிக்கெட் - பால்ய கால பராக்கிரமங்கள்!

தார்மிக் லீ
கப் ஐஸ், காவியம், ஹேண்ட் கிரிக்கெட் - பால்ய கால பராக்கிரமங்கள்!
கப் ஐஸ், காவியம், ஹேண்ட் கிரிக்கெட் - பால்ய கால பராக்கிரமங்கள்!

கப் ஐஸ், காவியம், ஹேண்ட் கிரிக்கெட் - பால்ய கால பராக்கிரமங்கள்!

கிரிக்கெட், கபடி, கூடைப்பந்து எனப் பல விளையாட்டுகள் வந்திருந்தாலும் நம்ம பசங்க கண்டுபிடித்த விளையாட்டையெல்லாம் ஒலிம்பிக்ஸ்லகூட சேர்க்கலாம் அந்த அளவுக்குப் பின்னிப் பெடல் பண்ணுவாங்க. அதுவும் ஒவ்வொரு
விளையாட்டிலும் ரூல்ஸ் எல்லாமே வேற லெவல்ல இருக்கும். அப்படியே உங்களையெல்லாம் ஒரு டைம் மெஷினில் கொண்டுபோய் நிறுத்துறேன். ஞாபகப்படுத்துறேன். கவலைப்படாதீங்க பாஸ். ஃப்ரீதான்!

டிக் டிக் யாரது? என்ன வேண்டும்? நகை வேண்டும் :

டைட்டிலில் இதைப் பார்த்தவுடன் சிரித்தால் நீங்க கண்டிப்பாக இந்த கேமை விளையாடி இருப்பீர்கள். கண்ணுக்கு முன்னே பல கலர்கள் தோன்றும். ஆனால் அதை எப்படி ஒரு விளையாட்டுடன் கோர்ப்பது? மல்லாந்து படுத்து விட்டத்தைப்
பார்க்கும்போது வந்திருக்கும் இந்த யோசனையானது. யார் அவுட் என்று  'சா பூ த்ரீ' போட்டுப் பார்ப்போம். அதுதான் அப்போ உள்ள மாடர்ன் டாஸ் முறை. கேம் என்னவென்றால் பட்டையான ஆள் இந்த ஸ்லோகனைச் சொல்ல வேண்டும் 'டிக் டிக்
யாரது? பேயது, என்ன வேண்டும்? நகை வேண்டும், என்ன நகை? கலர் நகை? என்ன கலர்? என்று கேட்டவுடன் அந்தப் அவுட்டான ஆள் ஏதாவது ஒரு கலரைச் சொல்லுவான். அவன் சொன்னவுடன் ஊருக்குப் போகும் கடைசி பஸ்சைப்
பிடிப்பதுபோல் ஓடிப்போய் அந்த கலரைத் தொடவேண்டும். கடைசியில் சொன்ன கலரை யார் தொடவில்லையோ அவன்தான் அவுட்.

கப் ஐஸ் :

கப் ஐஸ் என்று சொன்னவுடன் கப்புன்னு பிடித்திருப்பீர்கள். இந்த விளையாட்டானது இரவு நேரங்களில் விளையாடினால்தான் மிகவும் த்ரில்லிங்காக இருக்கும். ஏரியாவில் இருக்கும் பசங்களை ஒன்றாகச் சேர்த்து பெரிய 'சா பூ த்ரீ' போட்டு யார்
அவுட் என்று தீர்மானிப்போம். அவுட் ஆகும் ஆள் அவ்வளவுதான் முடிந்தான். இவன் ஒன்றிலிருந்து நூறு எண்ணுவதற்குள் பசங்க எல்லாரும் ஒளிந்துகொள்வார்கள். இவன் எண்ணும்போது திரும்பிப் பார்க்காமல் இருக்க அம்மா சத்தியம்
வாங்குவது வழக்கம். இவன் வரிசையாக ஆளைக் கண்டுபிடிக்க வேண்டும். யாரு முதல் நம்பரோ அவன்தான் அவுட். யாராவது அவுட்டான ஆளை 'கப் ஐஸ்' அடித்துவிட்டால் மீண்டும் அவனேதான் அவுட். பல பாலிடிக்ஸ் நடக்கும் கேம் இது.
சம்பந்தபட்டவாளுக்குப் புரியும்னு நினைக்கிறேன்.

அண்டர் ஓவர் நவம்பர் டிசம்பர் :

ஒலிம்பிக்கில் சேர்க்கும் அளவுக்கு இந்த விளையாட்டுக்கு மவுஸ் இருக்கும். அவுட்டான ஆள் ஒரு வட்டமிட்டு அதற்குள் நின்று திரும்பிப் பார்க்காமல் ஒரு குச்சியைக் கையில் பிடித்துக்கொண்டு இதைச் சொல்ல வேண்டும். அதற்குப் பின்னே
நிற்கும் ஆட்கள் அடுத்த வரியைச் சொல்ல வேண்டும். 'அண்டர், ஓவர், நவம்பர், டிசம்பர்' என்று சொல்லி முடித்தபின்னர் கையில் இருக்கும் குச்சியைத் தூக்கி எறிய வேண்டும். தூக்கி எறிந்த குச்சி ஏதாவது ஓர் ஆள் மேலே பட்டால் அவன்
அவுட். எங்கேயும் படவில்லையென்றால் நடந்து அந்தக் குச்சி இருக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டும். எவ்வளவு அடி எடுத்து வைத்து நடக்கிறோமோ அதே எண்ணிக்கையில் நொண்டியடித்து அந்த வட்டத்துக்குள் வந்து மறுபடியும் அந்தக்
குச்சியை எறிய வேண்டும். 

டைப்ஸ் ஆஃப் கிரிக்கெட் :

சின்ன வயதில் எல்லோரும் கிரிக்கெட் வெறியர்களாகத்தான் இருந்திருப்போம். ஆனால் எல்லா நேரங்களிலும் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் கஷ்டமான காரியம். அதற்குத்தான் இந்த வழி. கிடைக்கும் இடமெல்லாம் இந்த கிரிக்கெட்டை
விளையாடலாம். இதில் இரண்டு வகையுண்டு. ஒன்று 'ஹேண்ட் கிரிக்கெட்' மற்றொன்று 'புக் கிரிக்கெட்' இது இரண்டையுமே சலிக்கும்வரை விளையாடலாம். புத்தகத்தைப் படிப்பதற்கு பயன்படுத்துகிறோமோ இல்லையோ புக் கிரிக்கெட்
விளையாடுவதற்காகப் பல முறை பயன்படுத்தியிருப்போம். டீச்சர் பாடம் எடுக்கும்போதுகூட விளையாடலாம் பாஸ். சந்தேகமே வராது. வெறித்தனமாக விளையாடிய விளையாட்டுகளுள் இதுதான் டாப்பில் இருக்கும். இதை எந்த விளையாட்டினாலும் அடித்துக்கொள்ள முடியாது. 'ஆடா, ஈவனா?'

காவியம் :

பெயரைக் கேட்டவுடனே கணித்திருப்பீர்கள். இது ஓர் அழகான விளையாட்டென்று. அதுதான் இல்லை! இந்த விளையாட்டில் அடியெல்லாம்கூட விழும். அவுட்டான ஆள் குனிந்து தரையைத் தொடவேண்டும். மீதி இருக்கும் ஆள் அவனைத்
தாண்டி இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் போக வேண்டும். அப்படித் தாண்டும்போது கால் முதுகில் பட்டுவிடாமலும், இதைச் சொல்லித்தான் தாண்ட வேண்டும் 'காவியம்' 'மணிக்காவியம்' 'லாகு' 'லாகத்தின் கொக்கு' (இதைச் சொல்லும்போது
தலையில் கைகளால் கொம்பு போல் வைத்துக் கொள்ளவேண்டும்) 'லட்சத்தின் மண்வாரி' (தாண்டிவிட்டு கால்களால் மண் வாரி இறைக்கணும்! இல்லைன்னா அவுட்) 'சூடா, ஸ்ட்ராங்கா?' (இதைச் சொல்வதற்கு முன் குனிந்து நிற்பவனிடம் இதைக்
கேட்க வேண்டும், அவன் சூடு என்றால் தாவிக்கொண்டே அவன் பின்னால் எத்த வேண்டும், ஸ்ட்ராங்கென்றால் அவன்மீது உட்கார்ந்து தாவ வேண்டும்) விஜய் பைரவாவில் சொல்வது போல் 'விளையாடலாமா?'

மேலும் சில விளையாட்டுக்களுடன் அடுத்த பதிவில் உங்களைச் சந்திக்கிறேன்... உங்களிடமிருந்து விடைபெறுவது 'நையாண்டீஸ் கிட்'


- தார்மிக் லீ

அடுத்த கட்டுரைக்கு