Published:Updated:

இழந்த மவுசை மீட்பது எப்படி? - சின்னம்மாவுக்கு சில யோசனைகள் #VikatanFun

இழந்த மவுசை மீட்பது எப்படி? - சின்னம்மாவுக்கு சில யோசனைகள் #VikatanFun
இழந்த மவுசை மீட்பது எப்படி? - சின்னம்மாவுக்கு சில யோசனைகள் #VikatanFun

இழந்த மவுசை மீட்பது எப்படி? - சின்னம்மாவுக்கு சில யோசனைகள் #VikatanFun

முதலமைச்சர் மாறுதல்கள், ஜக்கி - மோடி காம்போ, ட்விட்டர் கலாட்டா, பத்தாம் - பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் போன்ற பரபரப்புகளில் நாம் எல்லாரும் ஒரு மிக முக்கிய வி.ஐ.பியை மறந்துவிட்டோம். சின்ன இதய தெய்வம், சின்ன புரட்சித் தலைவி, சின்ன மாண்புமிகு சின்னம்மாதான் அது. சிங்கம் வெட்டவெளில திரியுறப்போ பயந்து ஓடுற சமூகம் அதே சிங்கம் கூண்டுல அடைபடுறப்போ குதிச்சு குதிச்சு விளையாடுமாம். அதுமாதிரியே நம்ம சின்னம்மா பெங்களூருல அடைபட்டதுல இருந்து அவரைப் பத்தி ஒரு செய்தியும் வர்றதில்லை. போதாக்குறைக்கு அமோகமா சேல்ஸ் ஆகிட்டு இருந்த சின்னம்மா புகைப்படங்களின் விற்பனை வேற மரண அடிவாங்கியிருக்காம். இதைக் கேட்டு பயங்கர ஷாக்காகுற சின்னம்மா தன் இமேஜை மீட்டெடுக்க பதினோரு பேர் கொண்ட குழுவோட களமிறங்கினா அவங்களுக்கு எங்கள் சார்பா தர்றதுக்கு ரெடியா இருக்குற ஐடியாக்கள் லிஸ்ட்தான் இது. 

* ஒரே மாசத்துல இவ்ளோ சரிவான்னு கவலைப்படுற சின்னம்மா முதலில் எடுக்க வேண்டிய ஆயுதம் 'இலவசம்' .ஒரு சின்ன போட்டோ வாங்குனா சின்னம்மா பயன்படுத்திய செல்ஃபி ஸ்டிக் ஃப்ரீ. பெரிய போட்டோ வாங்குனா சின்னம்மாவோட மேக்கப் கிட் ஃப்ரீன்னு சொன்னா கூட்டம் பிச்சுக்கும்ல!

* போட்டோக்கள்ல எல்லாம் பழைய மாதிரி போஸ் கொடுக்குறதாலதான் போணியாகமாட்டுது. அதனால் கீர்த்தி சுரேஷ் கிட்ட எக்ஸ்பிரஷன்களுக்காக கோச்சிங் க்ளாஸ் போகலாம். அதுவும் முடியலையா? இருக்கவே இருக்கு போட்டோ ஆப். நல்ல அப்ளிகேஷனா செலக்ட் பண்ணி எடிட் பண்ணி போடவேண்டியதுதான்.
     
* வேற வேற பேக்ரவுண்டுகளில் சின்னம்மா படத்தை வைத்து போட்டோஷாப் செய்து தருபவர்களுக்கு தி பெஸ்ட் எடிட்டருக்கான நேஷனல் ஜியாக்ரபிக்... ஸாரி நேஷனல் விருது வழங்கப்படும். மேலும் அடுத்தடுத்த போட்டோக்களை எடிட் செய்யும் அரிய வாய்ப்புகளும் கிட்டும்.
      
* பத்து ரூபாய்க்கு சின்னம்மா போட்டோ வாங்கி, பின்னால் இருக்கும் சீக்ரெட் கோடை ஸ்கேன் செய்து அனுப்பினால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பத்து நபர்களுக்கு சென்னைக்கு மிக அருகில் திருச்சியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 2bhk வில்லா பரிசாக வழங்கப்படும் என்று ஒரு அபாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.
      
* சின்னம்மா ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தி, அதை டவுன்லோட் செய்தால் நூறு ரூபாய்க்கு தானாக ரீசார்ஜ் ஆகிவிடும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போட்டோ டவுன்லோடு செய்யும் போதும் அப்ளிகேஷனில் புள்ளிகள் ஏறிக்கொண்டே போகும். இப்படி அதிகம் புள்ளிகள் சேர்க்கும் ஆளுக்கு மாதம் 500 ரூபாய்க்கு டாப் அப் ஆகும் ஆப்ஷனை அறிமுகப்படுத்தலாம். 
    
* வீடு வீடாகச் சென்று சின்னம்மா படங்களை தள்ளுபடி முறையில் வினியோகம் செய்பவர்களுக்கு கட்சியின் உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடைக்கும். ஆறுதல் பரிசாக மக்களின் மேயர், மக்களின் கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளை வழங்கலாம்.
    
* பேஸ்புக்கில் சின்னம்மா போட்டோவைப் ஃப்ரோபைல் பிக்சராக வைத்தால் ப்ரியா ஸ்வீட்டி, டாடீஸ் பிரின்சஸ் போன்ற ஃபேக் ஐடிக்களில் இருந்து ரெக்வெஸ்ட் அனுப்பப்படும். வைக்காதவர்களுக்கு சி.ஆர் சரஸ்வதியின் சொற்பொழிவு வாய்ஸ் மெசேஜாக அனுப்பப்படும். 
      
* 'நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அதனால்தான் சின்னம்மா இருந்த அ.தி.மு.கவை இத்தனை முறை ஆட்சியில் அமர வைத்தார்கள், உண்மை தமிழனென்றால் இதை ஷேர் செய்யவும்' என வாட்ஸ் அப்பில் கிளப்பிவிட்டால் அதுபாட்டுக்கு ஒருபக்கம் குபுகுபுவென பற்றி எரியும். 

* சின்னம்மாவின் முகம் பதிந்த குடங்களை வைத்திருந்தால் தண்ணீர் வரி இல்லை, கதவில் ஒட்டினால் வீட்டு வரி இல்லை, வண்டியில் ஒட்டினால் பெட்ரோல் இலவசம் போன்ற அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டால் சேல்ஸ் பிய்த்துக்கொள்ளும். கடை வைத்திருந்தவர் ஒரே மாதத்தில் கூவத்தூரில் ரிசார்ட் கட்டிவிடுவார்.

* இதுபோன்ற அதிரிபுதிரி ஐடியா கொடுப்பவர்களுக்கு சின்னம்மாவின் ஆலோசனைக் குழுவில் கடைசி ஆளாக வேலை போட்டுத்தரப்படும். ரெடி ஸ்டார்ட் மக்களே! வாய்ப்பைத் தவறவிட்டுடாம வேகமா செயல்படுங்க.

 -செ.சங்கீதா

மாணவப் பத்திரிக்கையாளர்

அடுத்த கட்டுரைக்கு