Published:Updated:

டயலாக் மறந்து போகும், டான்ஸ் நின்னு போகும்! - ஆண்டுவிழா அக்கப்போர்கள்

டயலாக் மறந்து போகும், டான்ஸ் நின்னு போகும்! - ஆண்டுவிழா அக்கப்போர்கள்
டயலாக் மறந்து போகும், டான்ஸ் நின்னு போகும்! - ஆண்டுவிழா அக்கப்போர்கள்

பள்ளிப் பருவம் என்றாலே குஷியோடும் குதூகலத்தோடும் கடந்து செல்கின்ற பருவம். அதில் கலகலவென கறுக் மொறுக் சுவாரஸ்யங்களோடு ஒரு விழா என்றால் அது ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள்தான். நம்மில் பலருக்கும் இந்த வகை ஆண்டு விழா நிகழ்வுகள் வித்தியாசமான அனுபவங்களைக் கற்றுக் கொடுத்துள்ளன. அவற்றைப் பற்றி மகிழ்ச்சியான ஒரு ரீவைண்ட் மெமரீஸ்க்கு போகலாமா மக்களே...

* ஆண்டு விழா ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே ப்ராக்டிஸ் ப்ராக்டிஸ்னு கிளாஸ்ஸையெல்லாம் கட் அடிச்சிட்டு 'நானும் பெர்ஃபாமன்ஸ் பண்ணப்போறேன் பேர்வழி'னு சீன் போட்டுட்டு கேம்பஸை சுத்தக் கிளம்புவோம்.

* பாதிப் பேர் வகுப்பில் இல்லைன்னு அப்போ வாத்தியாரும் வர மாட்டாங்க. அந்த ஆசிரியரில்லாத வகுப்பறையில ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு ஆண்டு விழாவை வேடிக்கை பார்க்கவும் ஒரு குரூப் இருக்கும்.

* டிராமாவுக்கு ரிகர்சல் பண்றோம்னு சொல்லிட்டு பல நாள் வெட்டிக் கதைகள் பேசிப் பேசியே பொழுதைப் போக்குவோம். என்னதான் மாசக்கணக்கா ப்ராக்டிஸ் பண்ணினாலும் ஸ்டேஜ்க்குப் போனதும் ஸ்டெப்ஸை மறந்துட்டு வாத்தியார் கிட்ட திட்டு வாங்குவோம். 

* பழைய ட்ரெஸ்ஸைக் கொண்டு வந்து, அதைப் புதுசா நமக்காகவே தெச்ச மாதிரி அது... இதுன்னு எதையாச்சும் ஒட்டி கலர் கலராப் போட்டு கெத்து காட்டுவோம். ஆனா, அது வெத்துனு ஊர் உலகத்துக்கே தெரியும். 

* ஸ்டேஜ்ல முகம் தெரியணும்னு ரொம்பவே தள்ளாடுவோம். நம்ம வீட்டுல இருந்து பார்க்க வந்தவங்களுக்கு எப்படியாவது முகத்தைக் காட்டப் படாதபாடு படுவோம். முன்வரிசையில் இடம் கொடுக்காத மாஸ்டரை சபிப்போம். அதுக்கு முதல்ல நல்லா ஆடணும் பக்கி!

* நான் டான்ஸ் ஆடுறேன். நீங்க வாங்க... நீங்க வாங்கனு ஊரையே வேடிக்கை பார்க்கக் கூப்பிடுவோம்.  பாட்டு முடியுற வரைக்கும் பின்வரிசையில் இருந்து எட்டிப் பார்த்தே கழுத்து வலிக்கும். ஆனா நம்ம மூஞ்சி போட்டோவுல கூட தெரியாதுங்குறது வேற விஷயம்.

* ஸ்பெஷல் கிளாஸ்க்கே ஒழுங்கா போகாத நமக்கு ஸ்பெஷல் டான்ஸ் கோச்சிங் எல்லாம் நடக்கும். ஞாயிற்றுக்கிழமை கூட கஷ்டம் பார்க்காம ப்ராக்டீஸ்க்கு போவோம். இதுலேயும் பத்தாவது, பன்னிரெண்டாவது படிக்க்கிறவங்களை வேடிக்கை பார்க்க மட்டும்தான் அனுமதிப்பாங்க.

* டான்ஸுக்காக பண்ணும் அலப்பறைகள் அளப்பெரியது. நாம தேர்ந்தெடுக்கிற பாட்டுகளில் பீப் போட்டு முக்கால்வாசி பாட்டுகளை ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. ஒரு வழியா பாட்டை செலெக்ட் பண்ணினா பாதிலேயே டேப் ரிப்பேர் ஆகிடும். அதையும் தட்டித் தட்டி ஓட வெச்சு, ஆடி முடிக்கிறதுக்குள்ளே.... பாஸ், ப்ளே பட்டன்கள் கழண்டு வெளிய தொங்கிக்கிட்டு இருக்கும். 

* நாடகம் நடிக்கிறதை விட கொடுஞ்செயல் எதுவும் இல்லை. எவ்வளவு மனப்பாடம் பண்ணினாலும் அந்த ஷேக்ஸ்பியர் டயலாக் முக்கியமான நேரம்பார்த்து மறந்து போய்டும். அறிவியல் பாடத்துல 35 மார்க் எடுத்து பாஸ் ஆகாதவனை அறிவியல் அறிஞர் கேரக்டர் கொடுத்து நடிக்கச் சொன்னா அவன் திருவிழா கூட்டத்துத் திருடன் மாதிரி முழிக்கத்தானே செய்வான்.

* ஸ்டேஜ் பக்கத்துலேயே டீச்சர் நின்னு ஸ்டெப்ஸ் சொல்லி கொடுத்தாலும் சரி டயலாக் சொல்லிக் கொடுத்தாலும் சரி... நம்மளால சொதப்பாம முழுமையா எதையும் முடிக்க முடியாது. அதுக்கும் சேர்த்து ஸ்டேஜுக்குப் பின்னாடிப் போய் அந்த டீச்சர்கிட்ட வாங்கிக் கட்டிக்கணும். 

* ஆண்டு விழா முடிஞ்சதும் திருவிழாக் கூட்டம் ஒரே நாள்ல கலைஞ்சது மாதிரி வெறிச்சோடி, பள்ளிக்கூட வளாகமே ஈயாட ஆரம்பிச்சிடும். அப்புறம் வழக்கம் போல வீட்டுப்பாடம் எழுதாம வந்து வகுப்புக்கு வெளியில முட்டி போட வேண்டியதுதான்.
  
- வெ .வித்யா காயத்ரி (மாணவப் பத்திரிகையாளர்)