Published:Updated:

கல்லூரி ஃபேர்வெல்லை இப்படியும் கொண்டாடலாம்!

கல்லூரி ஃபேர்வெல்லை இப்படியும் கொண்டாடலாம்!

கல்லூரி ஃபேர்வெல்லை இப்படியும் கொண்டாடலாம்!

கல்லூரி ஃபேர்வெல்லை இப்படியும் கொண்டாடலாம்!

கல்லூரி ஃபேர்வெல்லை இப்படியும் கொண்டாடலாம்!

Published:Updated:
கல்லூரி ஃபேர்வெல்லை இப்படியும் கொண்டாடலாம்!

காலேஜில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கல்ச்சுரல்ஸ் என்று  குதூகலங்களை என்ஜாய் பண்ணுவதற்கென்றே ஒரு தனி கூட்டம் இருக்கும். அதேபோல காலேஜிலும், வெளியிலும் எந்த சம்பவம் நடந்தாலும் அதற்கு கருத்துச் சொல்வதற்கென்றே சில கருத்து கந்தசாமிகளும் இருப்பார்கள். அவர்கள், எந்த கொண்டாட்டத்தையும் நல்லது கெட்டது யோசித்துதான்  செய்வார்கள். எதைப் பேசினாலும், அதில் கருத்து சொல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படியான யூத்ஸிடம் தான்  நாம் வசமாக சிக்கினோம். 

சென்னை புறநகர் பகுதியில் உள்ள ராஜலட்சுமி ஸ்கூல் ஆப் பிசினஸ் கல்லூரியில் ஃபேர்வெல் டே செலிபிரேசனை கொஞ்சம் வித்தியாசமாக, நூற்றுக்கணக்கான மரங்களை நட்டுக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். எட்டிப் பார்த்தபோது சில மாணவர்கள்  நம்மைச் சூழ்ந்து கொண்டார்கள். 

"நூறு ரூபா பேங்க் பேலன்ஸ் இருந்தா பெருசா தெரியாது. ஆனால், அதே நூறு ரூபா.. போன்ல பேலன்ஸா இருந்தா பெருசா தெரியும்" இந்த மாதிரி கருத்து சொல்ற யூத்ததான், உங்களுக்குத் தெரியும். தத்துவங்கள் சொல்ல சாக்ரடீஸ் தேவையில்லை, அனுபவம் பேச ஆசான் தேவையில்லை. இங்கே மாணவர்களுக்குத் தேவை ஒரு சமூக பார்வை. இது எங்க டீமுக்கு நிறையவே இருக்கிறது" என்று கேங் லீடர் மாதவன் சொல்ல மொத்த டீமும் கை தட்டி ஆர்ப்பரித்தது. 

"எங்க காலேஜ்லேயே, நாங்கள் தனி கேங். நாங்கள் எது செஞ்சாலும், அதுல நாலு பேருக்கு நல்லது இருக்கானுதான் பார்ப்போம். அத மட்டும்தான் செய்வோம்" என்று அருகில் நிற்கும் மாதவன் தலையில் அடித்து சத்தியம் செய்தார் கீர்த்தனா. நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. 

"காலேஜ் பசங்களை எப்போதுமே பாட்டு, டான்ஸ்னு ஜாலியாதானே பாத்திருப்பிங்க. நாங்களும் ஜாலியான பசங்கதான். ஆனால், எங்களுடைய சந்தோசம் யாரையும் காயப்படுத்தாது. அதே நேரத்துல காலேஜ்லேயும் சரி, வெளியிலேயும் சரி எந்த விசயமா இருந்தாலும் நாங்கதான் முதல் ஆளா இருப்போம். அதுனாலயே எங்க காலேஜ்ல, எங்க டீம்ம தான் எல்லா பேராசிரியர்களுக்கும்  பிடிக்கும்" - இது மோனிஷா. 

"முதலாமாண்டு மேலாண்மை படிக்கிறோம். காலேஜ்ல ஃபேர்வெல் டே வரப்போகுதுனு சொன்னதுமே, முதல்ல நாங்கள் எங்களுக்குள்ள சந்திச்சு, இதை வித்தியாசமா செய்யலாம்னு முடிவு பண்ணினோம். நினைவுப் பரிசுகள் பற்றி யோசித்தோம்.  எதைச் செய்தாலும் அதை உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம். அப்பத்தான், சமீபத்தில் சென்னையை சூறையாடிய வர்தா புயலின் ஞாபகங்கள் வந்தது. அதன்படி புவி வெப்பமயமாதல் குறித்து, விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், காலேஜ் முழுவதும் மரங்கள் நடலாம் என்று முடிவெடுத்தோம். எங்கள் ஆசிரியர்களும் எங்களுக்கு உதவினார்கள். இந்த விஷயத்தை சீனியர்களும் ஏற்றுக்கொண்டார்கள்" என்று லட்சுமி பிரியா சொல்லும்போதே, இடைமறித்த சாத்விக், "இந்த  ஃபேர்வெல்  டே விழாவுலயும் ஏதாவது கருத்தை மட்டும் சொல்லி, எங்களை வழி அனுப்பி வச்சிருவிங்களோனு சீனியர்ஸ்  பயந்துட்டாங்க பாஸ். ஆனா அவங்களை மரம் நட வெச்சதும் ரொம்ப நெகிழ்ந்துட்டாங்க” என்று சாத்விக் சொல்லும்போது சீனியர்ஸ் அவரை ஆமோதிக்கும் விதமாக கோரஸாகக் குரலெழுப்பினார்கள்.  

"எத்தனை வருஷம் கழித்து இந்த காலேஜ்க்கு இந்த சீனியர்ஸ் வந்தாலும், இந்த மரங்கள் வளர்ந்து நிற்பதைப் பார்த்து, இன்றைய   சுவாரஸ்யமான தருணங்களை நினைச்சுப் பார்ப்பாங்க.  அதற்காகத்தான்  இப்படி ஒரு ஏற்பாடு!" என்றார் பிரியதர்ஷினி!   

கருத்தான பிள்ளைகள் தான்!

- ரா.அருள் வளன் அரசு