Election bannerElection banner
Published:Updated:

கஸ்டமரே கடவுள்!

வியக்க வைக்கும் தி.நகர் சலூன்

##~##

''தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. பூஜை போட்டுட்டோம். செருப்பை வெளியவே கழட்டி விட்டுட்டு வாங்க!'' மென்மையும் தன்மையும் கலந்து வரவேற்கிறார் அரவிந்தாக்ஷன்.  அது பாண்டி பஜார் 'கேரளா முடித் திருத்தகம்’. உள்ளே நுழைந்தால், விநாயகர், சிவன், முருகன் என சுவாமிப் படங்கள். பின்னணியில் பக்திப் பாடல் என கோயில் எஃபெக்ட். சென்னையின் மிகப் பழமையான சலூன்களில் ஒன்று.

 ''இந்தக் கடையை எங்கப்பா சங்குன்னி நாயர் 1939-ல் ஆரம்பிச்சார். அவர் வாங்கிப்போட்ட ஃபர்னிச்சர்களை பழமை மாறாமல் பாதுகாப்பதும், தாத்தா, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என அன்றில் இருந்து இன்று வரை தொடரும் எங்கள் வாடிக்கையாளர்களும்தான் எங்க சலூனின் சொத்து!'' என்கிறார் அரவிந்தாக்ஷன்.

கஸ்டமரே கடவுள்!

சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு வருகிறார்கள் பிரபலங்கள். ''பத்திரிகையாளர் தமிழ்வாணன், நடிகர்கள் வி.கே.ராமசாமி, டணால் தங்கவேல், பூர்ணம் விஸ்வநாதன் இவர்கள் காலமாகும் வரை எங்களிடம்தான் சிகை அலங்காரம் செய்துகொண்டார்கள்!'' என்கிற அரவிந்தாக்ஷனைத் தொடர்கிறார் அவ ருடைய மகன் சந்தீப்.

நல்லி சிக்ஸ் உரிமையாளர் நல்லி குப்புசாமி செட்டியார், ரெசிடென்சி டவர்ஸ் உரிமையாளர் அப்பாசாமி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, நாயுடு ஹால் வேணுகோபால், நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் அன்று முதல் இன்று வரை இவர்களின் வாடிக்கையாளர்கள்.  

''இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சார், 'இந்தப் பக்கம் வந்தேன். நம்ம கடை ஞாபகம் வந்துச்சு. ஒரு ஷேவிங் பண்ணிட்டுப் போவோம்னு வந்தேன்’னு சிரிச்சுட்டே வருவார்'' என்கிறார் சந்தீப்.

கஸ்டமரே கடவுள்!

நல்லி குப்புசாமி செட்டியார் தான் எழுதிய 'தி.நகர்-அன்றும் இன்றும்’ என்ற புத்தகத்தில் தங்கள் சலூன் பற்றி குறிப்பிட்டு எழுதியதைப் பெருமையாகக் குறிப்பிடும் சந்தீப், ''இன்னிக்கு

கஸ்டமரே கடவுள்!

10,000-க்கு ஸ்டீல் ரோலிங் சேர் கிடைக்கும். ஆனா, அது நாலைஞ்சு வருஷத்துக்குள்ள லொட லொடன்னு ஆயிடும். ஆனா, இதெல்லாம் 75 வருஷத்துக்கு முன்னே, தேக்கு மரத்துல செஞ்ச ரோலிங் சேர்கள். அப்பப்போ வார்னிஷ் அடிச்சுவெச்சா, இன்னும் 100 வருஷம்கூட தாங்கும்.  சம்பளத்துக்கு வேலை செய்தாலும் ஃபர்னிச்சர்களைப் பாதுகாப்பதில் தொடங்கி வாடிக்கையாளர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்வது வரை எங்கள் ஊழியர்களின் உழைப்பும் மிகப் பெரியது.

சிரிக்கிறார் சந்தீப்.

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

கஸ்டமரே கடவுள்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு