Election bannerElection banner
Published:Updated:

தலைவன் இருக்கிறான்!

கலகல காஞ்சி எம்.ஜி.ஆர்

##~##

''சென்னை சைதாப்பேட்டை பாலத்துக்குக் கீழே இருந்த குடிசைப் பகுதியில் முன்னாடி குடியிருந்தோம். அப்போ புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்க பகுதியை முதல்வர் எம்.ஜி.ஆர். பார்வையிட வந்தார். அதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்தவரை நேர்ல பார்க்க, குப்பமே முண்டியடிச்சு நிக்குது. செக்கச் செவேல்னு மனுஷன் ரோசாப்பூ மாதிரி கார்ல இருந்து இறங்கி வந்தார். முழங்கால் வரை தேங்கி நின்ன தண்ணி யில் அதிகாரிங்க இறங்கத்

தலைவன் இருக்கிறான்!

தயங்கி நின்னப்ப, நம்ம தலைவர் சர்வசாதாரணமா வேட்டியை மடிச்சுக் கட்டி இறங்கி விறுவிறுனு குடிசைப் பகுதியைச் சுத்திச் சுத்தி வந்து எல்லாருக்கும் ஆறுதல் சொன்னாரு. அன்னிக்குத் தண்ணியில இறங்கினவரு அப்படியே என் மனசுலயும் நிரந்தரமா இறங்கிட்டாரு. மறுநாள் எம்.ஜி.ஆர். கொடுத்த ஒரு மூட்டை அரிசி ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து இறங்குச்சு. தெய்வம்யா அவரு!'' -சுவாரஸ்ய ஃப்ளாஷ்பேக் சொல்லி எம்.ஜி.ஆர். புராணம் பேசத் துவங்குகிறார்  ராமா பாஸ்கரன். காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் அமைந்து இருக்கும் பாஸ்கரனின் தையல் கடைதான் ஓரிக்கைவாசிகளின் என்டர்டெயின்மென்ட் பாயின்ட்.

தலையில் தொப்பி, கண்ணாடி, கன்னத்தில் ரோஸ் பவுடர், எம்.ஜி.ஆரின் உடல் மொழி என அக்மார்க் எம்.ஜி.ஆர் அடையாளங்களோடு அமர்ந்து சின்சியராகத் துணி தைத்துக்கொண்டு இருப்பார் பாஸ்கரன். எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின்போது,  மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில், ஐந்து கிலோ கேக் என ஏரியாவை அமர்க்களப்படுத்திவிடுவாராம்.  எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அன்று  முழுக்க விரதம் இருப்பவர் ஏழைப் பெண்களுக்கு இலவசமாக துணிகள் தைத்துத் தருவாராம்.

''சைதாப்பேட்டையில் நான் வேலை செஞ்ச கடை முதலாளி  ஒரு தி.மு.க-க்காரர். ஒருநாள் பேச்சுவாக்கில் 'சினிமாக்காரங்க அரசியலுக்கு வந்ததால், நாடே குட்டிச் சுவராயிடுச்சு’னு சொன் னார். அப்ப தலைவர்தான் முதல் வர். எனக்கு எப்படி அப்படி ஒரு கோபம் வந்துச்சுனு தெரியலை... அவர் முகத்துல விட்டேன் ஒரு குத்து. ஸ்பாட்லயே ரெண்டு பல்லு கீழே விழுந்து பொலபொலன்னு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சிருச்சு. அவரு கத்திக் கூப்பாடு போட்டு ஆட்களை கூப்பிடுறதுக்குள்ள இறங்கி ஓடி வந்துட்டேன்.

தலைவன் இருக்கிறான்!

தலைவர் இறந்தப்ப, ஒரு துணிக் கடையில் வேலை செஞ்சுட்டு இருந்தேன். அப்போ சரியான கிறிஸ்துமஸ் சீஸன். பரபரப்பா யாவாரம் நடந்துட்டு இருக்குற நேரம். தலைவர் இறந்த தகவல் பரவி, ஊருக்குள்ள கலவர நிலவரம்.  முதலாளி பயந்துட்டார். 'நிறையத் துணி வாங்கிப் போட்டு இருக்கோம். அடிதடி ஆச்சுன்னா, மொத்தமும் நஷ்டம் ஆயிரும்டா’னு

அழ ஆரம்பிச்சுட்டார். சட்டுன்னு  கடை வாசல்ல பெரிய சைஸ் தலைவர் படத்தை வெச்சு மாலை போட்டுட்டு, தலைவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த, ராஜாஜி ஹாலுக்குப் போயிட்டேன்.

மறுநாள் வந்தப்போ, எந்தப் பிரச்னை யும் இல்லாம வேலை நடந்ததா, சந் தோஷமா சொன்னார் முதலாளி. பேட்டா பணத்தையும் ஜாஸ்தி கொடுக்க ஆரம்பிச்சுட்டார். அதுதான் தலைவர் ராசி!'' என்று எம்.ஜி.ஆர் பற்றி சிலாகித்துக்கொண்டே பேச்சைத் தொடர்கிறார். இடது கையின் கட்டை விரல் நகத்தை பிச்சுவா கத்தி நீளத்துக்கு வளர்த்து அதில் அ.தி.மு.க. கொடி போல வர்ணம் அடித்துவைத்திருக்கிறார் பாஸ்கரன். மற்ற விரல்களிலும் கறுப்பு, சிவப்பு, வெள்ளை வர்ணங்கள் மின்னுகின்றன. எம்.ஜி.ஆர். உருவம், கட்சிக் கொடி ஆகியவற்றை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரைந்து கொள்வாராம்.

தலைவன் இருக்கிறான்!

''அ.தி.மு.க-வுக்காகத் தேர்தல் பிரசாரத் துக்கு யாராவது விரும்பிக் கூப்பிட்டா, போவேன். ஒரு முறை பிரபல நடிகர் கலந்துக்கிட்ட கூட்டத்துல தலைவர் வேஷத்துல நான் மேடை ஏறினதும், எல்லோர் கவன மும் என் மேல் திரும்பிடுச்சு. அந்த வி.ஐ.பி தம்பிக்கு முகம் இருண்டுபோச்சு. தலை வரோட ஜெராக்ஸுக்கே இவ்வளவு மரி யாதைன்னா, தலைவரோட பவர் என் னன்னு புரிஞ்சுக்கோங்க தம்பி!'' - சிரிக்கி றார் எம்.ஜி.ஆர். பாஸ்கரன்.

- கிருபாகரன், படங்கள்: வீ.ஆனந்தஜோதி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு