Election bannerElection banner
Published:Updated:

ஓவியக் கலை ஓயாது!

ஓவியக் கலை ஓயாது!

##~##

வியம் மீது தீராக் காதல் கொண்ட 12 ஓவியர்கள் அடங்கி யது மகேந்திர பல்லவர் ஓவியக் கலைக் குழு. கடந்த வாரம் இந்தக் குழு, பார்வதி ஆர்ட் கேலரியில் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்து இருந்தனர். ஒவ்வோர் ஓவியத் திலும் பரவச ரசனை!

 ''இப்படி 12 பேரின் படைப்புகளும் ஒரே இடத்தில் இருந்தால், தனித்துவம் பாதிக்கப் படாதா?'' என்று கேட்ட நம்மிடம், ஓவியர் சங்கரலிங்கம், ''ஓர் ஆள் தனியாக ஷோ நடத்த குறைந்தபட்சம்

ஓவியக் கலை ஓயாது!

50,000 செலவாகும். அவ்வளவு செலவழிக்க எங்களால் முடியாது. செலவைக் குறைக்கவே, இம் மாதிரி குரூப் ஷோ!'' என்று நிலைமையை உணர்த்தினார். இவர் வரைந்த 'சீனப் பெருஞ்சுவர் வரிசையில் அமைந்து இருக் கும் தாஜ்மகால்’ ஓவியம், ரசனையான கவிதை.  ''இந்தியா - சீனா இடையே அணையாமல் ஒரு நெருப்பு கனன்றுகொண்டே இருக்கிறது. மனித வளத்தில் முந்தி நிற்கும் இவ்விரு நாடுகளும் இணைந்தால், உலகின் அசைக்க முடியாத சக்தி யாக மாற முடியும்!'' ஓவிய லாஜிக் சொல்கிறார் சங்கரலிங்கம்.

ஓவியக் கலை ஓயாது!

கார்த்திக்கின் ஓவியத்தில் கலர் கலரான புடவைகளில் பெண்கள் சிரிக்கின்றனர். ''சின்ன வயசு ரம்பாவின் முகச் சாயல் இருக்கே சார்!'' என்றால், ''மனசுல இருந்த உருவத்தை வரைஞ்சேன்... அவ்வளவுதான்!'' என்று வெட்கப்படும் இவரின் ஓவியங்களில், மயில், அன்னம் எனப் பறவைகளும் முக்கிய இடம் பிடித்து இருக்கின்றன. கொடைக்கானல் ஏரி, இந்தியா கேட் என இந்திய நிலப்பரப்புகளைக் காட்சிப்படுத்தி இருக்கும் லோகநாதன், கார்த்திக்கின் அண்ணன். இந்திய லேண்ட் மார்க் அனைத்தையும் தூரிகையால் தீட்ட வேண்டும் என்பதே லோகுவின் ஆசை.

''எங்கள் குழுவினருக்கு உள்ளேயே ஒருவருக்குஒருவர் இடையே கடும் போட்டி நிலவும். மற்ற வரிடம் இருந்து தனித்துத் தெரிய இந்தஸ்டைலை கற்றுக்கொண்டேன்!'' என்கிறார் பேனாவில் தூரிகை வரையும் முனுசாமி. கடவுள் விக்கிரகங் களை வரையும் ராக்கி, வாட்டர் கலரில் இயற்கையின் அதிசயத்தை அள்ளித்தெளிக்கும் ராஜ்மோகன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். சுந்தரமூர்த்தி கலர்ஃபுல் ஜெல் இங்க் பேனா ஓவியங்கள் வரைவதில் தேர்ந்தவர்.

ஓவியக் கலை ஓயாது!

''ரியலிஸ்ட்டிக் ஆக இருப்பதை அப்படியே வரைவதற்குப் பதில், போட்டோ எடுத்துட்டுப் போலாமே என மார்டன் ஆர்ட் ஓவியர்கள் வாதம் செய்யலாம். ஐந்து நொடியில்  போட்டோ எடுக்கும் விஞ்ஞானத்துக்கும், ஐந்து மாதங்கள்  வியர்வை சிந்தி உழைக்கும் ஓவியக் கலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. தினமும் அதிகாலை வாக்கிங் செல்லும் தூரத்தை இரு சக்கர வாகனத் திலும் கடக்கலாம். ஆனால், இரண்டும் ஒன்றாகாது!'' தங்கள் தரப்பு நியாயங்களை அடுக்குகிறார் ராமாராவ். கொஞ்சம் மிகைப் படுத்தப்பட்ட வளை கோடுகளும், கண் கவர் வண்ணங்களும்கொண்டது சாய் சம்பத்தின் ஓவியங்கள். மீடியாக்கள், ஓவியக் கலைக்குப் போதிய முக்கியத்துவம் தருவது இல்லை என்பது இவர்களின் பொது வருத்தம்.

ஓவியக் கலை ஓயாது நண்பர்களே..!

- மோ.அருண் ரூப பிரசாந்த், படம்: ஜெ.தான்யராஜு

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு