Published:Updated:

எப்படிப்பட்ட பெண்களை மனைவியாக எதிர்பார்க்கிறார்கள் இளைஞர்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எப்படிப்பட்ட பெண்களை மனைவியாக எதிர்பார்க்கிறார்கள் இளைஞர்கள்?
எப்படிப்பட்ட பெண்களை மனைவியாக எதிர்பார்க்கிறார்கள் இளைஞர்கள்?

எப்படிப்பட்ட பெண்களை மனைவியாக எதிர்பார்க்கிறார்கள் இளைஞர்கள்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டந்த வாரம் விஜய் டிவியின் 'நீயா நானா' நிகழ்ச்சியில், பெண்கள் பேசிய பேச்சுதான் ஒரு வாரம் கடந்தும் சோசியல் மீடியாவின் ஹாட் டாபிக். நமது வாட்ஸ்அப்பில் பெட்டியில் மீண்டும் மீண்டும் வந்து விழுகிறது. 'அப்பா கட்டின வீடு வேணும், 100 சவரன் நகை வேணும், 50 லட்சம் செலவுல கல்யாணம், வருஷத்துல ஒருநாள் கட்டின புடைவையை இன்னொரு நாள் கட்டக் கூடாது, பேரண்ட்ஸ் இருக்கும்போதே என் பேருக்கு சொத்துகளை எழுதிடணும்' எனப் பெரிய பட்டியலே போட்டார்கள். இவர்கள் உண்மையாகவே பேசினார்களா... பேசவைக்கப்பட்டார்களா என்ற விவாதமும் ஒரு பக்கம் ஓடியது. அது எப்படியோ இருக்கட்டும், இன்றைய இளைஞர்கள், எப்படிப்பட்ட பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையாக எதிர்பார்க்கிறார்கள்? இதோ, வெவ்வேறு துறைகளில் இருக்கும் சில வருங்கால மணமகன்கள் சொல்கிறார்கள்... 

மு.மணி, வழக்கறிஞர், தர்மபுரி. 

''கார், பங்களானு ஆசைப்படுற பொண்ணுங்களுக்கு நம்ம மேல அன்பு இருக்காது. எப்பவும் ஆடம்பர வாழ்க்கை மேலேதான் கவனம் இருக்கும். எனக்கு வர்ற பொண்ணுக்கு சொந்த வீடு எல்லாம் வேண்டாம். சொந்த ஊருனு ஒரு பேரு இருந்தால் போதும். சிட்டி லைஃப்பை விரும்பாத பொண்ணா இருக்கணும்.''

ரா.கோபிநாத், மருத்துவர், புதுச்சேரி. 

''இப்பதான் சார் பொண்ணு பார்த்துட்டு இருக்கேன். வரும் பொண்ணு டாக்டரா இருந்தா, மருத்துவத் தொழிலில் இருக்கிற கஷ்டத்தைப் புரிஞ்சு நடந்துப்பாங்க. பொதுவா, நான் எதிர்பாக்குறது ஒண்ணுதான். என் அப்பா, அம்மாவை நல்லா பார்த்துக்கணும். நானும் அவங்க அப்பா, அம்மாவை மதிச்சு கவனிச்சுப்பேன்.'' 

எ.அருள்செல்வன், காவலர், சென்னை. 

''வரதட்சணை எதையும் நான் எதிர்பார்க்கலை. சீதனமா அவங்களோட பெத்தவங்களுக்குச் சிரமம் கொடுக்காமல், இஷ்டப்பட்டுக் கொடுக்கிறதோடு வந்தால் சந்தோசம்தான். போலீஸ் வேலையில இரவு பகல்னு வேலை இருக்கும். அதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கணும். எனக்குக் கூட்டுக் குடும்பம்தான் பிடிக்கும். வரும் பொண்ணும் அந்த மாதிரி இருக்கணும்.'' 

ம.சதீஸ்வரன், மென்பொறியாளர், சேலம். 

''கறுப்போ, சிகப்போ... அதெல்லாம் முக்கியம் இல்லை. பொண்ணு பாக்க லட்சணமா இருந்தால் போதும். வரதட்சணை எதுவும் வேண்டாம். சாப்ஃட்வேர்ல இருக்குற பசங்க எல்லாம் படிச்சவங்க, பெரும்பாலும் மிடில் கிளாஸ்தான். நாங்க சம்பாதிக்கிறதை வெச்சே நல்ல குடும்பம் நடத்துலாம். வரும் பொண்ணு என அம்மா, அப்பாவை விழுந்து விழுந்து கவனிக்கணும்னு அவசியமில்லை. அவங்க மனசை நோகடிடுச்சு என்கிட்டே இருந்து பிரிக்காமல் இருந்தாலே போதும். ஹூமன் பீயிங்கோடு இருக்கிற பெண் கிடைச்சா சரி.'' 

ச.முரளி, விரிவுரையாளர். ஓசூர். 

''அழகு என்பது அப்பாற்பட்டது. குடும்பப் பெண்ணாகவும், நல்ல பழக்கவழக்கதோடும் இருக்கணும். யார் கிட்டேயும் சண்டை போடாமல், அனுசரிச்சுப் போகிற பொண்ணா இருக்கணும். இந்த விசயங்கள் மட்டும் இருந்தாலே தெய்வம்தான். வேற எதுவும் நாங்க எதிர்பார்க்கலை.'' 

கு.கார்த்திக், தனியார் நிறுவன ஊழியர், பெங்களூரு. 

''வரும் பொண்ணு என் உயரத்துக்கு இருக்கணும். எந்தப் பிரச்னையா இருந்தாலும் விட்டுக் கொடுத்துப் போகணும். வரவுக்கு ஏற்ற செலவு செய்யணும். முக்கியமா நம்மளைப் புரிஞ்சு நடந்துக்கணும் அவ்வளவுதான். நம்ம எதிர்பார்ப்பு பாஸ்.'' 

- அ.பா.சரவணகுமார் (மாணவப் பத்திரிகையாளர்)
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு