நாணயம் என் நண்பன்! |

|
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘நா ன் நாணயம் விகடன் படித்தேன். தினம் ரூபாய் 250-லிருந்து 350 வரை கூடுதலாகச் சம்பாதிக்கிறேன்’’ என்று பெருமை பொங்கச் சொல்கிறார் தங்கதுரை. இவர் தி.நகர் பாண்டிபஜாரில் நாரயணன் புக் மார்ட் நடத்தி வருபவர். ‘‘நாணயம் விகடன் ஆரம்பத்தில் இருந்தே கவனித்துவருகிறேன். முதல் இதழை அதிக விலை கொடுத்தெல்லாம் வாங்கத் தயாராக வாசகர்கள் வந்தாங்க. ஆனால், கையில் காப்பி இல்லைங்கற அளவுக்கு விற்பனை ஆச்சு. நானும் படிச்சுப் பார்த் தேன். இதழ் முழுக்க எல்லாமே பயனுள்ள பகுதியா, எல்லாப் பக்கங்களிலும் தெரிஞ்சுக்க றதுக்கு ஒரு விஷயம் இருந்தது. இந்தத் தொழில் வாய்ப்புகளை நாம் முயற்சி செய்தால் என்ன என்ற எண்ணத்தை உண்டாக்கு வதாகவும் இருந்தது. |

நாணயம் படிக்கப் படிக்க, ‘புத்தக விற்பனையோடு சேர்த்து கூடுதலாக ஏதாவது பிஸினஸ் செய்தாக வேண்டும்’ என்ற எண்ணம் எனக்குள் ஊற்றெடுத்தது. அந்தச் சமயத்தில் நாணயம் விகடனில் ‘தொழில் தொடங்கலாம் வாங்க!’ பகுதியில், ஐஸ்க்ரீம் கடை தொடங்குவது பற்றிய கட்டுரை வந்திருந்தது. அதைப் படித்ததும் ஐஸ்க்ரீம் பார்லர் வைப்பதில் தீவிரமாக இறங்கினேன். ஆனால், எங்கள் பகுதியில் பல ஐஸ்க்ரீம் கடைகள் இருந்ததால் என்னால் அந்தக் கடை வைக்க முடியவில்லை. ஆனாலும், கரும்பு ஜூஸ் கடை வைத்தால் நல்ல வியாபாரம் நடக்கும் என்று தெரிந்தது. அதை வைத்தேன். இப்போது தினமும் 250 முதல் 350 ரூபாய்வரை கூடுதல் வருமானம் கிடைக்கிறது’’ என்று ஒரேமூச்சில் பேசிமுடித்தார் தங்கதுரை. ‘‘இப்போது நாணயம் விகடனைப் படித்து சேமிக்கவும் ஆரம்பித்துவிட்டேன். புதுப்பிக்காமல் விட்டிருந்த என் குழந்தை களின் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை புதுப் பிக்க வேண்டும் என்ற பாதுகாப்பு எண்ணத்தை உருவாக்கியதும் நாணயம்தான். வருமானத்துக்கு மட்டுமல்ல... வாழ்க் கைக்கும் வழிகாட்டும் நாணயம் விகடன், நிஜமாகவே நல்ல நண்பன்தான்’’ என்கிறார் கரும்பைப் பிழிந்துகொண்டே! |