Published:Updated:

சந்தானத்தையே ‘அட!’ சொல்ல வைக்கும் சோஷியல் மீடியா பஞ்ச் டயலாக்ஸ்!

சந்தானத்தையே ‘அட!’ சொல்ல வைக்கும் சோஷியல் மீடியா பஞ்ச் டயலாக்ஸ்!
சந்தானத்தையே ‘அட!’ சொல்ல வைக்கும் சோஷியல் மீடியா பஞ்ச் டயலாக்ஸ்!

ஃப்ரெண்ட்ஸ்.. தறிகெட்டு ஓடும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என நம்மகிட்ட உள்ள எல்லாவிதமான சோஷியல் மீடியா கணக்குலேயும் சில புதிய சுவாரஸ்யமான டயலாக்குகள் வலம் வந்து, நம்மை வெகுவாக ஈர்க்கும். யூத் மத்தியில் இன்று பல விதமான பஞ்ச் டயலாக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்தாலும், அவற்றில் தத்துவங்களோடு அடங்கிய ஒரு சில பஞ்ச் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து, நம்மையும்.. "அட.., ஓ.., சூப்பர், வாவ்" என்று சொல்ல வைக்கின்றன. அவற்றில், சினிமா டயலாக்குகளைத் தவிர்த்து, ட்ரெண்டிங்கில் உள்ள அந்த அட்ராசிட்டியான பஞ்ச் டயலாக்கை இங்கே தொகுத்துத் தந்துள்ளோம்.

* ஆன்லைனில் கிடைக்கும் அன்பும், ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை.

* இதுவும் கடந்து போகும்... கடந்து போனால் பரவாயில்லை, ஏறி மிதிச்சி நம்மள சட்னி ஆக்கிட்டு தான் போகுது.

* வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு முதலில் தண்ணீர் கொடுப்பதுதான் இதுவரை பண்பாடாக இருந்தது. இப்ப, வைபை பாஸ்வேர்ட் கொடுப்பதே சிறந்த பண்பாடு.

 * தோசைகளின் எண்ணிக்கையைச் சட்னியின் தரமே தீர்மானிக்கிறது.

* முன்னே செல்பவனை விட்டு விடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான், உங்களை முந்திச்செல்ல முடியும்.

* திருக்குறளை வாழ்றதுக்காக படிச்சவங்கள விட, 'இரண்டு மார்க்' வாங்குகிறதுக்காக படிச்சவங்கதான் அதிகம்.

* வாழத் தெரியாம சாமியாரா போனவங்கிட்ட எப்படி வாழறதுன்னு கேக்கப் போகிறது ஒரு மூடர் கூட்டம்.

* காசுபணம் இல்லாம படிப்ப விட்டவன் நிறைய இருக்கான். ஆனா காசு இல்லைனு பீடி, சிகரெட், தண்ணி, கஞ்சா, குட்காவ விட்டவன் ஒருத்தன் கூட இல்ல. இதான் பாஸ் வாழ்க்கை.

* வாழ்க்கை ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி! ஒவ்வொருத்தர் கண்ணுக்கு ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும். ஒரு சிலருக்கு புரியாம கூட போயிருது. என்ன கொடும சார் இது?!

* இப்பவெல்லாம் Silence Please னு சொல்றதுக்கு பதிலா, ஒரு மோடம் வெச்சி WIFI Password குடுத்தா போதும் மயான அமைதி கெடச்சிடும்.

* 5000 ரூவா சம்பளம் வாங்கும்போது இருந்தா பற்றாக்குறை. லட்ச ரூவா வாங்கும்போது வந்தா, நாமதான் வாழத் தெரியாம வாழ்றோம் பாஸ்.

 * கல்வி கற்க புத்தகங்களை விட 'நோட்டுக்களே' அதிகம் தேவைப்படுகின்றன.

* சந்தோசமாக உள்ளவனிடம் மட்டுமே, இவ்வுலகம் நலம் விசாரிக்கும். கஷ்டத்திலே இருப்பவனோட தொலைபேசி எண்கள், கண்டிப்பாகப் பழைய செல்போனோடு தொலைஞ்சு போயிருக்கும்.

* Money மட்டுமே மதிக்கப்படுகிறது. மனிதம் பலரால் மிதிக்கப்படுகிறது.

* நம்மை நிராகரிக்கப்படும் இடத்தில், நம் கோபத்தை காட்டுவதைவிட.. சிரித்த முகத்தைக் காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி. அதான் மக்கா நெத்தியடி!

* பேச்சிலர்கள் சமையலின்போது, குக்கரின் உட்புறத்தை மட்டுமே துலக்குகிறார்கள். எங்களுக்குச் சுத்தம்தான் முக்கியம் பாஸ்.

* பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது.

* பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம்கூட, சில மனிதர்களிடம் இல்லை.

* வெட்டாதீர்கள்.. 'மழை தருவேன்' என்கிறது மரம். 'வெட்டுங்கள் மழை நீரைச் சேமிப்பேன்' என்கிறது குளம்.

* கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி, தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்.

* மதிப்பே இல்லாத பூஜ்ஜியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தி தன் மதிப்பை கூட்டியவன் தான் இந்தியன்.

* பாம்புக்குக் காது கிடையாது எனில், தவளை எப்படி தன் வாயால் கெடும். சொல்லுங்கண்ணே சொல்லுங்க! 

* நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை !

* பணம் மரத்தில் காய்க்குமானால் மனிதன் கோடாரிக்குப் பதிலாக ஏணியைத் தேர்வு செய்திருப்பான்.

* நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால், 'தன்னடக்கம்' என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது மிக அவசியம். உணர்ந்தவன் உயர்ந்து நிற்பான்.

* காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.

* அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது. அதற்குப் பல தோல்விகளும், சில துரோகிகளும் தேவை.

* நம்மட்ட ஒண்ணும்  இல்லாதபோது நம்மோட பொறுமை, எல்லாம் இருக்கும்போது நம்மோட நடத்தை, இதுதான் நம்மை நிர்ணயிக்கிறது.

* விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்!

* எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள். ஆனால், மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.

* இயல்பாக இருங்கள்; ஆனால், சாத்தியமில்லாதவற்றை அடையப் போராடுங்கள்!

தொகுப்பு:  

- ரா.அருள் வளன் அரசு