Published:Updated:

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

Published:Updated:
ஸ்பெஷல்
ஹலோ வாசகர்களே,
 

நா ணயம் விகடன் மீது நீங்கள் காட்டும் அன்பும் பரவசமும் எவ்வளவு உயரம் என்பதைக் காட்டும் அளவுகோலாக அமைந்தது திருச்சியில் பிரமாண்டமாக நடந்து முடிந்த நாகப்பன் - புகழேந்தியின் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சி! கோவை, திருச்சி வாசகர்கள் கொடுத்த உற்சாக வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ஊர்களிலும் இது தொடரும். அதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும்!

தேர்தல் முடிந்து புதிய தி.மு.க அரசு பதவியேற்றிருக்கிறது. முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே, அதே அரங்கிலேயே தன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளில் சுறுசுறுவென இறங்கிவிட்டார் முதல்வர். ‘அவரது மொத்த வாக்குறுதித் திட்டங்களையும் எப்படி நிறைவேற்றப் போகிறார்... ஆயிரக்கணக்கான கோடிகளில் ரூபாய் துண்டு விழப்போகிறதே... அதை எப்படிச் சமாளிக்கப் போகிறார்?’ என்பதுதான் பொதுமக்களின் குறிப்பாக, மத்திய வருவாய்ப் பிரிவினரின் கேள்வி... கவலை! அந்த பட்ஜெட் சவாலைச் சமாளிக்க, இந்த இதழில் முன்னெச்சிரிக்கையாக பொருளாதார வழிசொல்கிறார்கள் வல்லுநர்கள்.

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், முதலீடில்லா தொழில் வாய்ப்புகள்... என்ற ஆச்சர்யங்களின் வரிசையில் மேலும் ‘பாதுகாப்பான’ தொடர் ஒன்றும் வரப்போகிறது. இன்ப அதிர்ச்சிக்கு உள்ளே வாருங்கள்.

அள்ள அள்ள வேலைவாய்ப்பை வழங்கும் அனிமேஷன் துறை கிடுகிடு வளர்ச்சி பெற்று, அடுத்த பத்தாண்டுகளுக்காவது இளைஞர்களின் மனதில் ஆட்சியில் இருக்கும் என்பது புரிகிறது. அதில் உள்ள வாய்ப்புகளை விரிவாகத் தந்திருக்கிறோம்.

ரியல் எஸ்டேட் துறையில்தான் எத்தனை வருமான வாய்ப்புகள்! புது வீடு கட்டுவது மட்டுமல்ல, கட்டிய வீடுகளைப் பராமரிக்க வழி சொல்வது... பூர்வீக வீடுகளைப் புதுப்பித்துத் தருவது என்று தாராள வருமானம் கொட்டும் அந்தத் தொழில் வாய்ப்புகளை அத்துறை நிபுணர்களிடம் கேட்டுப் பெற்றுத் தந்திருக்கிறோம், உங்களுக்காக!

விவசாயத்தில் லட்சங்களை அள்ளித்தரும் கோலியஸ் கிழங்குப் பயிர்... நர்சரித் தொழில் செய்தால் சுலபமாகக் கிடைக்கும் வருமானம் என்று இவ்விதழிலும் விவசாயக் கட்டுரைகள் உண்டு.

இன்ஷூரன்ஸ் பாலிசி கட்டுவதில், புத்திசாலித்தனத்தோடு செயல்பட்டால் எப்படி மிச்சம் பிடிக்கலாம்... ஒரு மாதத்துக்கு வாங்கும் அரிசி விலை பாதியாகக் குறைய என்ன செய்ய வேண்டும் என்ற சிக்கன சுவாரஸ்யங்களையும் பிடித்துத் தந்திருக்கிறோம்.

கத்தி மேல் நடப்பது போன்ற கிரெடிட் கார்ட் பயன்பாட்டில் எப்படி கவனமாக இருக்கவேண்டும்... சரிவுக்குத் தயாராகும் பங்குச் சந்தையில் எப்படிப் புகுந்து புறப்பட்டு வரவேண்டும் என்ற எச்சரிக்கைகளும் காத்திருக்கின்றன.

கவனம் கூட்டிப் படியுங்கள்... பணத்தைப் பெருக்குங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism