Election bannerElection banner
Published:Updated:

கலாய்ப்பு... கலகலப்பு... கையோடு பரிசு!

புதுவையில் என் கொண்டாட்டம்

##~##

ப்போதும் உற்சாகத்தில் மிதக்கும் புதுச்சேரியில் அன்று கூடுதல் உற்சாகம்! காரணம், விகடனின் 'என் கொண்டாட்டம்’!

 புதுவை ஸ்ரீ விஜயகணபதி ஸ்டோர்ஸுடன் விகடன் இணைந்து நடத்திய இந்தக் கொண்டாட்ட மேளாவின் போது

கலாய்ப்பு... கலகலப்பு... கையோடு பரிசு!

900-க்கு சந்தா கட்டினால்,

கலாய்ப்பு... கலகலப்பு... கையோடு பரிசு!

450 மதிப்புள்ள பரிசு. கேட்கவா வேண்டும் வரவேற்புக்கு. துள்ளி வந்து அள்ளிச் சென்றுவிட்டார்கள்!

ஒருபுறம் சந்தா கட்டியவர்களுக்குப் பரிசு என்றால், இன்னொரு புறம் ஹலோ எஃப்.எம். தொகுப்பாளர் மணி கேட்கும் மொக்கை கேள்விகளுக்குச் சரியாகப் (?)பதில் சொல்பவர்களுக்கும் பரிசு.

கலாய்ப்பு... கலகலப்பு... கையோடு பரிசு!

காலை 10 மணிக்குத்தான் கொண்டாட்டம் ஆரம்பம் என்றாலும் 9 மணியில் இருந்தே கூட்டம் குவியத் தொடங்கியது. முதல் சந்தாவைப் பதிவுசெய்த மூத்த வாசகரான டி.டி.குருமூர்த்தி, ''எனக்கு வயசு 60. என்னைவிட விகடனுக்கு 26 வயசு அதிகம். ஆனாலும், 26 வயசு இளமைத் துள்ளலுடன் விகடன் இருக்கு. கடைத் தெருவுக்கு முன்ன  மாதிரி நடந்து போயிட்டு வர முடியலைனுதான் விகடனை வீட்டு வாசலுக்கே இழுத்துட்டு வந்துட்டேன்!'' என்று சொல்லும் குருமூர்த்தியின் குரலில் குதூகலமும் பெருமிதமும். தொடர்ந்து கூட்டம் அதிகரித்தபடியே இருக்க, 'பாண்டிச்சேரி சண்டே மார்க்கெட் இன்னிக்கு இங்கேதான்போல’ என்று ஆனந்தமாக அலுத்துக்கொண்டு... வரிசையில் காத்து நின்று, சந்தாவினைப் பதிவுசெய்தார்கள் புதுச்சேரிவாசிகள்!

இரு கைகளிலும் பரிசுப் பொருட்களைத் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்து நகர்ந்துகொண்டு இருந்தார் காசிநாதன். ''நான் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர். லெண்டிங் லைப்ரரியும் நடத்தறேன். எனக்கு ஒண்ணு, என் லைப்ரரிக்கு ஒண்ணுன்னு மொத்தம் ரெண்டு சந்தா கட்டிட்டேன்!'' என்றார்.

கலாய்ப்பு... கலகலப்பு... கையோடு பரிசு!

இங்கே சந்தா கொண்டாட்டம் என்றால், உள்ளே ஹலோ எஃப்.எம் மணியின் லந்து கொண்டாட்டம். அவரிடம் முதலில் சிக்கினார் விஸ்காம் மாணவி நிஷ§. ''ஒன், ரெண்டு, த்ரீ, நாலு, ஃபைவ், ஆறு..... இப்படியே முப்பது வரைக்கும் சொல்லுங்க'' என்றார் மணி. 10 சொல்வதற்குள் தட்டுத் தடுமாறினார் நிஷ§. இருந்தாலும் மெள்ள மெள்ள மேடேறி 30 வரை சொல்லி முடித்து அழகிய பரிசு ஒன்றை வென்றார். அடுத்து குப்புசாமியிடம், 'புதுவையில் மொத்தம் எத்தனை சட்டமன்றத் தொகுதிகள்?’ என்று கேட்க, கொஞ்சம்கூட யோசிக்காமல் '32’ என்றார் குப்புசாமி. 'ஆஹா, மொத்தம் 30-தானே? இந்தப் பதிலை மட்டும் புதுவை முதல்வர் ரங்கசாமியோ, ரமணா விஜயகாந்த்தோ கேட்டா, ராத்திரி முழுக்கத் தூங்காம அழுவாங்களே!'' என்று கலாய்த்தார் மணி.

கலாய்ப்பு... கலகலப்பு... கையோடு பரிசு!

தன் குழந்தையுடன் வந்து இருந்தார் ஸ்ரீவித்யா. அவர் ஐந்து விதமான நகை பெயர்களைச் சொல்லி குழந்தையைக் கொஞ்ச வேண்டும். இதுதான் போட்டி. ஸ்ரீவித்யாவும் சிரித்துக்கொண்டே, 'என் கம்மலு, என் ஒட்டியாணம், என் கொலுசு, என் மெட்டி’ என்று விதவிதமாகக் கொஞ்ச... அவருடைய குழந்தையோ கூச்சத்தில் நெளிந்தது. 'தமிழ் தெரியாது’ என்று தப்பிக்கப் பார்த்த சோனலிடம் 'எஸ்.எம்.எஸ்’-ஸின் விரிவாக்கம் கேட்டு விடாப்பிடி வேதாளமாக நின்றார் மணி. அவரும் சிறிது நேரம் யோசித்து,  'ஷார்ட் மெசேஜ் சம்திங்’ என்று சொல்ல, 'சம்திங் இல்லைம்மா, சர்வீஸ்’ என்று திருத்தினார் சோனலின் அம்மா. நல்லம்மைக்கு ஒரு மொக்கை சவால். ஒரு எண்ணைச் சொன்னவுடன் அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய எண்களைச் சொல்ல வேண்டும். 54 என்றால் 53 மற்றும் 55... இப்படி! ஒவ்வோர் எண்ணாகச் சொல்லி இறுதியில் 0 என்று மணி சொல்ல, '1, மைனஸ் 1’ என்று சாமர்த்தியமாகப் பதில் சொன்னார் நல்லம்மை.

காதல் தம்பதிகளான ஆனந்த பத்மநாபன், புவனேஸ்வரிக்கு வித்தியாசமான போட்டி. 'மனசுக்குள்ள காதல் வந்துச்சா...'' என்று ஆனந்தன்  பாட... 'வந்தல்லோ வந்தல்லோ' என்று புவனேஸ்வரி எக்கோ கொடுக்க வேண்டும். புவனேஸ்வரி கொஞ்சம் ஏகத்துக்கும் எக்கோ கொடுக்க, என்னவோ ஏதோ என்று சிலர் ஓடி வர, குழந்தைகள் குய்யோ முய்யோ என்று அழ, அந்த இடமே ரணகளம் ஆனது.  விகடன் வாசகி புவனேஸ்வரி விகட னைப் பற்றி சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ''எங்களை ஆனந்தக் கடலில் மூழ்கவைக்கும் ஆனந்த விகடன், அரசியல் ரகசியம் அம்பலம் ஆக்கும் ஜூனியர் விகடன், வழிகாட்டியாக... அன்னையாக... தோழியாக அவள் விகடன், ஆத்மார்த்த அமைதி, சக்தி தரும் சக்தி விகடன், சுட்டியைச் சுண்டி இழுக்கும் சுட்டி விகடன், வாகன உலகத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயும்  மோட்டார் விகடன், சேமிப்பு மற்றும் முதலீட்டு மேலாண்மை சொல்லித் தரும் நாணயம் விகடன், பசுமைப் புரட்சிக்கு வித்திடும் பசுமை விகடன்... இந்த வரிசை இன்னும் அதிகரிக்க எங்களுக்கு ஆவல். உங்களுக்கு?’ என்று ஒலி நயத்தோடு சொல்ல, கூடி இருந்தவர்கள் தங்களை மறந்து கை தட்டினர்.

கலகலப்பு, விறுவிறுப்பு, விகடனுக்கும் வாசகர்களுக்குமான அரவணைப்புமாக உணர்ச்சிகளின் கலவையாக நடந்து முடிந்தது அந்தக் கோலாகலக் கொண்டாட்டம்!

நா.இள.அறவாழி, படங்கள்: பா.கந்தகுமார், ச.வெங்கடேசன், எஸ்.தேவராஜன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு