Published:Updated:

புதிய அம்சங்களுடன் வருகிறது ட்ரு காலர்!

புதிய அம்சங்களுடன் வருகிறது ட்ரு காலர்!
புதிய அம்சங்களுடன் வருகிறது ட்ரு காலர்!

செல்போன்களில் அழைப்பவர்களை அறிந்துகொள்ள பயன்படும் ட்ரு காலர் ஆப் புதிய அம்சங்களுடன் வருகிறது. போனில் அழைப்பவர்களின் தகவல்களைத் தெரிந்துகொள்ள ட்ரு காலர் ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய மாற்றங்களுடன் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய அம்சங்களுடன் வருகிறது ட்ரு காலர்!


ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்துள்ள ட்ரு காலர், வரும் ஏப்ரல் முதல் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வரும் அழைப்புகள் குறித்த குறுஞ்செய்திகளை அனுப்ப உள்ளது. மேலும், பிளாஷ் மெசேஜியுடன் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், டிஜிட்டல் இந்தியாவின் தேவைக்கேற்ப, மின்னணு பணப் பரிமாற்றம் செய்யும் ஆப்களுக்கு போட்டியாக, ட்ரு காலர் பே என்ற புதிய வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. பேடிஎம் போல இனி ட்ரு காலருக்கு பயன்படுத்தும் வகையில் களம் இறங்குகிறது.