Published:Updated:

சபதம் நிறைவேறலைன்னா படையப்பன் மூச்சு நின்னு போச்சு! #ResolutionAtrocities

சபதம் நிறைவேறலைன்னா படையப்பன் மூச்சு நின்னு போச்சு! #ResolutionAtrocities
சபதம் நிறைவேறலைன்னா படையப்பன் மூச்சு நின்னு போச்சு! #ResolutionAtrocities

சபதம் நிறைவேறலைன்னா படையப்பன் மூச்சு நின்னு போச்சு! #ResolutionAtrocities

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நம்மாளுங்க நிறைவேத்துறாங்களோ இல்லையோ ஆனா எது எதுக்கெல்லாம் முக்கியமா சபதம் எடுக்குறாங்கனு பாருங்க நட்பே... கடைசியில சொல்ற எதையும் செய்யாம மறுபடியும் சில நாட்கள் கழிச்சு அதே ஆட்டத்தை ஆரம்பிப்பாங்க. சத்தியமெல்லாம் நமக்குச் சர்க்கரைப் பொங்கல்...

ஜிம்முக்குப் போறேன்... ஜிம்முக்குப் போறேன்...

பீட்சா, பர்கர் சாப்பிட்டுப் பெருத்துப்போன நண்பன் எல்லா குரூப்லேயும் இருப்பான். என்ன மச்சி லைட்டா தொப்பை வெளியே தெரியுதேனு சொன்னா போதும். டோன்ட் வொர்ரி டியூட். அடுத்த திங்கட்கிழமை ஜிம்முல ஜாயின்ட் பண்றேன். ஷூ, டி-சர்ட் எல்லாம் வாங்கியாச்சி, ரெண்டு மாசத்துல ரேன்டி ஆர்ட்டன் மாதிரி சிக்ஸ்பேக் வைக்கிறேன்டா. இது என் மாமியா மங்கம்மா மேல சபதம்னு ஃபிலிம் காட்டுவாங்க.. ரெண்டு மாசம் கழிச்சி பார்த்தா லார்ஜ்ல இருந்து எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸுக்கு மாறியிருப்பாங்க. மேட்டர் என்னன்னா சோத்துக்கு முன்னாடி, பண்ணின சத்தியமெல்லாம் சின்ன சைஸா மாறிடும். ஆமா!

நியூ இயர் சபதம் :

வருசா வருசம் நியூ இயர் சபதம் எடுக்கிறதுல நம்ம ஆளுங்களை அடிச்சிக்கவே முடியாது. ‘நீ வேணா பாரு. இன்னையோட எல்லாம் கடைசி. இனிமே இந்த கருமத்தைக் குடிக்கவே மாட்டேன்.. சிகரெட்டைக்கூட நிறுத்தப்போறேன்.. ப்ராமிஸ் டியூட், பிலிவ் மீனு ரொம்ப உருக்கமா பேசுவாங்க. இவன்தான்டா நம்ம ரோல்மாடல்னு பெருமையா நினைப்போம். நாமளும் எல்லாத்தையும் விட்டுடணும்னு யோசிப்போம். அடுத்தநாளே போன் பண்ணி ‘மச்சி ஆபீஸ்ல பிரச்னை. சரக்கு போடலாமா'னு சொல்லிப் பதறவைப்பாங்க. நியூ இயர் சபதத்தை எல்லாம் எடுக்குறதோட சரி... நிறைவேத்தணும்னுலாம் சொன்னா எப்படிப்பா ..? 

காதல்யோகி :

இந்த கேட்டகிரி ஆளுங்கெல்லாம் வேற லெவல். இவங்க சத்தியத்தை எல்லாம் காத்துலதான் எழுதணும். உருகி உருகி லவ் பண்ணுவாங்க. பிரேக் ஆப் ஆனதும் நேரா நம்மகிட்ட தான் வந்து கடையை விரிப்பாங்க. நானும் அவளும் 5 வாரமா உயிருக்கு உயிரா லவ் பண்ணோம். உனக்கு தெரியும்ல பங்கு, என் லவ் எவ்ளோ பியூர்னு. இப்போ பிரேக் அப்னு சொல்லிட்டா மச்சினு சென்டிமென்ட் காட்டுவாங்க. இனிமே லவ்வே பண்ண மாட்டேன்னு டயலாக் விடுவாங்க.  நம்ம நண்பனு பெருமையா நினைச்சிப்போம். ஆனா, அடுத்தநாளே ஏதாவது ஒரு லேடீஸ் காலேஜ் வாசல்ல நின்னுட்டு இருப்பான் இந்த அட்டகத்தி. அட... ஆடி போனா ஆவணி..! 

அடுத்த செமஸ்டர்ல பாரு மச்சி...

பொண்ணுங்ககிட்ட எப்படி வயசைக் கேட்கக்கூடாதோ அது மாதிரி பசங்ககிட்ட அரியரைப் பற்றி கேட்கக் கூடாது. பசங்க வயசும் அரியர்ஸ் கணக்கும் ஒண்ணாதான் இருக்கும். அடுத்த செமஸ்டர்ல பாரு மச்சி மொத்த அரியரையும் கிளியர் பண்றேன். அப்படி இல்லைனா இந்த படையப்பா மூச்சி நின்னுப்போச்சினு பில்டப்லாம் கொடுப்பாங்க. கேட்க நல்லாதான் இருக்கும். ஆனா முதல் செமஸ்டர்ல வெச்ச அரியரை 6-வது செமஸ்டர்லதான் கிளியரே பண்ணுவாங்க.

ஏன் ப்ரோ, தேர்தல்ல ஜெயிச்சா இதைப் பண்றேன், அதைப் பண்றேன்னு சத்தியம் செய்ற அரசியல்வாதிகளெல்லாம் இந்த லிஸ்ட்ல வர மாட்டாங்களானு அப்பாவியா நீங்க கேட்டா 'ஐ யம் ஸாரி பாஸ்' !

- மா.முருகேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு