Published:Updated:

ஃபேஸ்புக்குல இந்திப்பேரு... ட்விட்டர்ல 70 வார்த்தை! - இன்'டியூஸன்' அட்ராசிட்டீஸ் #VikatanFun

ஜெ.வி.பிரவீன்குமார்
ஃபேஸ்புக்குல இந்திப்பேரு... ட்விட்டர்ல 70 வார்த்தை! - இன்'டியூஸன்' அட்ராசிட்டீஸ் #VikatanFun
ஃபேஸ்புக்குல இந்திப்பேரு... ட்விட்டர்ல 70 வார்த்தை! - இன்'டியூஸன்' அட்ராசிட்டீஸ் #VikatanFun

ரோட்டுல இருக்குற மைல்கல்லுல லாம் இந்தியில ஊரு பேர்களை எழுதி வச்சு இந்தியை தமிழ்நாட்டுக்குள்ள கொண்டுவர ப்ளான் பண்ணிருக்காங்க. ஃபியூச்சர்ல இன்னும் என்னென்னலாம் அட்ராசிட்டீஸ் பண்ணவாங்களோனு நினைச்சுப்பார்க்கும்போது..

மைல் கல்லுல இந்தியை எழுதுனமாதிரி பஸ் ரூட் போர்டுலேயும் இந்தியில ஊர் பேருகளை எழுதிப்போட்டு இந்தியை வளர்க்கலாம். தமிழ் தெரியாம  'இந்தப்பஸ்ஸு எங்கே போகுது?'னு இந்திக்காரங்க அட்ரஸ் கேட்ட காலம்போயி, இந்தப்பஸ்ஸு எங்கே போகுதுனு இந்திக்காரர்கள் கிட்ட தமிழ்நாட்டுக்காரங்க அட்ரஸ் கேக்குற காலம் வந்தாலும் வரலாம்.

இந்திக்கு சப்போர்ட் பண்ணலைனாலும் அங்கேருந்து வந்த பானிபூரி, பேல்பூரிகளுக்கு நம்ம ஆட்கள் பலபேரோட சப்போர்ட் இருக்கத்தான் செய்யுது. ஆகவே கண்ணாடியைத்திருப்புனா எப்படி ஆட்டோ ஓடும்னுலாம் நினைக்காம இந்தியில கேக்குறவங்களுக்குத்தான் பானிபூரிகளை பார்சல் பண்ணனும்; பேல்பூரிகளை பிரசன்ட் பண்ணனும்னுலாம் குண்டக்க மண்டக்க சட்டங்களையும் போட்டாலும் போடலாம்.

அப்படியே இந்தப்பக்கம் வந்தா சினிமா ஏரியா. ஏற்கனவே படங்களுக்குத் தமிழில் பேர் வச்சா வரிவிலக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்குறமாதிரி, இனிமே இந்தியில பேருவச்சா நாங்களே 20சதவிகிதம் ப்ரொடியூஸ் பண்ணுவோம்னு அதுபோக பேனர், பால்பாக்கெட் செலவுகளெல்லாம் கூட சேர்த்துப்பார்ப்போம் னு சொன்னாலும் சொல்லலாம்.  (ஆனாலும் தமிழ்ல பேரு வைங்க, இந்தியில பேரு வைங்கனுலாம் சொல்லுறவங்க படத்துல கொஞ்சம் கதையும் வைங்கனுலாம் சொல்லவே மாட்டாங்கங்கிறது வேற விஷயம்.)

அப்புறம் இங்கிட்டு இருக்குறது சோசியல் மீடியா குறிப்பா ஃபேஸ்புக். ஆல்ரெடி அந்தப்பேரு வைக்கக்கூடாது இந்தப்பேரு வைக்கக்கூடாதுனுலாம் ரூல்ஸ் கிளம்பினதுமாதிரி, யாரு யூஸ் பண்ணுனாலும் இந்தியிலதான் பேர் வச்சிக்கணும்னு ஸ்ட்ரிக்டா சொன்னாலும் சொல்லலாம். போனஸாக இந்தியில பேரு வச்சிருக்க யூஸர்களுக்கு ஆட்டோ லைக்காக ஒவ்வொரு ஸ்டேட்டஸுக்கும் 100 லைக்ஸ் போடுவோம்னு சொல்லியும் கிளப்பி விடலாம். லைக்ஸுக்கு ஆசைப்படாத ஃபேஸ்புக் போராளீஸ் யாருங்க இருக்கா.

ஃபேஸ்புக்குல கைவச்சிட்டு ட்விட்டர்ல மட்டும் வைக்காம போயிடுவாங்களா.. ட்வீட் எவ்வளவு வேணா போட்டுக்க ஆனா 140எழுத்துக்குள்ளதான் போடணும்னு ஆல்ரெடி இருக்குற ரூல்ஸ்ல 140 எழுத்துல நீ என்னத்த வேணா போட்டுக்க ஆனா அதுல 70எழுத்து இந்தியிலதான் இருக்கணும்னு சொல்லி ஆர்டர் போட்டாலும் போடலாம்.
ஹ்ஹ்ம்ம்.. இதுலாம்  வேணாம்னு நீங்க கதறுனாலும், கம்ப்ளைன்ட் பண்ணாலும் 'ஆங்க்.. அதையும் இந்தியில பண்ணு'னு கூலாகச் சொன்னாலும் சொல்லுவாங்க.


ஜெ.வி.பிரவீன்குமார்