Published:Updated:

ஒரே பாட்டுல ஆபிசர் ஆக நாம என்ன சிம்புவா?! - ரீல் டு ரியல் காமெடி

தார்மிக் லீ
ஒரே பாட்டுல ஆபிசர் ஆக நாம என்ன சிம்புவா?! - ரீல் டு ரியல் காமெடி
ஒரே பாட்டுல ஆபிசர் ஆக நாம என்ன சிம்புவா?! - ரீல் டு ரியல் காமெடி

ஒரே பாட்டுல ஆபிசர் ஆக நாம என்ன சிம்புவா?! - ரீல் டு ரியல் காமெடி

ரு சில விஷயங்கள் எல்லாம் படத்தில் மட்டும்தான் நடக்கும். அதை எல்லாம் பார்த்து அலைபாயுற நம்ம மனசை அப்படியே தொலையவிடுறதும் அதுல இருந்து மீண்டு நீச்சலடிக்கிறதும் நம்ம கையிலதான் இருக்கு. உண்மையான வாழ்க்கைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கு மக்களே. அப்படி என்ன விஷயங்கள்? வாங்க பார்ப்போம்!

* நீங்க லவ் பண்ற பொண்ணு உங்களை லவ் பண்ணலைன்னா ஒரு நாள் கண்டிப்பா லவ் பண்ணும்னு நம்பிக்கை வெச்சு கொஞ்சம் அந்த பொண்ணுகிட்ட இருந்து தள்ளி இருக்குறதுதான் பெட்டர். இல்ல நான் பின்னாடியே சுத்தி... ரெமோ பட சிவகார்த்திகேயன் மாதிரி நர்ஸ் வேஷம் போட்டுகிட்டு தீம் மியூசிக் போட்டு பாட்டு பாடுவேன்னு நினைச்சா... உங்களுக்கு கீழ்ப்பாக்கம்தான். அதனால... அது மாதிரி விஷயங்களை கைவிட்டுட்டு ஆகுற வேலையை பாருங்க மக்களே.

* உங்களுக்கு எந்த ஏரியா பிடிச்சிருக்கோ அந்த ஏரியாவுலேயே கடுமையா முயற்சி பண்ணி வேலை பார்த்து வெற்றியை தேடி வர வைங்க. அதை விட்டுட்டு பழி வாங்குறதுக்காக நான் போலீஸ் ஆவேன், சி.பி.ஐ ஆவேன்னு கனவு மட்டுமே கண்டுகிட்டு இருக்காதீங்க. நாம ஒண்ணும் 'அச்சம் என்பது மடமையடா' சிம்பு இல்லை... சரியா?

* இது ரொம்ப சீரியஸான விஷயம். கேட்கலைன்னா ரத்தக்காயம் தான். படத்தில சண்டைக் காட்சிகள் எல்லாம் நம்ம டைம்பாஸுக்காகத்தான். அதெல்லாம் பார்த்தோமா, அங்கேயே கையைத் தட்டினோமானு அடுத்த வேலையைப் பார்க்க போய்டணும். அதை விட்டுட்டு கங்கா சந்திரமுகி அறைக்குப் போனா... கங்கா சந்திரமுகியா நின்னா... கங்கா சந்திரமுகியாவே ஆகிட்டான்னு இருந்தோம்னா சோலி முடிஞ்சிரும். அடிக்க வர்றவங்ககிட்ட கட்டிப்பிடி வைத்தியத்தை யூஸ் பண்ணிடுங்க. 

* லவ் பண்ற பொண்ணு வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னா அஹிம்சை வழியிலதான் முயற்சி பண்ணணும். படத்துல வர்றது மாதிரி பொண்ணோட அண்ணன் கூட சண்டை போடுறது, தில்லாலங்கடி வேலை பாக்குறது மாதிரியான வேலை எல்லாம் பார்த்தோம்னா நமக்கு அப்புறம் வாய்ப்பே இல்ல. தெரிஞ்சுக்கோங்க. 

* இப்போ நிறைய படத்துல டீச்சர் - ஸ்டூடண்ட் லவ் சீன் எல்லாம் வருது. நிஜத்துல அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. அப்படி லாஜிக் இல்லாம நடக்க நாம நிவின் பாலியும் கிடையாது. காலேஜுக்கு வந்தோமா, ஃப்ரெண்ட்ஸோட அரட்டை அடிச்சோமா, அடுத்தவன் சாப்பாட்டை பிடுங்கி சாப்பிட்டோமா, வீட்டுக்கு போனோமா?னு இருந்துட்டு போயிடணும். 

* ஹாலிவுட்டில் ஆரம்பித்து கோலிவுட் வரைக்கும் கார் மற்றும் பைக்குகளில் பல ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இனிமேலும் இடம்பெறும். அதையெல்லாம் வாவ்டானு வாயை திறந்து பார்க்கிறதோட நிறுத்திக்கணும். நிஜத்தில நானும் அப்படி பண்ணுவேன்னு நினைச்சா தூக்கி அடிச்சுரும் மக்களே. உங்களுக்காகவே ஒரு கேப்ஷன் போடுவாங்களே - டோன்ட் ட்ரை திஸ் அட் ஹோம்.

படங்களைப் பார்த்து நாமதான் அதுல வர்ற ஹீரோன்னு நினைச்சுகிட்டு அக்கப்போர் பண்றவங்கதான் இங்கே ஏராளம். அவங்களுக்காகத்தான் இது. படத்தை படமா மட்டுமே பாருங்க மக்கழே!

- தார்மிக் லீ

அடுத்த கட்டுரைக்கு