Published:Updated:

சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்! #HBDJackiechan #VikatanExclusive

சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்! #HBDJackiechan #VikatanExclusive

சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்! #HBDJackiechan #VikatanExclusive

சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்! #HBDJackiechan #VikatanExclusive

சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்! #HBDJackiechan #VikatanExclusive

Published:Updated:
சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்! #HBDJackiechan #VikatanExclusive

ப்ரல் 7, 1954-ல் பிறந்தவர் 'ஜாக்கி சான்'. ஹாங்காங்கைச் சேர்ந்த இவர் ஒரு மார்ஷியல் ஆர்ட்டிஸ்ட், ஆக்டர், டைரக்டர், தயாரிப்பாளர், ஸ்டன்ட் மேன், சிங்கர் என சினிமாவில் என்னென்ன துறைகள் உள்ளனவோ அனைத்திலும் தன் திறமையை வளர்த்துக்கொண்டார். 1960-ல் அவரது சினிமா பயணத்தைத் தொடங்கி 150-க்கு மேல் படங்கள் நடித்திருக்கிறார். அந்த ஜாம்பவானைப் பற்றி சில விஷயங்கள்!

* ஜாக்கியின் உண்மையான பெயர் 'சான் காங்-சாங்'. என்ன பாஸ் வாயிலேயே நுழையலையா? சார்கஸ் என்பவர், சீன அரங்கத்திற்கு ஸ்பையாக வேலை பார்த்து வந்தபோது 'லிலி'யைச் சந்தித்தார். அவர் ஒரு ஸ்டேஜ் பெர்ஃபார்மர். அது மட்டுமின்றி அபின் போன்ற போதைப்பொருள் டீலர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சார்லஸ், லிலியைக் கைதுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின் உண்மை உணர்ந்து லிலியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் சார்லஸ். இந்தத் தம்பதியினருக்கு பிறந்தவர் ஜாக்கி சான். இவருக்கு ஏழு வயது இருக்கும்போது ஜாக்கியை ஹாங்காங்கிலேயே விட்டுவிட்டு ஆஸ்திரேலியா சென்றுவிட்டனர் பெற்றோர்கள். காரணம் வேலையின்மை. ஜாக்கி சான் படித்த பள்ளி ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும் வகுப்பு, நள்ளிரவில்தான் முடியும். அதற்கு நடுவில் அவரது அப்பா சிறு வயதில் சொல்லிக்கொடுத்த குங்ஃபூவை ரெகுலராகப் பயிற்சி செய்து வந்தார். அதுமட்டுமில்லாமல் நாடகம், இசை, போன்ற துறைகளிலும் ஈடுபாடு அதிகமாக இருந்தது. தன்னுடைய ஏழாவது வயதில் 'பிக் அண்ட் லிட்டில் வாங் இன் டின் பார்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தன்னுடைய 17-வது வயதில் 'புரூஸ் லீ' நடித்த 'ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி', 'என்டர் தி ட்ராகன்' படத்தில் நடித்த எதிரிகளுள் ஜாக்கியும் ஒருவர். புரூஸ் லீயின் இறப்பிற்குப் பின் புதிய புரூஸ் லீ என்று ஜாக்கியைப் புகழ்பாடினர். 

* இவரது சிறப்பம்சங்கள் என்று லிஸ்ட் எடுத்தால் ஏராளமான விஷயங்களைப் பட்டியலிடலாம். சண்டையில் எப்படி பாஸ் காமெடி பண்ணுவது?னு கேள்வி கேட்கிறவங்களுக்கு மத்தியில் அதிலேயும் ட்ரேட் மார்க்காக ஆனார் ஜாக்கி. ப்ரூஸ் லீ, டோனி ஜா, டானி யென் போன்ற ஆக்‌ஷன் நடிகர்களின் படங்களில் சண்டைக்காட்சிகள் எல்லாமே வேற லெவலில் இருக்கும். ஆனால் இவர் அவர்கள் லிஸ்டில் இல்லாமல் தனக்கென்று ஓர் அடையாளத்தை உண்டாக்கிக்கொண்டார். ஆம்... இவர் படங்களில் காமெடி கலந்த சண்டைக் காட்சிகள் ஏராளம். ரசிகர்களை நெகிழ வைப்பதில் ஆரம்பித்து சிரிக்க வைப்பது வரை ஜாக்கியை விட்டால் வேறு ஆளே கிடையாது. அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். குங்ஃபூ வகைகளுள் ஒன்றான ட்ரங்கன் பாக்ஸிங்கில் கிங் இவர். 'ட்ரங்கன் மாஸ்டர்' படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்.

* 1984-ல் 'வீல்ஸ் ஆன் மீல்ஸ்' எனும் படத்தில் உலகக் குத்துச்சண்டை சாம்பியனான பென்னி தி ஜெட் அர்குய்டெஸ் என்பவருக்கும் ஜாக்கிக்கும் சண்டைக் காட்சி இடம் பெற்றது. அதில் உண்மையிலேயே ஜாக்கியை அர்குய்டெஸ் அடித்துவிட்டார். அதில் கோபமான ஜாக்கி அவரைச் சண்டைக்கு அழைத்தார். அந்தக் காட்சி படத்திலும் இடம் பெற்றதையடுத்து  மிகுந்த வரவேற்பையும் பெற்றது. அதைத் தொடர்ந்து 1988-ல் வெளியான ஜாக்கியின் 'ட்ராகன்ஸ் ஃபார் எவர்' படத்திலும் அர்குய்டெஸ் இடம் பெற்றார். 

* ஜாக்கி, தான் நடிக்கும் எல்லாப் படங்களிலுமே சண்டைக் காட்சிகளிலும், ஸ்டன்ட் காட்சிகளிலும் டூப் போடாமல் உண்மையிலேயே அந்தக் காட்சியை தத்ரூபமாக நடிப்பதில் வல்லவர். 1986-ல் அவர் நடித்த படத்தில் கிளைகளைப் பிடித்து ஏறும் காட்சி ஒன்று இடம்பெற்றது. முதல் டேக்கில் திருப்தியடையாத ஜாக்கி இரண்டாவது டேக்கில் கிளைகளை பிடிக்க முடியாமல் 40 அடிக்கு மேலிருந்து கீழே ஒரு பாறையில் தவறி விழுந்துவிட்டார். அதன் விளைவாகத் தலையில் எலும்பு முறிந்து காதிலிருந்து ரத்தம் வரத் தொடங்கியது. சிகிச்சையின் முடிவில் வலதுகாதின் செவித்திறன் லேசாகக் குறைந்துவிட்டது. ஹாலிட்டில் இவர் செல்லமாக 'மிஸ்டர்.பெர்ஃபெக்ட் (Mr. Perfect) என்று அழைக்கப்பட்டார். 'ட்ராகன் லார்ட்' என்ற படத்தில் 10 நிமிடம் இடம் பெறும் காட்சிக்காக ஜாக்கி பல டேக்குகளை எடுத்தார். அதற்காக கின்னஸிலும் பெயர் பெற்றார். ஆனால் ஜாக்கிக்கு ஹாலிவுட்டில் மிகுந்த ஈடுபாடு இல்லை. 'ரஷ் ஹவர்', 'ஷாங்காய் நூன்' போன்ற ப்ளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்த பிறகு 'அமெரிக்கன் காமெடி என்ன ரகம்? என்றே எனக்குத் தெரியவில்லை' என ஒரு ப்ரஸ்மீட்டில் குறிப்பிட்டார்.

இப்படி இவரது புகழ்பாடும் தருணங்கள் ஏராளமாக உள்ளன. இப்படி நடிப்புக்கென்றே தன்னை அர்ப்பணித்த ஜாக்கிக்கு ஹேப்பி பிறந்தநாள்!  

- தார்மிக் லீ