Published:Updated:

பழைய சித்திரமும் புதிய பாத்திரமும்

பழைய சித்திரமும் புதிய பாத்திரமும்

பழைய சித்திரமும் புதிய பாத்திரமும்
##~##
கேரள நாட்டிலே பிறந்த ஸ்ரீ ரவிவர்மா, இந்தியாவின் இணையற்ற தேசிய சைத்ரிகர் ஆனார். கலாதேவியின் அருளுக்குப் பாத்திரரான அந்த மேதை சிருஷ்டித்த சித்திரங்களின் பிரதிகள் இப்போது கிடைப்பதே மிக அரிதாகிவிட்டது. இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில், அந்தப் பழைய சித்திரங்களை, புதிய (சினிமா நட்சத்திர) பாத்திரங்களின் பேருதவியோடும், ஜெமினி, பரணி, ரேவதி ஸ்டூடியோக்களின் ஒத்துழைப்போடும், 'ராவுஜி’ கலர் படங்களாகப் புதுப்பித்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 ரம்பை

தேவேந்திரனது கலை அரங்கை அழகுபடுத்திக்கொண்டிருந்த ஆடல் அழகியரில் ஒருத்தி இந்த ரம்பை. 'என்ன அழகு! என்ன அழகு! மேடை மீது வந்து நின்றால், ரம்பை மாதிரி இருப்பாள்!’ என்று ஓர் அழகியை வர்ணிக்க உபமானமாகச் சொல்லும் அளவுக்கு, குறைவற்ற அழகுள்ளவளாக விளங்குபவள் அந்தத் தேவலோக ரம்பை. ஆகவே, ஓர் அழகியை தமது சித்திரத்துக்கான பாத்திரமாக அமைத்துக்கொள்ள வேண்டுமென ஆசைகொண்ட அமர சைத்ரிகர் ரவி வர்மாவின் நினைவிலே, அமரலோக ரம்பை வந்து நின்றதில் வியப்பொன்றும் இல்லையே!

பழைய சித்திரமும் புதிய பாத்திரமும்

விசுவாமித்ர - மேனகா

ரு பெரிய பதவியைப் பெற புதிதாக ஒருவர் பெருமுயற்சி எடுத்துக்கொள்வதும் ஏற்கெனவே அந்தப் பதவியில் இருப்பவர் அந்த முயற்சியைப் பாழ்படுத்த சூழ்ச்சிகள் பல செய்வதும், இன்றல்ல நேற்றல்ல, புராண காலத்திலேயே சகஜமாக இருந்திருக்கின்றன என்பதற்கு விசுவாமித்ர - மேனகா கதை ஓர் உதாரணம். இந்திர பதவியை அடைய விசுவாமித்ரர் செய்த கடுந்தவத்தை கலைக்க, இந்திரன் பல ஆடல் ரம்பையரை அனுப்பினான். அவர்களில் ஒருத்தி மேனகை. தனது அழகாலும் ஆட்டத்தாலும், மூடிக்கிடந்த முனிவரது கண்களையும் உணர்ச்சிகளையும் விழிப்படையச் செய்தாள். அதன் பின் அவர் மேனகை வசப்பட்டார். அதன் பலனாகவே, காவ்ய உலகில் அமரத்துவமடைந்த சகுந்தலை ஜனனமானாள். 'குழந்தையின் அழகைப் பாருங்கள்’ என்று மேனகை கூறியதும் விசுவாமித்திரருக்கு விரக்தி ஏற்படுகிறது. உடன் 'விசுவாமித்ர கோபம்’ உதயமாயிற்று!

சுபத்திரா - அர்ஜுனா

கிருஷ்ண பரமாத்மாவின் இளைய சகோதரி சுபத்திரை. அவள் மீது, அர்ஜுனனுக்கு ஆசை பிறந்துவிட்டது. சுபத்திரையும் காண்டீபனையே நாயகனாகக்கொள்ள விரும்பினாள். இதுதான் சரியான பொருத்தம் எனத் தீர்மானித்தார் பரமாத்மா. ஆனால், அண்ணன் பலராமனது சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. ஆகவே, வழக்கம்போல அவர் செய்த ஒரு சூழ்ச்சியால், அர்ஜுனன் சந்நியாசி வேடம் பூண்டு துவாரகைக்கு வந்து சேர்ந்தான். அந்தச் சமயம், அரண்மனையில் உள்ள அனைவரும், ஒரு விழாவுக்காக வெளியூர் செல்ல நேர்ந்தது. அரண்மனைக்கு வந்த அதிதியைக் கவனித்துக்கொள்ள சுபத்திரையை விட்டுப் போகலாமென கண்ணன் யோசனை கூற, பலராமர் அதை ஏற்றுக்கொண்டார். அனைவரும் சென்ற பின், சுபத்திரையும் அர்ஜுனனும் அந்தரங்கமாகச் சந்தித்தார்கள்.

பழைய சித்திரமும் புதிய பாத்திரமும்

தமயந்தி

'அழகில் சிறந்த ஆரணங்காக விளங்குபவள் தமயந்தி. அவளை அடைபவனே பாக்கியசாலி’ என்று நிடத நாட்டு மன்னன் நளனிடம் கூறியது, அவன் பிடியிலிருந்து விடுதலை பெற்ற ஒரு பேசும் அன்னம். அவனுக்காக அதே அன்னம் தமயந்தியிடம் தூதாக வந்தது. 'புருஷர்களிலே உத்தமன் அவன்; தோள்வலி மிக்கவன்; மன்மதனும் கண்டு வெட்கும் கட்டழகன்; உனக்கேற்ற நாயகன்’ என்று அது தமயந்தியிடம் நளனைக் குறித்து வர்ணித்தது. கேட்டதும் காதல்கொண்டாள் தமயந்தி. அன்னத்தின் இனியமொழிகளை, அலர்ந்த முகத்தோடு அனுபவித்துக் கேட்டாள் அவள்.

சீதை

யோத்தியின் பட்டமகிஷியாகி அரண்மனையில் ஆனந்தமாகக் காலங்கழிக்க வேண்டியவள். ஆனால், விதிவலியால் ஆரண்யம் புகுந்து, ஆசிரமத்திலே வாசம் செய்யவேண்டியதாயிற்று ஜனக புத்திரி ஜானகிக்கு. விதி அவளை அதோடு விடவில்லை. அருகிலே வந்து தோன்றிய மாயமானைப் பிடித்துத் தருமாறு ராமனிடம் பிடிவாதம் செய்யும்படி தூண்டியது அந்த விதி. அந்த  மாயமானைத் துரத்திக்கொண்டு ராமனும் சென்றான். உடலும் நிழலும் போல ஒரு கணமும் தன் நாயகனை விட்டுப் பிரியும் பழக்கமில்லா சீதை, ராமன் சென்றபின், மனத்தில் ஒளியில்லாது தனித்துச் சென்று ஓரிடத்தில் அமர்ந்துவிட்டாள்.

பழைய சித்திரமும் புதிய பாத்திரமும்

ராதா-கிருஷ்ணன்

முனை நதிக்கரை, தென்றல் அந்தமாக வந்து வீசுகிறது. மென்மலர்கள் பூத்துக் குலுங்கி, காற்றோடு நறுமணத்தைக் கலந்து அனுப்புகிறது. காதலி ராதா, கண்ணனின் வரவை எதிர்நோக்கித் தன்னை மறந்து களிப்பின்றி அமர்ந்திருக்கிறாள். மேலாடை விலகினதையும் அவள் உணர்ந்தாளில்லை. அந்த நேரத்தில், தீராத விளையாட்டுப் பிள்ளையான கண்ணன், மெதுவாக ராதையின் பின்னால் வந்து அவளது தோள்களை மெதுவாகப் பற்றவே, ராதை பரவசமடைந்து இன்ப உலகில் மிதக்கலானாள். இந்தக் காட்சியையே ரவிவர்மா சித்திரித்திருக்கிறார்.