##~##

 ங்க வீட்ல பொட்டி நிறைய வெடி வெச்சிருக்கோம்!’

'எங்க அப்பா சிவகாசியில ஆர்டர் குடுத்துருக்காங்க. ஏ.பி.டி. பார்சல் சர்வீஸ்ல வருது. பெரிய கள்ளிப்பெட்டி நிறைய வரப்போகுது. உங்க வீட்ல வாங்குன வெடியெல்லாம் ஈசி, தூசி. சிவகாசில வாங்குனதுதான் சூப்பரா வெடிக்கும்!’

குடியிருப்புச் சிறுவர்களிடையே கிளம்பும் இப்படியான பேச்சுகளே தீபாவளித் திருநாளுக்குக் கட்டியம் கூறும்.

அப்பாவிடம், 'வெடி வாங்க இன்னைக்குப் போகலாமா?’ என்ற நச்சரிப்பு, தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கும். 'இன்னைக்கு மாசிலாமணி ஸ்டோர்ல வெடி வாங்கப் போறேனே..!’ என்று வகுப்புத் தோழர்கள் அனைவரிடமும் சொல்லிச் சந்தோஷப்படும் நாளில் இருந்து தீபாவளி குதூகலம் தொடங்கிவிடும். அண்ணனுக்கு வெடிகளும் தம்பி, தங்கைகளுக்கு மத்தாப்புகளுமாக பர்ச்சேஸ் நடக்கும்.

பாஸ்வேர்டு்

ப்போதுபோல எப்போது வேண்டுமானாலும் சட்டை, பேன்ட், சுடிதார்கள் எடுத்துக்கொள்ளலாம் என்ற நிலை அப்போது இல்லை. மதுரை ஹாஜிமூசாவில் துணி எடுத்து கிருஷ்ணா டெய்லரிடம் தைக்கக் கொடுத்துவிட்டு, 'தைச்சாச்சா... தைச்சாச்சா?’ என்று தினமும் அவரிடம் குடைச்சல் கொடுத்தால், 'இனி இங்கே வந்தீனா, கத்தரிக்கோல்ல மூக்க வெட்டிப்புடுவேன்’ என்று கோபம் கொள்வார். அந்தப் புதுத் துணிக் கனவில் எல்லாம் வரும். பெல் பாட்டம் பேன்ட்களும், டிஸ்கோ பட்டன் வைத்த சட்டைகளும் அப்போது ரொம்பவே பிரபலம். அடித்துப் பிடித்து கிருஷ்ணா டெய்லரிடம் இருந்து வாங்கிவந்த சட்டையை, 10 முறை போட்டுப் பார்த்தால்தான் திருப்தியாக இருக்கும். அந்த 'க்ளிக்-டக்’ பட்டன்களை படபடவெனக் கழட்டுவதற்காகவே சட்டையை அடிக்கடி போட்டுப் பார்த் தால், 'தீவாளிக்குள்ள அந்தப் பட்டனை யெல்லாம் புடுங்கிப் போட்ரு’ என்று அம்மா திட்டி சட்டையைப் பிடுங்கி பீரோவுக்குள் ஒளித்துவைப்பார்.

அப்போதெல்லாம் பண்டிகைகள் அந்த நாளை வழக்கமான நாளில் இருந்து வேறுபடுத்திக் காட்டின. மற்ற நாட்களின்

சந்தோஷங்களைவிட பண்டிகைக் காலம் என்பது எதிர்பார்ப்பும் குதூகலமும் நிறைந்ததாக இருந்தது. இப்போது தினந்தோறும் பண்டிகைகளாக மாறிப்போய், பண்டிகை நாட்கள்கூட சாதாரண நாட்களாகத் தெரிகின்றன.

'இன்னும் 20 நாட்களில் தீபாவளி’ என்ற நினைப்பே மனசுக்குள் துள்ளலை ஏற்படுத்திய காலம் மலையேறிவிட்டது.அதிகாலையிலேயே எழுந்து அரக்கப் பறக்க தீபாவளிப் பலகாரங்கள் செய்து, புதுத் துணிக்கு மஞ்சள் தடவி, எண்ணெய் தேய்த்து

வெந்நீரில் நீராடி, 'சாமிக்குப் படைக்கிறதுக்கு முன்னாடி சாப்பிடக் கூடாது’ என்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு வடைக்கும் சுழியத்துக்கும் பக்கத்திலேயே காவல் காத்துக்கிடந்த ஒரு பண்டிகைக்கு உரிய பண்பாட்டுப் புள்ளிகளை, வளர்ந்து விட்ட பொருளாதாரமும், நெருக்கிக் கொண்டே இருக்கிற வேலைப்பளுவும் காணாமல் செய்துவிட்டன.

'கடைவீதிக்குள்ள போகவே முடியலை. தீபாவளிக் கூட்டம் ஜேஜேன்னு இருக்கு’ என்ற நிலை மாறி, 'ஆடித்தள்ளுபடி கூட்டம் அள்ளுது’, 'இயர் எண்ட் சேல் கூட்டம் கும்முது’, 'அக்ஷயத்திருதியை டிராஃபிக் ஜாம் ஆகிவிட்டது’, 'பஜார் முழுக்க க்ளியரன்ஸ் சேல் கூட்டம்’ என்று ஏதாவது ஒன்று நடந்துகொண்டேதான் இருக்கிறது.

மனித வாழ்க்கை, கொண்டாட்டங் களால் நிரம்பிக்கிடக்க வேண்டும் என்பது நல்லதுதான். ஆனால், செயற்கையாக

உருவாக்கப்பட்ட சில 'சேல்ஸ் பண்டிகைகள்’ பாரம்பரிய விழாக்களின் அடர்த்தியையும் அழகியலையும் கெடுத்துவிட்டதுபோல சில நேரங்களில் படுகிறது.

ரு பண்டிகைக்காகக் காத்திருத்தலின் சுகம், தவிப்பு, கனவுகள் இவை எல்லாம் இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு

இல்லாமல் போய்விட்டதோ என்று சந்தேகம் வருகிறது.

'அட... உங்களுக்கெல்லாம் வயசாயிடுச்சி. இன்னமும் குழந்தைங்க தீபாவளிக்காகக் காத்துட்டுதான் இருக்காங்க. புது ட்ரெஸ் பத்தியும், பட்டாசுகள் பத்தியும் அவங்க கனவுகளோடத்தான் இருக்காங்க.

நீங்கள்லாம் வேலை வெட்டின்னு சுத்திக் கிட்டுத் திரியிறதால, 'தீபாவளி ஒரு விடுமுறை நாள்’ங்கிற அளவுக்குச் சுருங்கிட்டீங்க... அவ்ளோதான்’ என்று ஒரு பெரியவர் விளக்கம் சொன்னார். குறைந்தபட்சம் கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் தீபாவளி பழைய துள்ளலின் பாதி அளவிலாவது எதிர்பார்க்கப்படுகிறது.

பாஸ்வேர்டு்

சிட்டிகள், நியூ இயர் கொண்டாடுவதிலும், உலகக் கோப்பை ஜெயித்தால் பட்டாசு வெடிப்பதிலும் தீபாவளியைக் கொண்டாடுகின்றன. வளர்ந்துவிட்ட பொருளாதாரம், தீபாவளிக் கொண்டாட்டத்தை செலவு செய்வதற்கான சுதந்திரமான வாய்ப்பாகப் பார்க்கிறது.

15 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது தீபாவளி பளபளப்பாகவும்

பிரமாண்டமாகவும் இருந்தாலும், தீபாவளி என்ற அந்த பண்டிகைகுறித்த கனவுகளும் கற்பனைகளும் காத்திருத்தலும் இப்போது மிஸ்ஸிங்.

சென்னையில் தீபாவளித் துப்பாக்கி சண்டையெல்லாம், இப்போது இல்லை. 'அதான் தினமும் வீடியோ கேமில் யாரையாவது சுட்டுத்தள்ளுறோமே’ என்று விட்டுவிடுகிறார்கள். நான் சென்னைக்கு வந்த புதிதில் என் தீபாவளி விடுமுறையின்போது சாப்பிட கேன்டீன்கள் கிடைக்காமல் அலைவேன். ஊருக்குப் போக பஸ் கிடைக்காமல் கிடைத்தாலும் அவர்கள் கேட்கும் காசைக் கொடுக்க முடியாமல், 'சென்னைத் தீபாவளி’ கொண்டாடிய வருடங்களும் உண்டு.

'நம்ம ஊர்ல எல்லாம் என்னடா தீபாவளி கொண்டாடுறானுக. இங்க எல்லாம்

ஒவ்வொரு சேட்டு வீட்லயும் ஒரு லட்ச ரூபாய்க்கு பட்டாசு வாங்குவாங்க. மொட்டை மாடில நின்னு பார்த்தோம்னா கோடி ரூபாய்க்கு பட்டாசு வாங்கிக் கொண்டாடின மாதிரி இருக்கும்’ என்று நண்பர்கள் சொல்ல, தீபாவளியன்று பணக்காரர்கள் தயவில் கோடி ரூபாய் தீபாவளிகள் கொண்டாடியது உண்டு.

அதிகாலை நாலு மணிக்கு அம்மா எழுந்து பலகாரம் சுட்ட நாட்கள் போய் 'தீபாவளி பலகாரம் செட்’ கடைகளில் விற்கிறது. 'எங்கப்பா சிவகாசியில இருந்து பட்டாசு வாங்கிட்டு வருவாங்க’ என் றெல்லாம் இப்போது சீன் போட முடியாது. 'சிவகாசி விலைக்கே பட்டாசுகள்’ என்று எல்லா பட்டாசுக் கடை வாசலிலும் போர்டு தொங்குகிறது.

கல்யாண மண்டபம் பிடித்து பட்டாசுக் கண்காட்சி மாதிரி நடக்கும் விற்பனையில், வேண்டிய பட்டாசுகளின் நம்பர்களைக் குறித்துக் கொடுத்துவிட்டு டோக்கனோடு காத்திருக்கலாம். கிருஷ்ணா டெய்லரை மறந்து ரெடிமேட் சட்டைகளில் எல்லாமும் ஏழெட்டு எடுத்துக்கொள்கிறார்கள். இல்லாதப்பட்டவர்களின் வீட்டுப் பிள்ளைகள்தான் பழைய தீபாவளியின் துள்ளலோடு அதை அனுபவிக்கிறார்கள்.

'அப்பல்லாம் தீபாவளி எப்படி இருந்துச்சு தெரியுமா?’ என்ற நாஸ்டாலஜியாக்குள் மூழ்கிப் பெருமூச்சு விடுவது ஒரு பக்கம் கிடக்கட்டும். தீபாவளியை ஒரு பண்டிகையாக மட்டும் பார்த்த பழைய பிள்ளைகளைவிட அதன் தாக்கங்கள், சமூகக் கோணங்கள் என அதன் பல பரிமாணங்களை அறிவார்ந்த பார்வையோடுஅணுகும் நவீனக் குடிமக்களாகி இன்றைய குழந்தைகள் உயர்ந்து நிற்கிறார்கள்.

ஊடகங்கள் ஏற்படுத்திய தாக்கம், சமூகவியலாளர்கள், சேவை அமைப்புகள் நடத்திய பிரசாரங்கள், பள்ளிக்கூடங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்த பண்டி¬ககுறித்த சமூகப் பார்வை... என பல தகவல்கள் இந்தத் தலைமுறைக் குழந்தைகளை நிறைய யோசிக்க வைத்திருக்கின்றன. 'என் பட்டாசை எடுத்துக்கிட்டான்’ என்று அழுகிற பழைய பிள்ளைகளாக அவர்கள் இல்லை.

நான்கு வருடங்களுக்கு முன்னால் நடந்த பள்ளிக்கூட விழா ஒன்றில், 'நாங்கள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட மாட்டோம்’ என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். 'வெடி வெடிக்கிறதால நிறைய பொல்யூஷன் உண்டாகுது. குருவி, காக்கா எல்லாம் ஓடிப்போகுது. அதனால நான் பட்டாசு கொளுத்த மாட்டேன் அங்கிள்’ என்றான் ஒரு மாணவன்.

'எங்களை மாதிரி சின்னப் பசங்க நிறைய பேர் ஸ்கூலுக்குப் போகாம பட்டாசு கம்பெனியில வேலை பார்க்குறாங்களாம். அதனால அவங்களையும் ஸ்கூல்ல சேர்க்கணும். அதுக்காக நான் பட்டாசு வெடிக்க மாட்டேன்’ என்றாள் ஒரு மாணவி.

பட்டாசும் புகையுமாக ஒருநாள் இருந்துவிட்டுத்தான் போகட்டுமே என்ற வாதம் ஒரு பக்கம். ஆனால், 'எனக்கு இந்த வருடம் பட்டாசு வேண்டாம் அந்தக் காசுல ஆர்ஃபனேஜ் ஃப்ரெண்ட்ஸுக்கு ட்ரெஸ் எடுத்துக் கொடுக்கப்போறேன்’ என்று சொல்கிற கிரீஷ§ம்... 'எனக்கு எங்க அப்பா நிறைய பட்டாசு வாங்கிக் கொடுத்திருக்காங்க. அதுல பாதியை ஏழை பசங்களுக்கு கொடுத்துட்டு மீதியை நான் வெச்சிக்குவேன்’ என்று சொல்லும் சுவேதாவும்... 'தீபாவளிக்கு அடுத்த நாள் முகத்தில் கர்ச்சீஃப் கட்டிக்கிட்டு தெருவை க்ளீன் பண்ணப்போறோம்ன்னு எங்க சோஷியல் மிஸ் சொல்லி இருக்காங்க!’ என்று கிளம்பும் நவீன் மற்றும் அவன் நண்பர்களும்தான் தீபாவளியை நிஜமாகவே கொண்டாடுகிறார்கள்.

நாங்கள் எல்லாம் தீபாவளி வருவதற்கு முன்னதாக தீபாவளியைக் கொண்டாடினோம். இப்போது நிறைய பிள்ளைகள் தீபாவளிக்குப் பிறகு தீபாவளி கொண்டாடுகிறார்கள். இது ஒரு சமூக மாற்றத்தின் கொண்டாட்டம்.

ஹேப்பி தீபாவளி!

- ஸ்டாண்ட் பை...