Published:Updated:

அம்மா!

அம்மா!

இணையம் இதயம்!

அம்மா!

''இதயங்களை இணையத்தால் இணைத்திடலாம்!'' 'ட்ரிபிள் இ’ தத்துவம் சொல்லி ஆரம்பிக்கிறார் ஃபர்ஸ்ட் பிளானெட்டின் தலைமைத் திட்டப் பொறுப்பாளர் கி.ஆனந்தகுமார். விண்வெளி ஆய்வு முதல் ரெங்கநாதன் தெரு துணிமணி விலை வரை வகைக்கு ஒன்றாக ஏகப்பட்ட இணையதளங்கள் மூலமாக உலக விஷயங்களை இருந்த இடத்தில் இருந்தே அறிந்துகொள்ளச் செய்வதே இந்த நிறுவனத்தின் நோக்கம். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான www.enabled.in என்ற இணையதளம் ரொம்பவே ஸ்பெஷல். இதை வடிவமைத்த சதாசிவம், ''இந்தப் பரபரப்பான உலகத்தில் மற்றவர்களை ஊக்கப்படுத்துவது என்பதே அரிதாகிவிட்டது. அதுவும் மாற்றுத் திறனாளிகளுக்கு நம் ஊக்கமே உற்சாகம். அவர்கள் வீட்டுக்குள் இருந்தபடி 'நம்மால் எதுவுமே முடியவில்லையே’ என்று ஏங்கித் தேங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இத்தளத்தை வடிவமைத்தோம்.  மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் அரசின் திட்டங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவ னங்களின் உதவிகள், சுயதொழிலுக்கான வழிகாட்டல்கள், சாதனையாளர்கள் பற்றிய கட்டுரைகள் என அனைத்து தகவல்களையும் இதில் கடைவிரித்துள்ளோம். ஒரு முறை இந்தத் தளத்தைத் தொடும் எவரும், 'எனக்கு வேலை கிடைக்கலை... மத்தவங்கக்கிட்ட உதவி கேட்க கூச்சமா இருக்கு’ என கவலைப்பட மாட்டார்கள்'' என்கிறார் நம்பிக்கையுடன்!  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- க.நாகப்பன், படம்: பு.நவீன்குமார்

அம்மா!

அம்மா!

'இங்க கலைச்செல்வினு ஒரு அம்மா..?’ என நாம் கேள்வியை முடிக்கும் முன்பே, 'அந்த நாய் வளக்குற அம்மாவா?’ என  வழிகாட்டுகிறார்கள் வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் வாசிகள். தனியாக வீடு எடுத்துத் தங்கி, ஏகப்பட்ட நாய்களைப் பராமரித்து வரும் கலைச்செல்வி எந்த நாயையும் 'பசங்க’ என்றே குறிப்பிடுகிறார். ''ஆறு வருஷத்துக்கு முன்ன ஒருநாள் பேய் மழை பெய்துட்டு இருந்தப்ப ஒதுங்க இடம் இல்லாம சில பசங்க நடுங்கிக்கிட்டே நின்னுச்சுங்க. மனசு பாரமாயிடுச்சு. அப்படியே அள்ளிட்டு வந்து என் வீட்ல இறக்கிவிட்டேன். பசங்களைத் தூக்கிட்டு வந்தது வீட்டு ஓனருக்குப் பிடிக்கலை. சத்தம் போட்டார். வேற வீட்டுக்குக் குடி வந்துட்டேன்.  காலையில் பால், பிஸ்கட், மதியமும் இரவும் சாப்பாடு கொடுப்பேன். அப்பப்ப கறி சோறும் உண்டு.  பசங்க  ஜாஸ்தியாகவும் கொஞ்சம் பெரிய வீட்டுக்குக் குடி வந்தேன்.  இப்ப இங்கே 20 பசங்க குடியிருக்காங்க. புழுக்கமா இருக்கக் கூடாதுனு ஃபேன் போட்டு இருக்கேன். இதுபோக, தெருவுல திரியும் 50 பசங்களுக்கு என் பையன் குமார்தான் சாப்பாடு கொடுத்துட்டு வர்றான். நான் சேர்த்துவெச்சிருந்த காசையும், என் ரெண்டாவது பொண்ணு உஷா ட்யூஷன் எடுத்துக்கொண்டு வர்ற காசையும்தான் இதுக்காகச் செலவழிக் கிறோம். சமீபத்தில் வெளியூர் சென்று இருக்கும்போது, கடைக்குட்டி புள்ளை கணக்கா காலைச் சுத்திட்டு இருந்த ஒரு புள்ளையை கார்ப்பரேஷன் ஆளுங்க புடிச்சிக்கிட்டுப் போயிட்டாங்க. எவ்வளவோ கெஞ்சியும் தரலை!'' என்று சொல்லும்போதே கலைச்செல்விக்கு அழுகை முட்டிக்கொண்டு வருகிறது!

- அ.இராமநாதன், படம்: அ.ரஞ்சித்

சுனாமி சுந்தர்!

அம்மா!

''மின்சாரம், சுகாதாரம், தண்ணீர். இந்த மூணும்தான் நம்ம நாட்டோட பெரும் பிரச்னை. இந்தப் பிரச்னையை ஓரளவு சரிகட்டும் டெக்னிக்கை நான் வடிவமைத்து இருக்கேன்!'' - விஞ்ஞானம் பேசுகிறார் சுந்தர்ராஜன். ''பொதுவா வீடுகள்ல மோட்டார் மூலம் நிலத்தடி நீரை மாடியில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியில் நிரப்பி, பிறகு அங்கு இருந்து குழாய்கள் மூலம் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்துவோம்.  இதுக்காக சப்ளை லைன், டெலிவரிலைன்னு தொட்டியில்  இரண்டு துவாரங்கள் மூலமாத் தனித் தனி குழாய்கள் பதித்து இருப்போம். இதில் டெலிவரி,  சப்ளை... இரண்டுக்கும் ஒரே லைன் என்பதுதான் என்  டெக்னிக்.

அதாவது தொட்டியின் அடியில் ஒரே ஒரு துவாரம் போட்டு ஒரே ஒரு குழாயைப் பதிக்கணும். தொட்டியில் இருந்து இறங்கும் அந்தக் குழாயையே, தண்ணீர் தேவைப்படும் இடங்களுக்கு சப்ளை லைன் ஆக செயல்படும். மோட்டார் போட்டு தொட்டிக்குத் தண்ணீர் ஏற்றும்போது அதே குழாய் டெலிவரி லைன் ஆகச் செயல்படும். அப்படி தண்ணீர் ஏறும்போது, வீட்டுக்குள் தண்ணீர்த் தேவைப்படும் இடங்களுக்கும் அந்தக் குழாய் மூலமாகவே தண்ணீர் செல்லும். அதாவது நிலத்தில் இருந்து மேலே பாயும் தண்ணீரே குளியல் அறைக்கு சப்ளை ஆகும். இதனால் 'ஏர்லாக்’ எனும் காற்று அடைப்புப் பிரச்னை வராது. இதனால ஐந்து மணி நேரத்தில் நிரம்பும் தொட்டி,  இரண்டே மணி நேரத்தில் நிறைஞ்சுடும்.  மின்சார சிக்கனம், குழாய்ப் பதிக்கும் செலவு எல்லாமே மிச்சம். இந்த டிசைனுக்கு 'பி.எஸ்.கே.சுந்தர் சுனாமி முறை’னு பேர் வெச்சிருக்கேன்!'' என்றபடி தாடியைத் தடவிச் சிரிக்கிறார் சுந்தர்ராஜன்!

- ந.வினோத்குமார், படம்: ச.இரா.ஸ்ரீதர்