Published:Updated:

அண்ணன் தான் அகில இந்திய பிரதமர்!

அண்ணன் தான் அகில இந்திய பிரதமர்!

##~##

டுத்த ஐந்து வருடங்களில் தன் மக்கள் இயக்கத்தைத் தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்ற வேண்டும் என்பதுதான் விஜய்யின் இலக்கு.   சேலத்தில் கடந்த 17-ம் தேதி மக்கள் இயக்கத்தின் சார்பாக நடந்த நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா அதைக் கோடிட்டுக் காட்டியது!

 ஆரவாரமாகக் கூடி இருந்த கூட்டத்தால் விஜய் முகத்தில் ஏக உற்சாகம். ஒவ்வொரு மாவட்டத் தலைவருக்கும் மேடையில் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. ''நீங்கதான் தமிழ்நாட்டின் எதிர்காலம். நீங்க கண் அசைத்ததற்கே, புரட்சித் தலைவி முதல்வராகி இருக்காங்க. நீங்களே இறங்கிக் களத்துக்கு வந்தால்..?'' என்று போகிற போக்கில் உசுப்பேத்தினார் ஒரு மாவட்டம்.  இன்னொரு மாவட்டமோ, ''அண்ணன்தான் அகில இந்தியப் பிரதமர்!'' என்று ஓவர் ரியாக்ஷன் காட்டினார். இப்படி ஆளாளுக்கு உசுப்பேத்தியதில்... ஒரு கட்டத்தில் விஜய் முகத்தில் இருந்த சிரிப்பு மிஸ்ஸாகி, குழப்ப ரேகைகள் படர்ந்தன.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அண்ணன் தான் அகில இந்திய பிரதமர்!

ஆனால், சட்டென சுதாரித்து மைக்கைக் கையில் வாங்கி மேடையில் நடந்தபடியே பேசத் தொடங்கினார். ''சென்னையில் நான் 10 பேருக்கு அன்ன தானம் செய்தால், உடனே சேலத்திலும் அன்ன தானம் பண்றீங்க. சென்னையில் நான் நலத் திட்ட உதவிகள் செய்தால், நீங்களும் செய்றீங்க. இப்படி ரத்த தானம் தொடங்கி எல்லாத்துலயும் நான் என்ன செஞ்சாலும், சேலம் ரசிகர்கள் அதை அப்படியே செய்றீங்க. உங்களை ரசிகர்களாக அடைஞ்சதுக்கு நான் தவம் செஞ்சிருக்கணும்.

அண்ணன் தான் அகில இந்திய பிரதமர்!

நடந்து முடிந்த தேர்தலில் ஜெயலலிதா அம்மா ஜெயிக்கணும்னு விரும்பினேன். என் விருப்பத்தை எங்க அப்பா சந்திரசேகர் மூலமா உங்களுக்குச் சொன்னேன். நீங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கட்சியில் இருந்து இருக்கலாம். ஆனா, நான் சொன்னேன்கிற ஒரே காரணத்துக்காக, நீங்க சார்ந்திருந்த கட்சிகளை எல்லாம் மறந்துட்டு அ.தி.மு.க-வுக்காக வேலை பார்த்தீங்க. ஜெயிக்கவும்வெச்சிட்டீங்க. நல்லது நடக்கணும்னா, கொஞ்சம் ரிஸ்க் எடுத்துத்தான் ஆகணும். இனி, நான் உங்களுக்காக ஏதாவது செய்யணும். கண்டிப்பா செய்வேன்!'' என்றவரின் பேச்சு, தனது அடுத்த படத்தின் மீது திரும்பியது.

'' 'வேலாயுதம்’ படம் ரிலீஸ் ஆகப்போகுது. சில படங்கள்ல நடிக்கும்போதே 'இது சூப்பர் ஹிட் ஆகும்’னு என் உள் மனசு சொல்லும். அப்படி ஒரு படம் வேலாயுதம். நீங்க எதிர்பார்க்காதது நிறைய வேலாயுதத்தில் இருக்குது. இன்னொரு பக்கம் 'நண்பன்’ வேகமாப் போயிட்டு இருக்குது!'' என்று தனது வழக்கமான கூச்சம் குறைத்து கலகலப்பாகவே பேசினார்.

அண்ணன் தான் அகில இந்திய பிரதமர்!

தையல் மிஷின், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கிவிட்டு விடைபெறும் சமயம், ''நான் எந்த விஷயத்தைச் சொன்னாலும் அதைச் சிறப்பாகச் செயல்படுத்திக் காட்டும் எங்கள் மன்றத்தின் சேலம் மாவட்டத் தலைவர் என் தளபதி, 'தமிழன்’ பார்த்திபனுக்குப் பரிசு கொடுக்கணும்னு ஆசைப்படுறேன்!'' என்றவர், தங்க டாலர் செயினை அவருடைய கழுத்தில் அணிவித்தார்.

குத்துப் பாட்டு இல்லாமல், விஜய் விழாவா? ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று 'நீ எந்த ஊரு... நான் எந்த ஊரு... முகவரி தேவை இல்லை...’ என்கிற 'திருப்பாச்சி’ படப் பாடலைப் பாடி விழாவை நிறைவு செய்தார் விஜய்.

ஆக, அண்ணனின் இலக்கு தமிழ்நாடு சட்டமன்றம் அல்ல... டெல்லி நாடாளுமன்றம்டோய்!

- கே.ராஜாதிருவேங்கடம், படம்: எம்.விஜயகுமார்