Published:Updated:

சக்தி சுரபி!

சக்தி சுரபி!

சக்தி சுரபி!

சக்தி சுரபி!

'தேவையே கண்டுபிடிப் புகளின் தாய்’ என்ற பழமொழியை நிஜமொழி ஆக்கி இருக்கிறது கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவின் இயற்கை வள அபிவிருத்தி மையம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செலவே இல்லாமல் சமையலுக்குப் பயன்படும் எரிவாயுவை உற்பத்திச் செய்து கொடுக்கும் 'சக்தி சுரபி’ என்கிற கலனை உருவாக்கி இருக்கிறது இம் மையம். தேவை அற்றது என்று நாம் வீசி எறியும் சமையலறைக் கழிவுகள் மூலம் தயாராகும் எரிவாயு இவை.

''கேஸ் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற் றத்துக்குத்  தீர்வாக இந்தச் சக்தி சுரபியை உருவாக்கினோம். வீட்டின் பின் பக்கம், மொட்டை மாடினு எங்க வேணும்னாலும் இதை வெச்சுக்கலாம்.  முதல் 20 நாட்கள் சாணம் மற்றும் தண்ணீரை 1:1 என்ற விகிதத்தில் சேர்த்து கலனுக்குள் நிரப்பணும். சாணத்தில் உள்ள பாக்டீரியாக்கள் மூலம் மீத்தேன் வாயு உற்பத்தியாகும். பிறகு, மீதமாகிற சோறு, காய்கறிக் கழிவுகளைப் போட்டாலே போதும். தினமும் ஐந்து கிலோ காய்கறிக் கழிவு களை கலனுக்குள் போட்டால், நாலு பேர் உள்ள குடும்பத்துக்குச் சமைக்கத் தேவையான எரிவாயு உற்பத்தி ஆகும். ஒரே ஒரு முறை செலவு செய்து இந்த கலனை அமைத்தால் வாழ்நாள் முழுக்கப் பயன் தரும்!'' என்கிறார் விவேகானந்த கேந்திராவின் இயற்கை வள அபிவிருத்தி மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன்.

  - என்.சுவாமிநாதன் , படங்கள்: ரா.ராம்குமார்  

'மர' தலைவர்கள்!

சக்தி சுரபி!

தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரம் அருகே உள்ள மேலப்புதுக்குடி சிற்றூராட்சி கிராம மக்கள், கிராமத்தைச் சுற்றி நடப்பட்டு உள்ள 100 மரக் கன்றுகளுக்கு காந்தி, நேரு, காமராஜர் எனத் தலைவர்கள் பெயரையும்  தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிய நேர்மையான கலெக்டர்கள் பெயரையும் சூட்டி பராமரித்து வருகிறார்கள். அந்தக் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவி வேதவல்லி, ''கிராம மக்கள் கூடி பணம் போட்டு நீலம், பெங்களூரா, செந்தூரா, அல்போன்ஸானு 20 வகையான உயர் விளைச்சல் தரக்கூடிய மாமரக் கன்று களை வாங்கினோம். இன்னும் நாலு வருஷத்தில் மரங்கள் மூலமா பஞ்சாயத்துக்கு வருமானம் கிடைக்கும். மரத்தை மக்கள் அக்கறையோட கவனிச்சு பராமரிக்கிறதுக்காக, தலைவர்கள் பெயரை வெச்சோம். அந்தத் தலைவர்களையே வளர்க்குற மாதிரி மக்கள் மரங்களை வளர்க்குறாங்க. இப்போ தரமான ரோடு வசதி, கழிப்பறை வசதி, தண்ணீர், மின்சார வசதிகளை உருவாக்கிட்டோம். எங்க கிராமத்தைப் பாராட்டி 2008-ம் ஆண்டு மத்திய அரசு 'நிர்மல் புரஸ்கார்’ விருது கொடுத்தாங்க. இதுக்கு எல்லாம் காரணம் மேலப்புதுக்குடி கிராம மக்கள்தான்!'' என்கிறார் பூரிப்போடு.

- இ.கார்த்திகேயன், படம்: ஏ.சிதம்பரம்

கற்கால கலெக்ஷன்!

சக்தி சுரபி!

தேனி மாவட்டம்  கூட லூரைச் சேர்ந்த தமிழாதன் கணபதிராஜனின் பொழுது போக்கு என்ன தெரியுமா? கற்கால மனிதர்கள் பயன் படுத்திய கல் கோடாரிகள், கல் ஆயுதங்கள் ஆகியவற் றைச் சேகரிப்பதுதான்.

''நான் கூடலூர் என்.எஸ். கே.பி. பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் ஆண்டிபட்டி, சின்னமனூர், புள்ளி மான்கோம்பை உள்ளிட்ட பல இடங்களுக்குக் கள ஆய்வு மேற்கொண்டேன். அப்போது சேகரித்தவைதான் இவை. ஏறக்குறைய கி.மு.2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கற்களில் வரையப்பட்ட எழுத்து வகைகள் பிராமி வகையைச் சேர்ந்தவை. 1957-ல் எனது ஆசிரியர் தி.சோமசுந்தரம், கூடலூரில் உள்ள மங்கல்தேவி கண்ணகிக் கோயிலை உலகுக்குத் தெரியப்படுத்தினார். இப்போது நானும், சில வரலாற்று ஆர்வலர்களும் சேர்ந்து அந்தக் கோயிலின் பெருமையைப் பரப்பி வருகிறோம்!'' என்கிறார் தமிழாதன்.  

-தி.முத்துராஜ்