Published:Updated:

என் ஊர்!

நல்லவன் வாழ்வான்!

##~##

'புன்னகை அரசி’ பட்டத்துக்கு இன்றும் நியாயம் செய்யும் கே.ஆர்.விஜயா, தன்னை வளர்த்து எடுத்த பழநி பற்றி இங்கே மனம் திறக்கிறார்...

 ''நான் பொறந்தது கேரளா. ஆனா, சின்ன வயசுலயே பழநிக்கு வந்துட்டேன். என் வாழ்க்கையின் பல திருப்புமுனைகளைக் கொடுத்தது பழநிதான். அப்போ எல்லாம் பழநி இவ்வளவு பரபரப்பா இருக்காது. மலைக்கோயில்ல இருந்து காத்துல மிதந்து வர்ற முருகன் பக்திப் பாடல்கள், ஊருக்கு உள்ள டக்...டக்...டக்னு ஓடிக்கிட்டே இருக்குற குதிரை வண்டிகள், ஊரைச் சுத்தி இருக்குற பச்சைப் பசேல் வயல்கள், ஜில்லுனு இருக்குற வையாபுரி குளம்னு அவ்வளவு ரம்மியமா இருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சின்ன வயசுல இருந்தே பாட்டு கேக்குறது ரொம்ப இஷ்டம். கோயில் அடிவாரம் பக்கத்தில்தான் எங்க வீடு. அடிக்கடி மலை ஏறிப் போய், சீர்காழி, டி.எம்.எஸ். பக்திப் பாடல்களைக் கேட்டுக்கிட்டே  இயற்கைக் காட்சிகளை ரசிப்பேன். மனசுல உள்ள எல்லா பாரமும் இறங்கி லேசாயிடும்.

என் ஊர்!

அப்ப எல்லாம் தைப் பூசம், பங்குனி உத்திரம் தவிர, மத்த நாட்களில் கூட்டமே இருக்காது. மனுஷங்களோட சத்தமே இல்லாம மலை முழுக்கப் பறவைகளின் சத்தமா இருக்கும். கோயில்ல சாமிக்கு அபிஷேகம் பண்ற பாலை, பிரசாதமாக் கொடுப்பாங்க. அந்தப் பால் அவ்வளவு ருசியா இருக்கும். நான் வாங்கிக் குடிச்சது போக, வீட்ல இருக்குறவங்களுக்கும் வாங்கிட்டுப் போவேன். அப்ப எல்லாம் வின்ச், ரோப் கார் எல்லாம் கிடையாது. படி வழியாதான் ஏறி, இறங்கணும். ஒரு நாளைக்கு

என் ஊர்!

எத்தனை தடவை மலையில் ஏறி, இறங்கி இருப்பேன்னு எனக்கே தெரியாது. இப்பவும் என் ஆரோக்கியத்துக்குக் காரணம் அப்ப மலை ஏறி இறங்கினதுதான்.

அதே மாதிரி இரவு பூஜை முடிஞ்சதும் பால், பிரசாதம் எல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு வரும்போது, ஒரே இருட்டா இருக்கும். கண்ணை இறுக்கமா மூடிக்கிட்டு 'முருகா, முருகா’னு சொல்லிக்கிட்டே வீட்டுக்கு ஓட்டமா ஓடி வந்துடுவேன்.

எனக்கு ஆரம்பத்தில் நாடகத்தில் நடிக்கணும், சினிமாவில் நடிக்கணும்னு ஆசை எதுவும்  இல்லை.  என் அப்பா ஒரு நாடக கம்பெனியில் வேலை பார்த்தார். அப்பவே அவர் 12 மொழிகளில் பேசுவார். அவர்தான் என்னை நாடகத்தில் நடிக்கவெச்சார். என் கலைப் பயணம் ஆரம்பிச்சதும் பழநியில்தான். அப்ப அங்கே சின்னச் சின்ன நாடக கம்பெனிகள் இருக்கும். ஒரு நாடகத்தில் நடிச்சா  10 ரூபா சம்பளம் கொடுப்பாங்க. நாடகம் முடிஞ்சதும் அந்த  10 ரூபா கையில் வாங்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.    

நாடகத்தில் நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான், வெளி உலகத் தொடர்பு அதிகமாச்சு. மதுரை, தூத்துக்குடி, சேலம்னு பல ஊர்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. தூத்துக்குடியில் ஒரு நாடகத்தில்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை முதன்முதலா நேரில் பார்த்தேன். ஒரு சாதாரண ரசிகையா உட்கார்ந்துதான் அந்த நாடகத்தைப் பார்த்தேன். அதே புரட்சித் தலைவருக்கு ஜோடியா நடிப்பேன்னு அப்போ நான் யோசிச்சுக்கூடப் பார்க்கலை. நான் பார்த்த அந்த நாடகம், 'நல்லவன் வாழ்வான்’கிற பேருல சினிமாவா வந்தது.

தூத்துக்குடியில்தான் எனக்கு சினிமா ஆட்களோட அறிமுகம் கிடைச்சுது. அப்படியே நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தாச்சு. அதுக்குப் பிறகு பழநியை விட்டுட்டு நிரந்தரமா சென்னையில் செட்டில் ஆகிட்டேன்.

என் ஊர்!

பழநி முருகன் கோயில்தான் எனக்குத் தாய் வீடு. உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அடிக்கடி முருகனை வந்து தரிசனம் செய்வேன். இப்போ, வருஷம் பூரா கோயில்ல கூட்டம் இருக்கு. ஊரே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிடுச்சு. நாங்க வாழ்ந்த வீடு இப்போ கடை வீதியா மாறிடுச்சு. இருந்தாலும், இப்பவும் பழநி வந்தா, டக்... டக்... டக்னு ஓடுற குதிரை வண்டிகளும், கோயில்ல ஒலிக்குற பாட்டும் எனக்குப் பழைய பழநியை ஞாபகப்படுத்திட்டே இருக்கு!''

- ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்