Published:Updated:

வழித் துணைக்கு பிள்ளையாரு... வலி எடுத்தால் திருநீறு!

ராமேஸ்வரம் - காசி மெகா பாத யாத்திரை

##~##

ரு வாரம் தொடர்ந்து வாக்கிங் போனாலே நமக்கு எல்லாம் 'கின்னஸ்’ பெருமை. ஆனால், சர்வசாதாரணமாக, ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு பாத யாத்திரை கிளம்பி இருக்கிறது ஒரு குழு. தினமும் 6 மணி நேரம் வீதம் 148 நாட்களில் இவர்கள் கால் பதிக்க இருக்கும் தூரம்... 3,500 கிலோ மீட்டர்!

செட்டி நாட்டுப் பகுதியைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு மரியாதை உண்டு. அங்கு உள்ள 'நாட்டுக்கோட்(டை) சத்ரம்’ வடநாட்டுக்காரர்கள் மத்தியிலும் பிரபலம். காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தினமும் நடக்கும் மூன்று கால பூஜைகளில் இரண்டு செட்டியார்களுக்கு, ஒன்றுதான் காசி மஹாராஜாவுக்கு. காசியில் இவ்வளவு செல்வாக்குடன் இருக்கும் நகரத்தார்கள் தலைமையில் 1983-லேயே காசி - ராமேஸ்வரம் பாத யாத்திரை சென்று இருக்கிறார்கள். இடையில் சில ஆண்டுகள் தடைபட்டுக்கிடந்த இந்தப் பயணம், மீண்டும் தொடங்கி இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வழித் துணைக்கு பிள்ளையாரு... வலி எடுத்தால் திருநீறு!

புதுக்கோட்டை மாவட்டம் வலையபட்டிக்காரர் தேனிமலை செட்டியார். 59 வயதான இவர், செட்டிநாட்டுப் பகுதியில் இருந்து பழநிக்குக் கடந்த 40 வருடங்களாகப் பச்சைக்காவடி தூக்கிச் செல்கிறார். அதனால் அவர் பெயரே பச்சைக்காவடி என்று ஆகிவிட்டது. அவர் காசிக்கு இதுவரை ஏழு முறை பாத யாத்திரை சென்று இருக்கிறார். அவருடைய தலைமையில்தான் 18 பேர் கொண்ட குழுவினர், கடந்த 12-ம் தேதி ராமேஸ்வரம் டு காசி பாத யாத்திரையைத் தொடங்கினார்கள்.

'10 வயதில் இருந்தே ராமாயணம் படிப்பேன். அதனால் ராமேஸ்வரம் - காசி பாத யாத்திரைங்கிறது சின்ன வயசுக் கனவு. 25 வருஷத்துக்கு முன்னாடி 13 பேர் முதல் முதலா யாத்திரை கிளம்பினோம். அதில் நான் ஒருத்தன் மட்டும்தான் காசி வரைக்கும் நடந்தேன். 'தெரியாம ஆசைப்பட்டுட்டோம்’னு நினைச்சு யாத்திரை போறதையே நிறுத்திட் டேன். 16 வருஷம் கழிச்சு  வேண்டுதல் வெச்சு காசி யாத்திரையைத் தொடங்கினேன். இது எனக்கு எட்டாவது பயணம். இதுவரை என்னோடு ஒருமுறை வந்தவங்க, யாரும் திரும்ப வந்தது இல்லை. உடல்நிலைதான் காரணம்.  இன்னும் நாலு வருஷம் காசிக்கு யாத்திரை போய்ட்டு,  சிங்கப்பூரில் உள்ள தண்டாயுதபாணி கோயிலில் தஞ்சம் அடையணும்!''  என்றார் பச்சைக்காவடி.

வழித் துணைக்கு பிள்ளையாரு... வலி எடுத்தால் திருநீறு!

இந்தப் பயணத்துக்கு

வழித் துணைக்கு பிள்ளையாரு... வலி எடுத்தால் திருநீறு!

9 லட்சம் வரை செலவாகுமாம். அனைத்துமே அன்பர்களின் உதவிதானாம். ஆறு மாநிலங்களைக் கடந்து செல்வதால் அந்தந்த மாநில தலைமைச் செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், சுகாதார அதிகாரிகள், தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி-க்கள் என சுமார் 2000 பேருக்கு முன்கூட்டியே கடிதம் அனுப்பி இருக்கிறார் பச்சைக்காவடி. வழியில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ஏதுவாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடாம்.

வழித் துணைக்கு பிள்ளையாரு... வலி எடுத்தால் திருநீறு!

''வயசானவங்கதான் எங்ககூட பயணத்தில் வருவாங்க. சில நேரங்களில் அவங்களுக்குக் கை கால் வலி காரணமா நடக்க முடியாது. அப்பெல்லாம் இந்தத் திருநீறுதான் மருந்து. வழித் துணைக்கு பிள்ளையாரு... வலி எடுத்தால் திருநீறு.. இப்படித்தான் எங்களுடைய யாத்திரை தொடருது!''-என்று சிரிக்கிறார் பச்சைக்காவடி.

       - குள.சண்முகசுந்தரம், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்