Published:Updated:

சாதித்துக் காட்டுவோம்!

ஆச்சார்யா மாணவர்களின் ஆச்சர்ய சாதனைகள்...

##~##

கின்னஸ் சாதனைகளுக்குத் தணியாத முயற்சியும் தனி மனிதச் சாதனைகளும்தான்  உந்து சக்தியாக இருக்கும். ஆனால், 'சாதனை என்பது வெறுமனே தனிமனிதச் செயல்பாடு இல்லை’ என்று நிரூபித்து இருக்கிறது புதுவை ஆச்சார்யா கல்விக் குழுமம். ஆண்டுதோறும் இந்தக் கல்விக் குழுமத்தின் நிறுவனத்தைச் சேர்ந்த  மாணவர்களைக்கொண்டு கின்னஸ் சாதனையும்  லிம்கா சாதனைகளையும் நிகழ்த்திக் காட்டும் இந்தப் பள்ளி, இந்த ஆண்டு 10 கின்னஸ் சாதனைகளைச் செய்து காட்டி, வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறது.

 ஆச்சார்யா பாலசிக்ஷா பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி அபிராமி தொடர்ச்சியாக பல மணி நேரம் யோகா செய்யும் முயற்சியைத் தொடங்கினார். 'மனித ரோபோவா?’ என்று வியக்கவைக்கும் வகையில் ரப்பராய்  உடலை வளைத்து, நெளித்து சுற்றி இருப்பவர்களை வியப்பில் ஆழ்த்தினார். தொடர்ச்சியாக 36 மணி நேரம் யோகா செய்து அதுவரையிலான யோகா ரெக்கார்டுகளை முறியடித்தார். அதே பள்ளியைச் சேர்ந்த முகமது நஸ்ரின் என்ற மாணவி, பல்லாயிரம் சாக்லேட்டுகளைக்கொண்டு தரையில் பிரமாண் டமான ஓவியத்தை வரைந்து முடிக்க, அது இனிப்பான சாதனையாக மாறியது. 9-ம் வகுப்பு மாணவன் அருணாச்சலம், 'ஆண்டவன் சொல் றான், அருணாச்சலம் செய்றான்’ என்று பஞ்ச் வசனம் பேசவில்லையே தவிர... மிகவும் சிரம மான கால பைரவ ஆசனம், சக்ரபந்த ஆசனம், ஏக பாத சிரசாசனம் என நூற்றுக்கணக்கான ஆசனங்களை 32 மணி நேரத்தில் அசாத்தியமாகச் செய்து சாதனையைப் பதிவு செய்தான்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சாதித்துக் காட்டுவோம்!

ஒருபுறம் உடலை வளைத்து ஆசனம் என் றால், இன்னொரு புறம் ஓவியச் சாதனையில் உலக சாதனை நிகழ்த்தினார் மாணவர் ஹேமந்த் ராம். 72 மணி நேரம் இடைவிடாது வரைந்த கார்ட்டூன்கள், ஹேமந்தின் சாதனை. அதேபோல் தனி நபர் ஓவியப் பிரிவில் வசந்தகுமார் மிக நீண்ட  ஓவியம் வரைந்து இதற்கு முந்தைய சாதனைகளை முறியடித்தார். ஆச்சார்யா கல்விக் குழுமத்தைச் சேர்ந்த சம்பூர்ண வித்யாலயாவைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி பிரியங்கா,  ஐந்து நிறங் களில் 1,600 கிலோ உப்பைக்கொண்டு குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் மெகா சைஸ் ஓவியம் ஒன்றை வெற்றிகரமாக வரைந்து முடித்தார்.  

சாதித்துக் காட்டுவோம்!

ஆச்சார்யா கலை  மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ரேகா, 30 மணி நேரம் தொடர்ச்சியாகக் கைகளில் மெகந்தி வரையும் சாதனையை நிகழ்த்தினார். ஆச்சார்யா பொறியியல் கல்லூரி மாணவரான மணிகண்டன், மைக்கேல் ஜாக்சனின் புகழ் பெற்ற 'மூன் வாக்’  நடை நடந்து 24 மணி நேரத்தில் 52 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து புதுமையான கின்னஸ் சாதனை படைத்தார். இறுதியாக ஆச்சார்யா உணவு மற்றும் விடுதி மேலாண்மை மாணவர் கார்த்திகேயன் கின்னஸ் சாதனைக்காக பிஸ்கட்டுகளைக்கொண்டு பிரமாண்ட ஓவியம்  வரைந்தார். கின்னஸ் நிபந்தனைக்கு உட்பட்டு ஒவ்வொரு எட்டு மணி நேரத்துக்கும் 15 நிமிட இடைவேளையோடு மாணவர்கள் இச் சாதனையை முடித்தனர்.

சாதித்துக் காட்டுவோம்!

ஆச்சார்யா கல்விக் குழும இயக்குநர்  அரவிந்தனிடம் பேசியபோது, 'மாணவர்கள் படிப்பு மட்டுமே தங்கள் உலகம் என்று முடங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் எங்கள் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களின் பன்முகத் திறமைகளை ஊக்குவிக்கிறோம். அடுத்த ஆண்டு இன்னும் கூடுதல் மாணவர்கள் கின்னஸ் சாதனை படைப்பார்கள்!'- என்கிறார் நம்பிக்கையோடு!

- நா.இள.அறவாழி