Published:Updated:

அடுப்பும் இல்லை... நெருப்பும் இல்லை!

ஆரோவில்லில் அதிசய சமையல்

##~##

ரு சமையல் அறையில் என்னவெல்லாம் இருக்கும்?

 அடுப்பு, வாணலி, நெருப்பு, லைட்டர், குக்கர், தோசைக் கல், கேஸ் சிலிண்டர்? இந்த சமையல் அறையில் எதுவும் கிடையாது. ஆனால், தினமும் பலருக்குச் சமையல் நடக்கிறது. புதுவை ஆரோவில் பகுதியில்  இருக்கும் ஆரோவில் 'லைவ் ஃபுட் சென்டர்’தான் இந்தச் சிறப்புச் சமையல் அறை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வெளிநாட்டினர் விரும்பிச் சாப்பிடும் இங்கு, காலை, மதியம், மாலை என்று மூன்று நேரமும் முழுக்க முழுக்க இயற்கை உணவுகள்தான். மில்க் ஷேக் மற்றும் ஸ்மூத்தி எனர்ஜி ஜூஸ் இரண்டும் இந்த உணவகத்தின் ஸ்பெஷல்.

அடுப்பும் இல்லை... நெருப்பும் இல்லை!

'ஹோம் சயின்ஸ் முடிச்சதும் சொந்தமா பிசினஸ் செய்யணும்னு  ஆசை.  எங்க அம்மாவின் பெயரில் மசாலாத் தூள், ரசப் பொடி, மிளகாய்த் தூள் பாக்கெட் போட்டு வியாபாரத்தைத் தொடங்கினேன். 10 வருஷங்கள் வெற்றிகரமா வியாபாரம் ஆச்சு. அன்னை மீது ஏற்பட்ட ஈர்ப்பால், புதுச்சேரி ஆரோவில்லுக்கு வந்துவிட்டேன். ஹோம் சயின்ஸ் படித்ததால், ஆரோவில் ஆர்கானிக் ஃபுட் புராசஸிங் யூனிட்டில்  என் பணியைத் தொடங்கினேன். வழக்க மான உணவுகள் இல்லாமல், புது வகையான உணவு களையும் பரிசோதிச்சுப் பார்த்தேன்.

அடுப்பும் இல்லை... நெருப்பும் இல்லை!

சமையல் என்பது அற்புதமான கலை. உணவும் கலையும் வாழ்வின் உன்னதப் பகுதிகள். புதுசு புதுசா ருசியா சமைச்சு சாப்பிடும் சந்தோஷத்துக்கு ஈடு இணை கிடையாது. ஒருமுறை ஆரோவில்லுக்கு வந்த வெளிநாட்டினர், இயற்கை உணவுதான் வேணும்னு கேட்டாங்க. எனக்கு அப்போ இயற்கை உணவுபற்றி பெரிதாக ஏதும் தெரியாது. அதனால், சமையல் அறையில் இருந்த சில காய்கறிகளைக்கொண்டு உணவு தயாரிச்சுக் கொடுத்தேன். அது அவங்களுக்கு ரொம்பவே பிடிச்சது.

அதற்குப் பிறகுதான் எனக்கும் இயற்கை உணவு மேல் ஆர்வம் வந்தது.  நானே மூணு வாரத்துக்கு இயற்கை உணவை மட்டுமே சாப்பிட்டுப் பார்த்தேன். நல்லா இருந்தது. 'ரா ஃபுட்’ என்று அழைக்கப்படும் இந்த இயற்கை உணவுபத்தி தெரிஞ்சுக்க, இணையத்தில் தேடினேன்.  அப்போது இயற்கை உணவுபற்றி ஆர்வம்கொண்ட அமெரிக்க நிறுவனமான 'ட்ரீ ஆஃப் ரீஜுவனேஷன் சென்டர்’ பற்றி தெரிய வர,  அமெரிக்கா போய் அந்த நிறுவனத் தின் தலைவர் டாக்டர் கேப்ரியலைச் சந்தித்தேன். அவரிடம் ஆரோவில் பற்றி எடுத்துச் சொன்னதால் கட்டணமே வாங்காமல் எனக்கு  இயற்கை உணவு முறை பற்றிய பயிற்சி கொடுத்தார். 30 வருடங்களாக இயற்கை உணவு சாப்பிடும் டாக்டர் கேப்ரியலின் வயது 65. அவரிடம் கத்துக்கிட்ட இயற்கை உணவு வகைகளுக்கு இங்கே ஏக வரவேற்பு.

கேழ்வரகு அடை, கம்பு அடை, கீரைப் புட்டு மாதிரியான இயற்கை உணவுகள்தான் இங்கே சமைக்கிறோம். மிக்ஸி மட்டும்தான் இந்தச் சமையல் அறையில் இருக்கும் ஒரே நவீன சாதனம். வகை வகையான சட்னிகள் செய்து அதன் மேல் தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய்னு டிரெஸ்ஸிங் செய்து கொடுப்போம். இயற்கை உணவு கள்னா, சுவை இல்லாதப் பத்தியச் சாப்பாடுனு பயந்துட வேண்டாம். இயற்கை கேக்குகள், எனர்ஜி ஜூஸ், பாதாம் பருப்பு அடை, முந்திரி அடைனு விதவிதமான சுவையான இயற்கை உணவுகள் உண்டு. தொடர்ச்சியாக இயற்கை உணவை உட்கொண்டால், நீரழிவு நோய்  உடல் பருமன்போன்ற பிரச்னைகளே வராது!''  என்று ஆரோக்கியச் சிரிப்பு சிரிக்கிறார் ஆனந்தி!

அடுப்பும் இல்லை... நெருப்பும் இல்லை!

- நா.இள.அறவாழி, படங்கள்:  எஸ்.தேவராஜன்