Published:Updated:

‘ரெட்ரோஸ்பெக்ட்டிவ்’ - சென்னையில் உலகத் திரைப்படங்கள் பார்க்க அனுமதி இலவசம் #Retrospective

‘ரெட்ரோஸ்பெக்ட்டிவ்’ - சென்னையில் உலகத் திரைப்படங்கள் பார்க்க அனுமதி இலவசம் #Retrospective
‘ரெட்ரோஸ்பெக்ட்டிவ்’ - சென்னையில் உலகத் திரைப்படங்கள் பார்க்க அனுமதி இலவசம் #Retrospective

‘ரெட்ரோஸ்பெக்ட்டிவ்’ - சென்னையில் உலகத் திரைப்படங்கள் பார்க்க அனுமதி இலவசம் #Retrospective

நீங்கள் உலக சினிமா ரசிகரா? மாற்று சினிமாவைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? குறும்படங்கள் எடுக்கும் முயற்சியில் இருப்பவரா? விடிய விடிய உலகப் படங்கள் பார்த்துவிட்டு, `இவை பற்றியெல்லாம் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் ஆல்  இல்லையே!’ என அங்கலாய்ப்பவரா? அகிரா குரோசோவா, கிம்கி டுக், சத்யஜித் ரே, ஆல்பிரெட் ஹிட்ச்காக், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற உலகப் புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்களைத் தொடர்ந்து பார்க்க ஆசைப்படுகிறீர்களா... உங்களைப் போன்ற சினிமா வெறியர்களுக்காகவே `ரெட்ரோஸ்பெக்ட்டிவ்’ என்ற உலக சினிமா திரையிடல் நிகழ்வை, சென்னையில் ஆரம்பித்திருக்கிறது தமிழ் ஸ்டூடியோ அமைப்பு.

சென்னை வடபழனி, மேற்கு சிவன் கோயில் தெருவில் இயங்கிவரும் பியூர் சினிமா புத்தக அங்காடியில்தான் இந்த நிகழ்வு நடக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வீதம் இதுவரை 50-க்கும் அதிகமான உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இந்த வாரம்... (மே-2 முதல் மே-5 வரை) இயக்குநர் ஆல்பிரட் ஹிட்ச்காகின் வாரம்.

ரெட்ரோஸ்பெக்ட்டிவ் (Retrospective) என்ற லத்தீன் சொல்லுக்கு, `திரும்பிப் பார்த்தல்’னு அர்த்தம். பொதுவாவே உலகத் திரைப்படக் கல்லூரிகள்ல அல்லது சினிமா சம்பந்தப்பட்ட படிப்புகள்ல `ரெட்ரோஸ்பெக்ட்டிவ்’ங்கிற கான்செப்ட் இருக்கும். முக்கியமான உலக சினிமா இயக்குநர்களோட படங்களைத் திரையிட்டு, சினிமா ரசிகர்களோட ரசனையை வளர்த்தெடுக்கிறதுதான் இதோட முக்கியமான நோக்கம். இதன்மூலமா அந்த இயக்குநர் வாழ்ந்த நாட்டின் பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம் எல்லாம் ரசிகர்களுக்குக் கடத்தப்படுது. பார்வையாளர்கள்ல சிலர் நாளைக்கு தரமான படைப்பாளியா மாறுவதற்கும் நல்ல வாய்ப்பு இருக்கு. கல்லூரி, சினிமா நிறுவனம்... எல்லாத்தையும் தாண்டி `ரெட்ரோஸ்பெக்ட்டிவ்’ கான்செப்ட் மூலம் உலகப்படங்களை தமிழ் ஸ்டூடியோ போன்ற அமைப்பு இலவசமா திரையிடுறது இதுதான் முதல்முறை. அப்படி நாங்க திரையிட்ட முதல் திரைப்படம் இயக்குநர் அஸ்கர் பர்காலி இயக்கி ஆஸ்கர் விருது வென்ற `சேல்ஸ்மேன்’. அப்புறம் இயக்குநர் கிம்கி டுக் படங்கள், போன வாரம் சார்லி சாப்ளின் படங்கள்னு இதுவரைக்கும் 50-க்கும் அதிகமான படங்களை ஸ்க்ரீன் பண்ணியிருக்கோம்’’ என்கிறார் தமிழ் ஸ்டூடியோ அருண்.

“ஏற்கெனவே கோடம்பாக்கத்தில் `பௌர்ணமி இரவு’ங்கிற பேர்ல நாலு வருஷமா, எங்க ஆபீஸ் மொட்டைமாடியில உலகத் திரைப்படங்களை ஸ்க்ரீன் பண்ணிட்டு வந்தோம். இதோட கான்செப்ட் என்னன்னா... ஒரு குறிப்பிட்ட அறைக்குள் உட்கார்ந்துதான் சினிமா படங்களைப் பார்க்கணும்கிறதை உடைச்சு, பார்க்கிறவங்க விருப்பத்துக்கு, உட்கார்ந்து, சுவர்ல சாஞ்சுக்கிட்டு, படுத்துக்கிட்டுகூட படங்களைப் பார்க்கலாம்கிறதுதான். இன்னிக்கும் இப்படி படம் பார்க்கிற வழக்கம் பிரான்ஸ் நாட்டுல இருக்கு. `பௌர்ணமி இரவு’ நிகழ்வுல இரவு முழுக்கப் படங்கள் பார்த்துட்டு, விடியற்காலை 4 மணிக்குப் பார்த்த படங்களைப் பற்றி ரொம்பவும் காரசாரமா விவாதிப்போம். அன்னிக்குப் பார்வையாளர்களுக்கு இரவு உணவு இலவசம். அப்படிப் பார்வையாளரா வந்து விவாதங்கள்ல பங்கெடுத்தவங்க பின்னாடி நல்ல சினிமா பத்திரிகையாளரா, உதவி இயக்குநரா, சினிமா இயக்குநரா மாறியிருக்காங்க. குறிப்பிட்டுச் சொல்லணும்னா... `தெகிடி’ படத்தோட இயக்குநர் ரமேஷ், `8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீகணேஷ்... போன்றவங்க எல்லாரும்`பௌர்ணமி இரவு’ நிகழ்வுல உலகத் திரைப்படங்களைப் பார்த்து, படித்து, வியந்து, விவாதிச்சவங்கள்தான்’’ என்கிறார் அருண்.

``கிம்கி டுக் போன்ற இயக்குநர்களின் படங்கள்ல வர்ற சில நியூடிட்டி சீன்களைப் பார்த்து சில பார்வையாளர்கள் பாதி படத்துலே எழுந்து போயிருக்காங்க. அவங்களைப் போன்றவங்களுக்கு அந்தப் படங்களைப் பார்க்கும் விதங்களை எடுத்துச் சொல்லி, அந்தப் படங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துறோம். போன வாரம் திரையிட்ட சாப்ளின் படங்களுக்கு, கூட்டம் அலைமோதியது. இப்படி நல்ல படங்களை மக்களுக்குக் கடத்துறது மூலமா சினிமா பத்தின மாற்று சிந்தனையை உருவாக்குற `ரெட்ரோஸ்பெக்ட்டிவ்’ கான்செப்ட்டின் மையப்புள்ளியா சென்னையில் தமிழ் ஸ்டூடியோ மாறியிருப்பது எனக்கு மகிழ்ச்சி’’ என்கிறார் அருண்.

`ரெட்ரோஸ்பெக்ட்டிவ்’-க்கு ஒரு வெல்கம் சல்யூட்!

அடுத்த கட்டுரைக்கு