Published:Updated:

ஃபேஸ்புக் நட்பால் 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை!

ஜெ.முருகன்
ஃபேஸ்புக் நட்பால் 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை!
ஃபேஸ்புக் நட்பால் 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை!
ஃபேஸ்புக் நட்பால் 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை!

ஃபேஸ்புக்மூலம் நட்பாகப் பழகிய சிறுமியை, காதலிப்பதுபோல  நடித்து, வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில், எட்டாம் வகுப்பு படித்துவந்த 13 வயது சிறுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த 21 வயது வாலிபருக்கும் ஃபேஸ்புக்மூலம் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறிய நிலையில், கடந்த 19-ஆம் தேதி தன் காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார் அந்தச் சிறுமி. மகள் மாயமானதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் போலீஸார் சிறுமியைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சிறுமியின் ஒரு பவுன் நகையை விற்று சென்னைக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் இருவரும் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். அங்கு, அந்தச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த அந்த வாலிபர், அங்கிருந்து தப்பி திருப்பூருக்குச் சென்றிருக்கிறார்.

அறையில் தனியாக அழுதுகொண்டிருந்த சிறுமியை லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரனும் பாலியல் பலாத்காரம்செய்ய முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பித்து  திருப்பூருக்கு வந்த சிறுமி, தன் பெற்றோர்களிடம் நடந்தவற்றை அழுதுகொண்டே தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, திருப்பூரில் பதுங்கியிருந்த அந்த வாலிபரைக் கைதுசெய்த போலீஸார், தலைமறைவான புதுச்சேரி லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரனைத் தேடிவருகின்றனர்.