Election bannerElection banner
Published:Updated:

வீட்டு வேலைக்கு பணியாளர் வைத்துக்கொள்வதில் தயக்கம் வேண்டாம் பெண்களே...

வீட்டு வேலைக்கு பணியாளர் வைத்துக்கொள்வதில் தயக்கம் வேண்டாம் பெண்களே...
வீட்டு வேலைக்கு பணியாளர் வைத்துக்கொள்வதில் தயக்கம் வேண்டாம் பெண்களே...

வீட்டு வேலைக்கு பணியாளர் வைத்துக்கொள்வதில் தயக்கம் வேண்டாம் பெண்களே...

கோவில், திருமண வீடு... போன்ற இடங்களில் பெண்கள் பேசிக்கொள்ளும்போது, 'வீட்டுல போட்டது போட்டப்படி அப்படியே வந்துட்டேன்' என்ற வரி வராமல் இருக்காது. வீட்டு வேலைகள் என்றாலே அவை பெண்தான் பார்க்க வேண்டும் எனும் எழுதப்படாத சட்டம் ஒன்று இருக்கிறது. அம்மா, மனைவி, சகோதரி, மகள் என தன்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் மீது அன்பும் மரியாதையும் அதிகளவில் வைத்திருக்கும் ஆண்கள்கூட வீட்டு வேலைகள் பார்ப்பதற்கு முழுமையாக முன் வருவதில்லை. வீட்டிலுள்ள பெண்களுக்கு உடல்நிலை சரியில்லை அல்லது அவர்கள் வெளியூர் சென்றிருந்தாலோ ஆண்கள் ஓரிரு வேளைகள் சமைப்பார்கள் அவ்வளவுதான்.

எழுத்தாளர் ஜீவசுந்தரி பாலனுடன் ஒரு சந்திப்பின்போது, 'வீட்டு வேலைப்பார்ப்பதற்கு ஆட்களை வைத்துக்கொள்ள பல பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர். அது தேவையற்றது' என்றார். அதுகுறித்து மேலதிகமாக கேட்டபோது,

"பொதுவாக, எந்தவோர் உழைப்புக்கும் மதிப்பும் ஊதியமும் அவசியம். ஆனால், நமது வீடுகளில் பெண்கள் உழைப்பது ஊதியம் கொடுக்கப்படுகிறதா... அதை விடுங்கள். அந்த உழைப்பையும் அதற்கு அவர்கள் அளிக்கும் நேரத்தையும் மற்றவர்கள் உணர்ந்துகொண்டிருக்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது. துணி துவைக்க வாஷிங் மிஷின், அரைப்பதற்கு மிக்ஸி, கிரைண்டர் என வீட்டு வேலைகளைச் சுலபமாக்கும் கருவிகள் வீட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், அவற்றை இயக்கும் வேலையைக் கூட ஆண்கள் எடுத்துக்கொள்வது கிடையாது. அலுவலகம் சென்று முடித்து வந்தாலும் பெண்களே அந்த வேலைகளைச் செய்ய வேண்டும். வீட்டு வேலைகளை ஆண்கள் செய்யலாமே என்பதை வெளியிலிருந்து ஒருவர் வந்து சொல்ல வேண்டுமா என்ன?

புத்தகங்கள் படிக்கிற, எழுதுகிற பெண் ஒருவர் இருக்கிறார் என்றால், வீட்டு வேலைகள் அவரின் பெரும் நேரத்தைத் தின்றுவிடும். உதாரணத்துக்கு என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு பெரிய அளவில் வருமானம் இல்லை. ஆனாலும் எங்கள் வீட்டு வேலைக்கு என பணியாளர் ஒருவர் இருக்கிறார். இதில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, எனக்கான நேரம் கிடைப்பதால் நான் முன்நகர வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிற துறையில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடிகிறது. அடுத்தது, ஒருவரின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கிறது. என் வீட்டில் பணிபுரிபவரின் சம்பளத்தின் ஒரு பகுதியை அவருக்கு வங்கி கணக்குத் தொடங்கி அதில் சேமித்து வைக்கிறேன். ஏனெனில், எவ்வளவு பணம் இருந்தாலும் ஏதேனும் ஒரு செலவு செய்து விடலாம். அடுத்து, இவரின் சம்பளத்தை முழுமையாக பெற்றுக்கொண்டு விடலாம் என்பதால், அவ்வாறு செய்துவருகிறேன்.

இதுபோல, பல துறைகளில் ஆர்வமிருக்கும் பெண்கள் ஏராளம் இருக்கிறார்கள். ஓவியம் வரையத் தெரிந்தவர்கள், பாட்டு பாடுதல், நடனம் ஆடுதல்... என பல திறமைகளைக் கொண்ட பெண்கள் அதற்கான சரியான நேரம் ஒதுக்குவதில்லை. அப்படி ஒதுக்கப்பட முடியாத நேரத்தின் பெரும் பகுதி வீட்டு வேலைகளைத்தான் செய்துகொண்டிருக்கின்றனர். அந்த நேரம் பெண்களுக்கு முழுமையாக கிடைக்க வீட்டு வேலை செய்தவற்கு ஒரு நபரை நியமிப்பதில் எந்தத் தயக்கமும் காட்டக்கூடாது" என்றார் ஜீவசுந்தரி பாலன்.

பெண்கள் தங்களின் சுய கால்களில் நிற்பதற்கு கல்வி கிடைத்ததைப் போலவே, தனது திறமையினால் உலகைத் திரும்பிப் பார்க்க தொடர்முயற்சியும் பயிற்சியும் தேவை. அதற்காக முன்னெடுக்கும் விஷயங்களில் தயக்கமே கூடாது. சின்ன தயக்கமே பெரிய பின்னடைவுக்கு அழைத்துச் செல்லக்கூடும்.

தங்கள் கனவுகளை, நனவுகளாக்க பெண்களின் முயற்சிகள் வெல்லட்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு