Election bannerElection banner
Published:Updated:

இனோவா க்ரிஸ்டா டூரிங் ஸ்போர்ட்ஸ் எடிஷன் - இன்று அறிமுகம்!

இந்தோனேஷியாவில், 'Venturer' என்ற பெயரில் விற்பனையாகும் இனோவா க்ரிஸ்டாவின் டூரிங் ஸ்போர்ட்ஸ் எடிஷனை, இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது டொயோட்டா. வழக்கமான இனோவா க்ரிஸ்டாவுடன் ஒப்பிடும்போது, டூரிங் ஸ்போர்ட்ஸ் எடிஷனின் தோற்றத்தில் கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், காரில் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை!

இனோவா க்ரிஸ்டா அறிமுகமாகி, சரியாக ஓர் ஆண்டு நிறைவடைந்துவிட்டது. பழைய மாடலைவிட இதன் விலை அதிகமாக இருந்தாலும், வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவைப் பெற்றிருக்கிறது இந்த பிரிமியம் எம்பிவி. எனவே, அதைக் கொண்டாடும் விதமாகவே, இந்த டூரிங் ஸ்போர்ட் எடிஷனின் அறிமுகம் பார்க்கப்படுகிறது.

இனோவா க்ரிஸ்டா டூரிங் ஸ்போர்ட்ஸ் எடிஷன் -  இன்று அறிமுகம்!

காரின் வெளிப்புறத்தில், அதாவது முன்பக்க - பின்பக்க பம்பர், சைடு ஸ்கர்ட்ஸ், வீல் ஆர்ச்களில், க்ரோம் உடனான கறுப்பு நிற பாடி க்ளாடிங் இடம்பெற்றுள்ளது. மேலும் க்ரில், ரியர்வியூ மிரர் போன்ற பல இடங்களில் க்ரோம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 16 இன்ச் அலாய் வீல் (205/65 R16)  கறுப்பு நிறத்துக்கு மாறியுள்ளன. காரின் உட்புறத்தில், 6 சீட்களில் கறுப்பு லெதர் பொருத்தப்பட்டுள்ளது.

இதனுடன், ஸ்பெஷலான ஃப்ளோர் மேட்டும் உண்டு.  ZX எனும் டாப் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காரின் இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாறுதலும் இல்லை. என்றாலும், ‘Wine Red’ - 'Super White' எனும் இரு புதிய கலர் ஆப்ஷன்கள் புதிது. வழக்கமான இனோவாவுடன் ஒப்பிடும்போது, டூரிங் ஸ்போர்ட் எடிஷனின் விலை, சுமார் 60 - 80 ஆயிரம் ரூபாய் அதிகம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு