Published:Updated:

‘திக் திக் திங்களை‘ வரவேற்போம் - #MondayBlues #MondayMotivation

‘திக் திக் திங்களை‘ வரவேற்போம் - #MondayBlues #MondayMotivation
‘திக் திக் திங்களை‘ வரவேற்போம் - #MondayBlues #MondayMotivation

‘திக் திக் திங்களை‘ வரவேற்போம் - #MondayBlues #MondayMotivation

திங்கள்கிழமையைப் பற்றிக் குறிப்பிடும்போது இன்றைய இளைஞர்கள் 'திக் திக் திங்கள்' என்றே சமூக ஊடகங்களில் குறிப்பிடுகிறார்கள். வெள்ளிக்கிழமை மாலையில் என்ன மனநிலையில் அலுவலகத்திலிருந்து கிளம்பினீர்களோ, அதே மனநிலையில் திங்கள்கிழமை காலையில் இருக்க முடியாதுதான். ஆனால், திங்கள் அப்படியொன்றும் பயப்படவேண்டிய நாள் அல்ல. காரணம், ஆயிரக்கணக்கான திங்கள்கிழமைகளைக் கடந்துதான் இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் வந்திருப்பீர்கள். வேலை நாள்களில் முதல் நாளாக வரும் திங்களை நினைத்தால் வரும் சோர்வு மனநிலைக்கு 'மண்டே ப்ளூஸ்' என்று பெயர்.  இந்த 'மண்டே ப்ளூஸ்' #MondayBlues  மனநிலையை ரொம்ப ஈஸியாகக் கடப்பதற்கு சில டிப்ஸ்...

பாயின்ட் நம்பர் 1: "என்னது இன்றைக்குத் திங்களா? மறுபடியும் மொதயிருந்தா..." என உங்கள் மைண்ட்வாய்ஸ் வடிவேல் குரலில் அலறுகிறதா? கடந்த இரண்டு நாள்களாக நீங்கள் ஓய்வில் இருந்துள்ளீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இந்த மைண்ட்வாய்ஸ் எப்போதாவது ஒருமுறை கேட்டால் பரவாயில்லை; ஒவ்வொரு திங்களும் கேட்கத் தொடங்கினால் பிரச்னை திங்களில் அல்ல, உங்களிடம்தான். முதலில் உங்களுக்குப் பிடித்த வேலையை,உங்களுக்கு எது தெரியுமோ அந்த வேலையைச் செய்யத் தொடங்குங்கள். தேவையற்ற கமிட்மென்ட்டோ அல்லது சம்பந்தமே இல்லாத வேலையில் உள்ளவர்களுக்குத்தான் இப்படியான வெறுப்பு, திங்களை நினைத்து வரும். 

பாயின்ட் நம்பர் 2: உங்கள் அலுவலகம் உங்களுக்கு ஏற்றபடி இருக்கிறதா என யோசித்துக்கொள்ளுங்கள். உடன் பணியாற்றும் நபரை எதிர்கொள்வதோ அல்லது உங்கள் மேலதிகாரியை எதிர்கொள்வதோ சிக்கலாக இருந்தால், இந்த மனநிலை உருவாகிறது என்கிறது அண்மைய ஆய்வு ஒன்று. 

பாயின்ட் நம்பர் 3: வெள்ளி மதியத்தில் திங்களுக்கான டாஸ்கில் ஏதாவது ஒன்றை முடித்து வைத்துவிடுங்கள்.  வார இறுதியில் கொண்டாட்டத்துக்குத் தயாராவதைவிட முன்கூட்டியே திங்களுக்குத் தயாராகிவிடுவது சிறப்பு. திங்கள்கிழமை வேலையை வெள்ளிக்கிழமை அன்றே முடித்து வைத்துவிடுவது ஸ்மைலியுடன் அடுத்த வாரத்தைத் தொடங்க உதவும். 


பாயின்ட் நம்பர் 4: அடுத்த வாரம் செய்யவேண்டிய வேலைகளின் பட்டியலைப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்தமான, உங்கள் மனம் விரும்பும் மூன்று டாஸ்குகளை திங்கள் அன்று செய்வதற்கு எனத்  தேர்வுசெய்யுங்கள். காலை அலுவலகம் சென்றவுடன் செய்ய மனதுக்குப் பிடித்தமான வேலைகள் இருப்பது #MondayBlues-ஐ வெல்ல சரியான வழி.  அதேபோல பிடித்தமான வேலை அந்தப் பட்டியலில் ஒன்றுகூட இல்லையா? அப்படியெனில்,  உடனடியாக வேறு வேலை தேடும் நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அவர்களாக அனுப்பும் முன் வேலை தேடிக்கொள்வது நல்லது. 

பாயின்ட் நம்பர் 5: சிரிப்பும் இசையும்போல் செம டானிக் தரும் விஷயம் எதுவும் இல்லை. கடந்த 2011-ம் ஆண்டு இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவின்படி, திங்கள் அன்று  ஒவ்வொரு பணியாளரும் தங்களின் முதல் சிரிப்பை 11 மணிக்குத்தான் வெளிப்படுத்துகின்றனராம். சிரிப்பைப்போல் மனதை ரிலாக்ஸ் செய்யும் மாமருந்து எதுவுமே இல்லை. உடன் வேலை செய்பவர்களைப் பார்த்து நாம் சிந்தும் ஒரு புன்னகை, அவருக்கும் நமக்கும் டானிக். காலையில் எழுந்தவுடனே மியூசிக் சேனலை ஒலிக்கவிடுங்கள். பயணத்தின்போதும் அலுவலகத்திலும் காதுகளில் ஹெட்போன் ஒலிக்கட்டும்.

“ ‘பிரெஞ்ச் டைம்' எனச் சொல்லப்படும் 11 மணி வாக்கில் ஒரு டம்ளர் மோர் அல்லது லஸ்ஸி உங்களின் ஒட்டுமொத்த மூடையும் மாற்றும் தன்மை படைத்தது” என்கின்றனர் பயோலாஜிஸ்ட்கள். 

அடுத்த கட்டுரைக்கு