பிரீமியம் ஸ்டோரி
##~##

• காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, துறையூர் சௌடாம்பிகா கல்வி நிறுவனங்கள் சார்பாக, ஓர் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. சௌடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எஸ்.ஆர்.எம்.பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.இ.), முசிறி செல்லம்மாள் வித்யாஸ்ரம் (சி.பி.எஸ்.இ.), திருச்சி, கிராப்பட்டி செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருச்சி, வேங்கூர் செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  உள்ளிட்ட ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த 2,955 மாணவர்கள், மகாத்மா காந்தி வேடத்தில் பள்ளி வளாகத்தில் அணிவகுத்து நின்றார்கள். மைதானம் எங்கும் காந்திகளாகத் தெரிந்த நிமிடங்கள் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் உலக கின்னஸ் குழுவின் நடுவர், மார்க்மெக்கன்லி பங்கேற்று, கின்னஸ் வெற்றிச் செய்தியை அறிவித்தபோது அரங்கமே அதிர்ந்தது.

பென் டிரைவ் !

-சி.ஆனந்தகுமார் படம்: என்.ஜி.மணிகண்டன்

• நவராத்திரியை முன்னிட்டு, சென்னை  ராஜரத்தினம் ஹாலில் 'மஹம் என்டர்பிரைசஸ்’ என்ற கலை மற்றும் ஊடக நிறுவனம், 'அக்டோபர் ஆலாபனை’ என்ற  நிகழ்ச்சியை நடத்தியது. அதில், 'கர்னாடக இசை, பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம், வில்லுப்பாட்டு’ போன்ற நிகழ்ச்சிகளில், 8 முதல் 18 வயது வரையிலான கலைஞர்கள் பங்குபெற்று, பார்வையாளர்களைக் கவர்ந்தனர். ''கலைஞர்களை ஊக்கப்படுத்துவதோடு, நமது  பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசெல்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்'' என்றார்கள் மஹம் நிர்வாகிகள்.

பென் டிரைவ் !

• சிங்கப்பூரைச் சேர்ந்தவர் ஜியான் யாங் (JIAN YANG) இவரின் வயது 33. பொம்மைகள் சேகரிப்பதில் ஆர்வம் மிக்கவர். தனது 13-வது வயதில் முதல் பொம்மையைச் சேகரிக்கத் தொடங்கினார். இதுவரை 6,000 பார்பி பொம்மைகள், மற்ற வகைப் பொம்மைகள் 3,000 என சுமார் 9,000 பொம்மைகளைச் சேகரித்துள்ளார். இதற்கு தன் நண்பர்களின் ஒத்துழைப்பும் காரணம் என்ற யாங், இதற்காக செய்திருக்கும் செலவு, இந்திய மதிப்பில் 2.62 கோடி ரூபாய்.

பென் டிரைவ் !

• ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹெலிங்கா (Andrew hellinga), சமீபத்தில் 337 கிலோமீட்டர் தூரத்தை 24 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்து, சாதனை படைத்திருக்கிறார். அதுவும் எப்படி? சைக்கிளில் பின்னோக்கி அமர்ந்தபடி ஓட்டிச்சென்று இந்தத் தூரத்தைக் கடந்தார். தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான, ஜாம்பியா நாட்டில் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு நிதி திரட்டவே, இப்படி ஒரு வித்தியாசமான சாதனையைச் செய்திருக்கிறார் ஆண்ட்ரூ.

பென் டிரைவ் !

• சமீபத்தில் சென்னை, மயிலாப்பூரில் மாற்றுத்திறனாளிப் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில், தமிழகம் முழுவதிலும் இருக்கும் 25 மாற்றுத்திறனாளிப் பள்ளிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுத் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மாற்றுத்திறன் மாணவர்களை ஊக்கப்படுத்தவும், மக்களிடையே மாற்றுத்திறனாளிகள் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் இந்தப் போட்டி நான்கு வருடங்களாக தொடர்ந்து நடத்தப்படுகிறது.

பென் டிரைவ் !

• சாகச நாயகன் சூப்பர்மேனுக்கு 75 வயது. இதைச் சிறப்பிக்கும் வகையில், கனடாவில் புதிய நாணயம் வெளியாகிறது. அந்த நாணயத்தில், சூப்பர்மேன் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். மொத்தம் 2,000 நாணயங்கள் மட்டுமே வெளியிடப்படும். கனடாவைச் சேர்ந்த ஜோ ஷஸ்டர் (JOE SHUSTER) மற்றும் ஜெர்ரி ஸீகெல் (JERRY SIEGEL) ஆகியோர் 1938-ம் ஆண்டு 'சூப்பர்மேன்’ கதாபாத்திரத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

பென் டிரைவ் !
பென் டிரைவ் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு